நம்முடைய பின் சந்ததியை ஏமாற்றுகிறோமா..?

கிறிஸ்தவ ஊழியங்கள் என்ற பெயரில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் தங்களுடைய மூளையிலிருந்து பிறந்தவற்றை உபதேசங்களாக மாற்றி பணம் பிடுங்குகிற வேலையை துரிதமாக அல்ல... துனிகரமாகவே செய்து வருகின்றனர்.

இதை கேட்பதற்கு தேவனைத்தவிர யாருமில்லை என்பது இந்த துனிகரக்காரர்களுடைய நிலைப்பாடு. சத்தியத்தை போதிக்கும் ஊழியர்களும் சந்தடிகளுக்கு விலகி சாமான்யர்களாக வாழ ஆரம்பித்துவிட்டார்கள்.

சத்தியத்திற்கு விரோதமானவற்றை சத்தம்போட்டு எதிர்க்கிற ஊழியர்களுடைய சபையிலேயே எதிர்ப்புக் குரல்களை எழுப்புமளவிற்கு இந்த துனிகரக்காரர்களுடைய போதனை அபாரமாகத்தான் இருக்கிறது. எனவே

எல்லாருமே இவர்களுக்கு எதிரான கருத்துக்களை மற்றும் கன்டனக் குரல்களை அடக்கி வாசிக்க வேண்டியது அவசியமாகி விட்டது. உதாரணமாக..
பரிசுத்த வேதாகமத்திற்கு விரோதமான உபதேசங்களை துனிகரமாகப் பேசும் சாது செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார் மற்றும், மோகன் சி லாசரஸ் போன்றவர்களுடைய தவறுகளை அல்லது தவறான அனுகுமுறை மற்றும் அறிவிப்புகளை முகநூலி(Face Book)ல் நாம் சுட்டிக் காட்டுவதால் நண்பர்களில் அநேகருக்கு வருத்தம்.

முகநூலி(Face-Book)லும் தொலைபேசியிலும் என்னிடம் வருத்தம் தெரிவித்தவர்கள் அநேகர். நாம் இவர்களுடைய செய்கைகள் வேதத்திற்கு புறம்பாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் அதேநேரம்

நாமும் நம்முடைய நண்பர்களில் பலரும் இப்படிப்பட்ட செய்திகள் நிமித்தமாக தேவனை நோக்கி ஊக்கமாக ஜெபிக்கிறார்கள் என்பதையும் இங்கே நினைவுபுடுத்த விரும்புகிறேன்.

இந்த ஊழியர்களைப் பற்றி எனது நிலைப்பாடு என்ன? என்பதை நான் முன்னமே அறிவித்திருக்கிறேன். என்றாலும் மீன்டும் நினைவுபடுத்துகிறேன். இவர்கள் பெண்களை சீரழித்தார்களா? இல்லை தன்னைப் பெண் என்று சொல்லி ஏமாற்றினார்களா? இவர் சாதுவா? இல்லையா? என்பதை என்றைக்கும் நான் விவாதிக்கப் போவதில்லை.

அதேநேரம் இவர்களுடைய செயல்பாடுகளும் உபதேசமும் வேதவசனத்திற்கு புறம்பாக இருப்பதை சுட்டிக் காட்டுவது குற்றம் ஆகுமா? ஏனெனில் இவர்களது தவறான போதனைகளினால் கர்த்தருடைய ஜனம் வழிதப்பிப் போய்விடுமே...! அந்த ஆதங்கத்தில்தான்,  குற்றத்தை குற்றம்  என்று என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

நம்மை கண்டிக்கிற நமது நண்பர்கள் நம்முடைய பின் சந்ததிக்கு நாம் ஏதோ ஒருவகையில் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்பதை உணரமாட்டார்களா?

சரி அப்படி என்ன இவர்கள் அபாண்டமான காரியங்களை செய்துவிட்டார்கள்? எனக் கேள்வி எழுப்பக்கூடும். இதை சற்று விரிவாகவே காண்பது நல்லது என நினைக்கிறேன்.

