காவி உடைய கழற்றி வீசிவிட்டு உண்மையாக.....,

அன்பான சகோதர, சகோதரிகளே அன்றும் இன்றும் பெரும்பாலான சாதுக்கள் காவி உடை பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் ஊழியர்களில்கூட குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், மறைந்த சாது சுந்தர்சிங் அவர்கள் தமிழகத்தில் சாது ஏசுதாசையா சாது தாசையா மற்றும் சாது செல்லப்பா போன்றோரையும் இன்னும் சிலரையும் காவி அணிந்த அல்லது அணிந்திருந்த சாதுக்கள் என்று சொல்லலாம். இவர்கள் கனத்துக்குரியவர்கள். இவர்களுடைய ஊழியம் சத்தியத்தின்படி மிக நேர்த்தியாக இருந்தது. என்பதை ஓரளவுக்கு அறிவேன். என்றாலும்...., 

கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைக்கத் தகுதியற்றவர்களானாலும் துனிகரமாக தங்களைத் தாங்களே கிறிஸ்தவர்களென்று அழைத்துக் கொள்ளுகிறவர்களில் சிலர் கூட காவி உடை அணிந்து வலம் வருகின்றனர். 

 

கிறிஸ்தவர்களோ இந்துக்களோ அல்லது பிற ஜனங்களோ காவி என்றாலே இந்துக்கள் எனச் சொல்லப்டுகிறவர்களில் இருந்தே துவங்குகிறது என்றாலும் காவி உடை பற்றி அறிய ஆவல் கொண்டேன். ஆர்வமுடன் படித்து அறிந்த சில தகவல்களை நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். இந்த நாட்களுக்கு நமக்கு அவசியமாக இருக்கிறது என்றே கருதுகிறேன்.

காவி நிறம் என்பது மஞ்சள் சிவப்பு ஆகிய இரண்டும் கலந்த கலவை ஆகும். பார்ப்பன மத அறிஞர்கள் மஞ்சள் என்பதை குரு க்ரஹமாகவும் சிவப்பு என்பதை செவ்வாய் க்ரஹம் என்றும் நம்புகின்றனர். இப்படியாக இவை இரண்டும் சேர்ந்த கலவையே காவி நிறமாகிறது.

காவி உடை உடுத்துவதில் மிகுந்த கட்டுப்பாடுகள் உண்டு. பெரும்பாலும் ஒரு உடை மட்டுமே வைத்திருக்க வேண்டும். அது கோமணமாக இருக்குமானால் மிகவும் உயர்வாகக் கருதப்படுவார். பட்டிணத்தார் பற்றிப் படித்தவர்களுக்கு இந்த செய்தி சுலபமாகப் புரியும்.

இந்த காவி  நிறத்துக்கு அப்படி என்ன சிறப்புத்தன்மை?

ஒருவர் தொடர்ந்து வெள்ளை நிற பனியன் அணியும் பழக்கமுள்ளவராக இருப்பாரானால் அவர் தன்னுடைய பனியனைக் கழட்டிய பின்பு அவரது சருமத்தில் வெள்ளை நிறமாக பனியன் போன்று தடம் இருக்கும். அதற்குக் காரணம் கிரஹங்களிலிருந்து புறப்படும் கதிர் வீச்சு அந்த துணி வழியாக உடலுக்கு ஊடுருவும்போது அந்த துணி என்ன நிறமோ அந்த நிறத்தை தோலில் உண்டாகுகிறது" :ஓரளவுக்குத்தான்" !! அதுபோல

இந்த காவித்துணி வழியாக ஊடுருவும் க்ரஹ துணி சாதுவின் உடலில் ஞானமார்க்கத்தை உண்டுபண்ண வேண்டுமாம். ஓரளவுக்காவது அப்படியில்லையானால் காவி உடை அணிந்து எந்தப் பயணுமில்லை என்பது, 

அறிஞர்களின் முடிவு சாது என்பவர் ஒரே ஊரில் தங்கவேக்கூடாதாம். நாடோடியாக திரிந்து பல்வேறு புண்ணியத்தளங்களுக்குச் சென்று தவமிருக்க வேண்டும் இறைவனை தரிசிப்பதற்காக. காவித்துணி அணிந்த சாது தங்குமிடங்களில் தரையில் படுப்பதும் தாழ்மையாய் நடப்பதும் மிகமிக அவசியம். அதுமட்டுமல்ல...

