Posts

Showing posts from March, 2017

இனி எல்பிஜி தான் பயன்படுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தமா?

Image
என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல், எனது தரப்பில் யாரும் வாதிடாமல், எனது எதிரிகள், இல்லை சில ஆர்வலர்கள் கொடுத்த குற்றங்களைப் பட்டியலிட்டு, அறிவியல் ஆதாரத்தைக் கூட கேட்காமல், நான் தண்டிக்கப்பட்டுள்ளேன். அதுவும் சாதாரணத் தண்டனையல்ல, மரண தண்டனை. எனது சந்ததிகளே இல்லாமல் போகும்படி எனது பரம்பரையை முற்றாக அழிக்கும் தண்டனை. இது வரலாற்றிலேயே முதன்முதலாக நடைபெறும் நிகழ்ச்சி என்று கூடக் கூறலாம். இதுவரை மனிதர்களை மட்டும் தண்டித்த நீதிமன்றம் முதல்முறையாக ஒரு மரத்திற்கு மரண தண்டனை விதித்துள்ளது. என்னைப் பற்றியும், எனது பயன்பாடு குறித்தும், எனக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றியும் வருங்காலத்தில் மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் எனது வாக்குமூலத்தை இங்கு கொடுத்துள்ளேன். acacia tree எனது பெயர் சீமைக்கருவேல் (வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட முள்செடி), ஆங்கிலத்தில் புரோசோபிஸ் ஜுலிப்ளோரா என்று அழைப்பார்கள். எனது சொந்த நாடு தென்னமெரிக்காவில் உள்ள பிரேஸில் என்றாலும், மனிதர்கள் உலகமயமாக்கல் கொள்கையை கொண்டுவருவதற்கு முன்பே நான் உலகமுழுவதும் எனது இருப்பை உணர்த்தி உள்ளேன். இந்தியாவில் 1

தாலி - கிறிஸ்தவா்

Image
தாலி பற்றி ஆய்வு செய்யப் புற்ப்பட்டோமானால், அது நீண்டுகொண்டே போவதாக இருந்தாலும், அது அநேக கற்பனைக் கதைகளையே உருவாக்குகிறதேயன்றி வேறில்லை. இங்கே நாம் குறிப்பிட்டுள்ளவைகள் தமிழ் கலாச்சார நடைமுறைக்கும் முன்னோருடைய சிந்தை செயலுக்கும் பொருத்தமாக இருப்பதால் இதுவாகத்தான் இருக்குமென முடிவுக்கு வர நம்மால் முடிகிறது.  இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன், இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்த நாளில் கல்யாணம் செய்து கொள்வதாக  தாலம் பனை என்ற பனை ஓலையில் அனைவரும் கையொப்பமிட, அந்த ஓலையினை குடிமகன் ( ஒவ்வொரு ஊரிலும் குடிமகனே தலைமகன் என்று சொல்லுவார்கள்-இவா் சவரம் செய்கிற வேலையையும், திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளையும் செய்வார். அதே போல சலவைத் தொழிலாளி அவா் பல்வேறு பணிகளை செய்வதுடன் பெண்கள் பெரிய மனுஷி ஆன நிகழ்வில் இவா்களது பணி மிகப்பெரிய பங்களிப்பாகும். சவரத்தொழிலாளி என்ற குடிமகனும், வண்ணாா் என்ற சலவைத் தொழலாளியும் இல்லாத சடங்கு என்பது அக்கால கிராம வழக்கங்களில் நினைத்துக் கூட பார்க்க முடியாதவைகள் ) எடுத்துத்தர கயிற்றில் கட்டி மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக வரலாற்று

மனைவிகளில் அன்புகூருங்கள்.

Image
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்.  தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே.  கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.  நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.  இதினிமித்தம், மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். எபே 5 25...31