உரைக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறதேயன்றி எழுதப்பட்டதென்று சொல்லப்படவில்லை.

அன்பான என் சகோதர சொந்தாங்களே கிறிஸ்துவில் என் உடன்பிறப்புக்களே உங்கள் நிமித்தமாக நம் தேவனாகிய கர்த்ரை ஸ்தோத்தரிக்கிறேன்.

இயேசுகிறிஸ்து சொன்ன இந்த வசனம் (மத்தேயு  27: 9 10)   எரேமியா தீர்க்க தரிசன புத்தகத்தில்  இல்லை என்று முசுலீம் நண்பர்கள் தேவ திட்டத்தைக் குறை கூறி குற்றம்சாட்டுகிறார்கள். இது மட்டுமல்லாமல்  இப்படிப்பட்ட காரணங்களினால்தான் பரிசுத்த வேதாகமம் பாதுகாக்கப்படவில்லை என்கிறோம் என்றறதொரு குற்றச்சாட்டையும் முசுலீம்கள் அழுத்தமாய் சொல்லுகிறார்கள்.

இவர்களுடைய வாதத்தை நான் காணும்போதெல்லாம் அறியாமையில் பிதற்றுகிறார்கள். என்று நினைத்துக் கொள்வேன். நநமக்கு அறிமுகமான நண்பர் ஒரவர் நம்மிடம்  இதற்கு  பதில் கொடுங்களேன்  ப்ளீஸ் ! என்கிறார் .

பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து குற்றம் சாட்டும் முசுலீம் நண்பர்கள் எந்தவொரு நாளிலும் வேதாகமத்தை தேடி வாசிப்பதில்ல என்பதுமட்டுமல்ல அவர்கள் சாதாரணமாய் படித்துவிட்டு இந்த வசனம் இங்கு இல்லையே எனக் கண்டுபிடிப்பதும் இல்லை. மாறாக

பலஹீனமான கிறிஸ்தவர்களை குழப்பும் நோக்கத்துடன் பரிசுத்த வேதாகமத்தை குற்றப்படுத்தி குறைகூறி அதினால்ல் முசுலீம்களிடையே லாபமடைவதற்காகவென்று முசுலீம்களிலேயே சிலர் வேதப் புரட்டர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிலருடைய எழுத்துக்களை பரவசமாக படித்துவிட்டுதான் ஒருசில பரிதாபத்திற்குரிய முசுலீம்கள் இங்கு வந்து திறமை காட்டுகிறோம் பேர்வழி என்று  நம்மிடம் வந்து வேடிக்கi காட்டி நிற்கிறார்கள்.

இந்த பரிதாபமான பக்தர்களும் முசலீம்களான காலிப் பாத்திரங்களுடைய அறியாமையை போக்க முயற்சிப்போம்.

இணையத்தில் வழமாய் வலம்வரும் முசுலீம் நண்பர்கள் எவரோ ஒருவரான முசுலீம் பிரசாரகர் எழுதின பொய்யான தகவல்களைப் படித்துவிட்டு அதை அப்படியே உண்மை என நம்பிக்கொண்டு  மத்தேயு 27: 9 10 என்பது இயேசு சொன்ன வசனம் என ஆங்காங்கே சுற்றிசுற்றி வந்து எழுதிக் கொண்டு திரிகிறார்கள்.

அந்த வசனத்தை அனைவரும் கவனியுங்கள் மத்தேயு 27: 
9. இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து
10. கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
11. இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்@ தேசாதிபதி அவரை நோக்கி: நீ ய+தருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

பரிசுத்த வேதாகமத்தை படிக்கிற கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல கல்வியறிவுள்ள அறிவாளிகள் இது இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவரான மத்தேயுவால் எழுதப்பட்டது. இதை மத்தேயு நிகழ்ந்தவைகளை நேரடியாகப் பார்த்து எழுதியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்கிறார்கள். நீங்களும் புரிந்து கொண்டீர்கள்தானே..?

எனவே முசுலீம் எழுத்தாளர்கள்; தங்கள் அபிமானிகளை ஏமாற்றப் பயண்படுத்தப்பட்ட அடிப்படைக் குற்றச்சாட்டே ஆட்டம் காண்கிறது.

இதை வாசிக்கிற நண்பர்களுக்குச் சொல்லுகிறேன். ஒருவேளை உங்களில் யாருக்காவது சர்ந்தர்ப்ப சூழ்நிலை நிமித்தமாக முசுலீம் பிரச்சாரகர்களுடைய பேச்சுக்களை கவனிக்கிற அல்லது படிக்கிற நிலை ஏற்படுமானால்... அவர்களை தவிர்த்துவிடுங்கள் அல்லது (இது முசுலீம் நண்பர்களுக்கும் பொருந்தும்) அவர்களுடைய பேச்சு அல்லது எழுத்துக்கள் முழுவதையும் கூர்ந்து கவனியுங்கள் போதும்.

பரிசுத்த வேதாகமமும் அதைத்தான் நமக்கு போதிக்கிறது. “ என் பிரியமான சகோதரரே யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும் பேசுகிறதற்குப் பொறுமையாயும் கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்” (யாக் 1: 19) எனவே நீங்கள் அவர்களுடைய வார்த்தைகளை நன்கு கவனித்தீர்களானால் அவர்களுடை வார்த்தைகளிலேயே அவர்களுடைய அறியாமையும் அபத்தமும் கண்டிப்பாக எட்டிப் பார்க்கும் நம்மைப் பார்த்து பல்லைக்காட்டும். அதேநேரம்

அதை பேசுகிறவரோ எழுதுகிறவரோ அசராமல் சீரியஸாக முகத்தில் வேறு எந்த ரியாக்ஸனும் இல்லாமல் சீரியஸாக தான் பேசுவதெல்லாம் உண்மைபோல பேசிக் கொண்டிருப்பார். காரணம்.. அவரும் முன்னொரு நாளில் கூர்ந்து கவனிக்காமல் ஏமாந்தவர்தானே..!