கர்த்தர் சொன்னார் என்று யார்? எதைச்சொன்னாலும் அப்படியே நம்புகிறதற்கு கிறிஸ்தவஜனம் பழகிவிட்டதா? அல்லது பலஹீனப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுப்பவேண்டியது இன்றைய நாட்களில் நமக்கு அவசியமாகவே இருக்கிறது.

கிறிஸ்தவ பெயர் தாங்கிகளுடைய அட்டகாசத்தை கண்டு கொள்ளாமல் எவ்வித கேள்விகளும் கேட்காமல் அறிமுகமான ஜனங்களை இதுகுறித்து எச்சரிக்காமல் ஜெபம் செய்துகொண்டே இருந்து விடலாம். என்பது நண்பர்களுடைய கனிவான யோசனை. இது கேட்பதற்கு மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது.

4 பேருக்கும் குறைவானவர்கள் கூடி இருக்கும் அறைக்குள் நடக்கிற காரியங்களாக இருந்தால் அமைதியாக இருப்பது நல்லதுதான் நாம் ஏன் நாறடிக்க வேண்டுமென யோசிக்கலாம். ஆனாலும் வேதத்தின்படி அதுகூட தவறுதான். இவர்களோ ஒரே நாளில் பல கோடிக்கணக்கிலான தேவஜனங்களை ஊனப்படுத்துகிறார்களே என்ன செய்யலாம்?

அவர்களுடைய கற்பித்தலில் சில உதாரணங்கள். இவை வேதத்தின்படி சரிதானா? நண்பர்கள் விளக்குங்களேன்.


1.நடனமாடிக்கொண்டே கிருப :- 
(http://www.youtube.com/watch?v=heKH0oEJyAo)

வாழ்க்கையை சுற்றிலும் கிருபை வேண்டுமானால் சுற்றி சுற்றி நடனமாடிக்கொண்டே கிருப கிருப எனப்பாட வேண்டும் என்பது தவறான அறிவிப்பா? இல்லையா?
கொசுறு செய்தி:- கிருப கிருப- ன்னு நடனமாடிக்கிட்டே சுத்துனா வாழ்க்கையில இருக்கிற எரிகோக்கள் விழுந்துரும்!!!?


2. எக்காள அல்லேலூயா:- 
( http://www.youtube.com/watch?v=m62kh0haQJE )

ரெண்டு கையயும் வாயில வச்சுக்கிட்டு வானத்தை அண்ணார்ந்து பார்த்து எக்காளம் ஊதனும் அல்லே.... லூ.. .லூ... லூ... லூயா..! ன்னுதான் கர்த்தருக்கு மகிமை செலுத்தனும்.


3. சிங்கத்தைப் போல கர்ஜிக்கனும் :-
(http://www.youtube.com/watch?v=heKH0oEJyAo)

கிறிஸ்தவர்களெல்லாம் யூதராஜ சிங்கத்தின் குட்டிகள் எனவே நாம் (கிறிஸ்தவர்களெல்லாம்) கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல...! நாமும் கெர்ச்சிக்க வேண்டும்.

4. சினிமா ஸ்லோகத்தை புனிதப்படுத்தும் நிகழ்வு :-
(http://www.youtube.com/watch?v=Qpt_KTv7jy0)

ஓப் போடு என்பது இதுவரை நாம் கிறிஸ்தவத்தில் கேள்விப்படாத ஒன்று. சிலவருடங்களுக்கு முன்பு பிரபலமானதொரு சினிமாவின் மூலம் தமிழர்களுக்கெல்லாம் ஓப் போடு அறிமுகமானது. நமக்கெல்லாம் தெரியும்

நம்முடைய பிள்ளைகள் ஓப் போடு என்பது தவறு என கண்டித்தோம். தடுத்தோம் ஆனால் இன்று அது இந்த ஊழியர்களால் புனிதப்படுத்தப்பட்டுவிமட்து;. இன்று இதை நாம் சொல்வதன் மூலம் ஓப் போடுவதென்றால் ஓசன்னா என்று கற்பிக்கப்படுகிறது.