காவி அணிந்து சாதுவாக இருக்க விரும்பகிறவர் உணவு வகைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும். அதாவது உப்பு வெங்காயம் பூண்டு பூசணிக்காய் பீர்க்கங்காய் முருங்கைக்காய் மற்றும் இறைச்சி மட்டுமல்ல..., கறிமசாலா கலந்த உணவுகளையும் இன்னும் அநேக உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

அந்தக்கால முனிவர்கள் மரவுரி தரித்து காடுகளுக்குள் சென்று இலை தழைகளையும் கிழங்கு வகைகளையும் மட்டுமே உண்டு தவம் செய்தார்கள். இப்படிப்ட்ட உணவு உண்ட அவர்களிலும் சில சாதுக்களும் முனிவர்களும் பெண்கள் பின்னேச் சற்றித்திரிந்து பின்பு திருந்தினார்கள். ஆகவே... காவி உடை அணிந்தால் அதற்க்கு தகுந்தாற்போல்தான் உணவு உட்கொள்ள வேண்டும்.

சாது எப்படி இருப்பார்? அல்லது எப்படி இருந்தால் அவர் சாது என அழைக்கப்பட முடியும்? என்ற வரை முறைகளை இந்து மதமென்று பார்ப்பனமதம் வகுத்துள்ளது... அதென்னவெனில்..

ஒட்டிய வயிறு குழிவிழுந்த கன்னம் உடைய சாதுவின் முகம் சவரம் செய்யப்படாமலும் இருக்க வேண்டுமாம். ஒருவேளை சவரம் பண்ண விரும்புவாரானால் தலை மற்றும் முகத்திலுள்ள மயிரையெல்லாம் மழித்துவிட்டு முழு மொட்டையோடு தோற்றமளிக்க வேண்டுமாம் அத்துடன் சாது என்பவர்..

எவரிடமும் பொன்னாகவும் பொருளாகவும் யாசகம் அல்லது காணிக்கை வாங்கக்கூடாது. சாப்பாடு கொடுத்தால் சாப்பிடலாம். அதுவும் கஞ்சியாக இருப்பதுதான் ஒழுங்கு. கராணம்..

சம்சாரிகளுடைய வீடுகளில் மஞ்சள் உப்பு பூண்டு... மற்றும் சாது சாப்பிடக்கூடாத பொருட்களை கலந்து சமைத்திருப்பார்கள். எனவே பழைய கஞ்சிதான் சாதுவுக்கு ஏற்றது. இதெயெல்லாம் கடைபிடிக்கிற சாதுவானவர் தன்னைத்தானே சாது என்று சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. மாறாக

இவன் நிலைக்கண்டு ஸாரி.. இவர் நிலைக்கண்டு இவர் சொல்லும் வழிகளிலெல்லாம் ஜனங்கள் சாதுஐயா என்றழைத்து உணவிடுவர்.

ஒருவேளை இதையெல்லாம் கடைபிடிக்க விரும்பாதவர் காவி உடைய கழற்றி வீசிவிட்டு உண்மையாக வாழலாம்.

பின்குறிப்பு:- காவி உடைக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்துக்களை கவருகிறோம் எனச் சொல்லி ஆர்வக்கோளறினால் காவி உடை அணிகின்றனர். நமக்கு பாதிப்பில்லை அணிந்து கொள்ளட்டும். அதே நேரம்.., 

அந்த காவி உடை பரிசுத்தமானது என்று கிறிஸ்தவ ஜனங்களுக்கு மத்தியிலே பேசுவது தவறு அப்படிப் பேசுகிறவன் தன்னுடைய அறியாமையினால் பிதற்றுகிறான் அல்லது எங்கேயோ திண்றதை இங்கு வந்து விஷமமாக கக்குகிறானேயன்றி வேறில்லை. அவனுடைய பேச்சில் அர்த்தம் எதுவும் இல்லை. ஆபத்து மட்டுமே இருக்கிறது.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?