இவர்களுடைய தந்திரத்தின் வேர் இன்று நேற்று துவங்கினதோ அல்லது 1348 வருடங்களுக்கு முன்பு அதாவது.. குர்-ஆன் வெளியிடப்பட்ட கிபி 652 களில் தோன்றி துவங்கியதுமல்ல

நமக்கு பரிசுத்த வேதாகமம் அடையாளம் காட்டுகிறபடி இந்த பூமி சீரமைக்கப்படுவதற்கு முன்பாகவே தோன்றிவிட்டது. என்றாலும்

பிசாசானவனுக்கே உரிய தந்திர செயல்பாடுகளை பிசாசானவன் முதல் மனுஷியாகிய ஏவாளிடத்தில் சர்ப்பத்தின் வழியாக முதல் முதலாக வாலை ஆட்டித் துவக்கி வைத்தான். இந்த சம்பவத்தை ஆதி 3- ல் நாம் பார்க்கிறோம். அங்கே சர்ப்பம் தன்னுடைய தந்திரமான பேச்சினால்.... ஏமாற்றினான் எப்படியெனில்....

தேவனாகி கர்த்தர் மனிதருக்காக மனிதனிடம் சில காலங்களுக்கு முன்னதாகவே சொன்ன வார்த்தைகளை வஞ்சிக்கப்பட்ட சர்ப்பம் சற்று முன்பின் மாற்றி அமைத்து அழகில்லாத தன்னுடைய வார்த்தைகளை அழகாக்கி காண்பித்து ஏவாளை ஏமாற்றினான். அவனுடைய அதேவிதமான செயல்பாடுகள் இப்போது

முசுலீம்களாக சமூகத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதுடன் பொய்யான ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓலமிடும் கூலிக்குப் பொருத்தப்பட்ட பரிதாபமான கோழை மனிதர்களால் நம்மிடையே செயலாக்க முயற்சிக்கப்படுகிறது.

அவர்கள் சுட்டிக்காட்டுகிற வசனத்தை கவனியுங்கள்

எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

நண்பர்களை தயவாய் வேண்டுகிறேன். இந்த வார்த்தையை நன்றாக கவனியுங்கள். இந்த வசனம். உரைக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறதேயன்றி எழுதப்பட்டதென்று சொல்லப்படவில்லை. அப்படியானால்... இங்கே ஒருசிலர் இப்படிக் கேள்வி எழுப்பக்கூடும். அவரால் உரைக்கப்பட்டது ஏன் எழுதப்படாமல் போயிற்று..? என்று.

அதே வசனத்தை சகரியாவின் மூலமாக கர்த்தர் வெளிப்படுத்தியிருக்கிறாரே...!. அதாவது கர்த்தர் தம்முடைய செய்திகளை தீர்க்கதரிசிகள் மூலமாக ஜனங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 

எரே 1: 1- ல் பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் என்று பதிவு செய்யப்பட்டுள்ளதை நாம் அங்கே படிக்கிறோம். ஆக தேவனாகிய கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாக பங்கு பங்காக வகை வகையாக தமது ஜனங்களுக்கு தமது செய்தியைச் சொல்லுகிறார்.

எனவே எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டதை இஸ்ரவேல் ஜனங்கள் நன்கு அறிந்திருந்தார்கள். வழிவழியாக இஸ்ரவேல் ஜனங்களிடத்திலே இவ்வசனங்களைச் சொல்லி எச்சரித்து எப்பொழுதும் விழிப்பாயிருக்கும்படி கட்டளையிட்டார்கள். கற்பிக்கப்பட்டார்கள். எரேமியாவினால் உரைக்கப்பட்ட அதே வார்த்தைகள் சகரியாவின் மூலம் வெளிப்பட்டு அந்த வார்த்தைகள் தோள் சுருள்களில் வடிக்கப்பட்டபோது எழுதப்பட்டபோது (சகரி 11: 12 13) இஸ்ரவேலிலே மாபெரும் மகிழ்ச்சி.

கர்த்தர் நம்மேல் கவனமாயிருக்கிறார். இஸ்ரவேலிலே மிகவும் மதிக்கப்படத்தக்க மேசியா வெளிப்படப்போகிறார் என்பதை அறிந்து கொண்டார்கள். அங்கும் இங்கும் யாருக்கும் சந்தேகமுமில்லை குழப்பமுமில்லை தேவனுடைய நாமம் மகிமைப்படுத்தப்படுகிறது.

தேவனுடைய திர்க்கதரிசியான எரேமியாவினால் உரைக்கப்பட்டு அதே தேவனுடைய தீர்க்கதரிசி சகரியாவின் மூலம் மீன்டும் அறிவிக்கப்பட்டதும் எழுதப்பட்டதுமாக இருந்தபோதும்..
 
எரேமியாமினால் உரைக்கப்பட்டதென்பதை யாரும் மறந்துவிடவில்லை மறைத்துவிடவுமில்லை.

கிறிஸ்தவ மார்க்கத்தின் நிழலாட்டமான யூதமார்க்கம் அன்றும் இன்றும் தேவசித்தத்தின்படியே கற்பிக்கப்பட்டும் கடைபிடிக்கப்பட்டும் வருகிறது.

எனவே நண்பர்களே வழி கெடுப்பவருடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்ளுங்கள். பரிசுத்த வேதாகம வசனங்களை வாசியுங்கள் தியாணியுங்கள் அப்படியே கடைபிடியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?