5. காணிக்கை என்றவுடன்:-
(http://www.youtube.com/watch?v=99nu_0WqHa4&feature=relmfu)

நம் கையை பார்க்க வேணடும். அதாவது விரலில் இருக்கும் மோதிரத்தை கழற்றிப் போடவேண்டும். வெளிநாடுகளில் இருப்பவர்கள் உங்கள் காசோலைகளில் உங்களுடைய எல்லா சேமிப்புகளையும் அதில் நிரப்பி அனுப்பித்தரணும். இந்த நாள்ல நீங்க அனுப்புகிறதை பரலோகம் நேரடியாக அங்கீகரிக்கப் போகிறது.


6. இயேசுகிறிஸ்து நமக்குள் வரவேண்டுமானால் :- 
( http://www.youtube.com/watch?v=PazjmeJ2F1U )

யூத ராஜசிங்கம் நமக்குள் வரவேண்டுமானால் யோம் கிப்பூர் (யூதர்களால் கடைபிடிக்கப்பட்ட நோன்புடனான காத்திருப்பு)  ஆரம்பமாக வேண்டும். அப்படி ஆரம்பிக்கப்படும்போது தேவனுடைய சிங்காசன அறை நமக்கு முன்பாக திறக்கப்பட்டிருக்கும் அங்கிருந்து தேவன் தனிப்பட்ட விதத்தில் நம்மை நோக்கிப் பார்ப்பார்.


இந்த நாளுக்கென்று நீங்கள் உங்கள் இருதயங்களை மிக விஷேசமான முறையில் ஆயத்தப்படுத்தி இருந்தால்...! இங்கிருந்து (அதாவது பிரசங்க மேடையிலிருந்து) யூதராஜசிங்கம் வீறு நடைபோட்டு உங்களிடத்தில் வருவதை உங்கள் ஆவிக்குரிய கண்கள் காணும். அவர் உங்களிடத்தில் வந்து உங்களை சந்திப்பார்.


ஆராதனை நேரத்தில் கர்த்தர் யூராஜசிங்கம் இயேசு சிங்கம் போல் என்னிடத்தில வருகிறதை நான் பார்த்தேன். அவர் வந்து என்னருகில் நின்று இதை ஜனங்களிடத்தில் சொல்லு என்று சொன்னார். என்னை சந்திக்க இவர்களை ஆயத்தப்படுத்து என்றார்.

இப்படி பரிசுத்த வேதாகமத்திற்கு விரோதமான உபதேசங்களை துனிகரமாகப் பேசும் இவர்கள் அறியாதவர்களிடம் பணம் பிடுங்குவதற்காக தங்களுடைய மூளையிலிருந்து பிறந்தவற்றை உபதேசங்களாக மாற்றி வெகுஜன ஊடகமான தொலைக்காட்சியிலும் இணையதளங்களிலும் மற்றும் பத்திரிக்கைகளிலும் உலாவ விடுகிறார்களே....! இவர்களைப்பற்றி அல்லது..,

இதைப்பற்றி நாம் எவ்வித கவலைப்படாமலும் இதை ஜனங்களுக்கு அறிவித்து எச்சரிக்காமலும் நம்முடைய அறையிலேயே அமர்ந்து ஜெபித்துக் கொண்டே இருக்கலாமா?  

இந்தக்கட்டுரையைக் குறித்த உங்கள் ஆலோசனைகளை ...,
மிகுந்த ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

Comments

  1. இவர்கள் இப்படி சொல்வது உண்மையானால் சாத்தான் இப்படி வந்திருப்பான். நிச்சியம் இயேசு வந்திருக்க மாட்டார். ஒளியில் வேஷசம் தரித்து சாத்தான் தான் வருவான் என்று பைபிள் நமக்கு போதிக்கின்றது.

    மேற்கண்ட நிகழ்வுகள் என் காட்டுகின்றதெனில் வேதவாசிப்போ, பகுத்தறிவோ எமக்கு கிடையாது என்பதை தான். இவர்களின் செயற்பாடுகளினால் சாதாரண அறிவு கொண்ட மக்கள் கூட இயேசுவண்டை வர மறுப்பார்கள்

    இவர்களை நம்பியும் கூட்டம் கூடுகிறதே. வேதனையாக உள்ளது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?