"சிலுவைபலி" முசுலீம் நண்பர்களுடன் விவாதம்

சிலுவைபலி என்கிறதான தலைப்பில் முசுலீம் நண்பர்களுக்கும் கிறிஸ்தவ நண்பர்களுக்கும் இடையில் ஒரு எழுத்து விவாதம் நடைபெற்றது.

கடந்த 6-7-12 வெள்ளிக்கிழமை பகல்12 மணியளவில் சகோ வெங்கடேஷ் அவர்கள் விவாதத்தின் தலைப்பை பதிவிட்டு விவாதம் தொடங்கியது கிறிஸ்தவர்கள் சார்பாக நானும் கலந்து கொண்டேன். விவாதம் 8-7-12 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியுடன் நிறைவுபெறும் என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

விவாதத்தில் நாம் முன் வைத்தக் கேள்விகளுக்கு மழுப்பலானதும் ஏற்றுக் கொள்ள இயலாததுமானவைகளை பேசி நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தது மட்டுமல்ல பல மணி நேரங்கள் அவர்கள் தொடர்புக்குள் வராமலேயே தப்பிக் கொள்ள பார்த்தார்கள்.

கடைசியாக சனிக்கிழமை இரவு சுமார் 10 30 க்கு மேல் ஓடிப்போனார்கள். திரும்பவும் வரவேயில்லை. காலையிலாவது வருவார்கள். என்று எதிர்பார்ப்பு

‎8- ம் தேதி அதாவது விவாத ஒப்பந்தப்படியான நேரம் முடிவடையும்முன் காலை 6- 45 க்கு நான் இட்ட பிண்ணூட்டம் :-
//ஹலோ அபுபக்கர் என்னுடைய கேள்விக்கு முழுமையான பதில் சொல்லிவிட்டு போங்கள் நண்பரே...!? // என்று நமது நண்பர் Venkatesan Mycoimbatore அழைத்தபோதும்...,

பதில் சொல்லாமல் Abu Bakr As-Siddiq ஓடியது ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. என்றாலும்.., இங்கே ஒரு நண்பர்

// முஸ்லிம்கல் இரைவன் சொன்ன்ப்படி ஆடு மாட்டை இன்ட்ருவரை பலி கொடுக்கிரோம். // என்று சொல்கிறார்.

அன்புக்குகந்தவர்களே கிறிஸ்துவின் மாறா
அன்புடன் காலை வணக்கங்கள். நீங்கள் மட்டுமல்ல, மனித இனங்களே அநேக ஆண்டுகளாக சில பழக்க வழக்கங்களை கொண்டிருந்தாலும், அவற்றிற்கு பொருள் தெரியாமல் செய்கிறவர்கள் அதிகம். என்பதை இங்கே மறுக்கக்கூடாது. ஆப்ரகாமுடைய மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிட சொன்னார் என்பது எப்படி உண்மை என்று முசுலீம்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ அதேபோல..., அகிலத்தாருக்கு பதிலாக தேவகுமாரன் பலயிடப்படவேண்டியது அவசியம். என்பது உங்களுக்கு புரியவில்லையானால் நாம் என்னவென்று சொல்ல...?

இங்கே ஒரு செய்தியை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். பரிசுத்த வேதாகமம் என்பது குர்ஆன் போன்றதல்ல...,
பரிசுத்த வேதாகமம் பரந்து விரிந்த செய்தியை உடையதாகும். குர்ஆனை பரிசுத்த வேதாகமத்தோடு ஒப்பிட்டு பேசுவது "குட்டையை (வறண்ட சிறியகுளம்) கடலுடன் ஒப்பிடுவதற்கு சமம்" 

சிலநேரங்களில் சிலரைப் பார்த்துச் சொல்லுவேன் "குறைகுடம் கூத்தாடும்" உங்களையும் பார்த்து அப்படிச்சொல்லும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டாம்.

நான் முன்பே சொன்னபடி.., நீங்கள் முசுலீம்களில் குறிப்பிடத்தக்க சிலருடைய "சிலுவைபலி மறுப்பு" புஸ்தகத்தை அல்லது அது சம்பந்தமான பதிவுகளை படித்துவிட்டு அதை மட்டுமே மையமாக வைத்து வாதிடுகிறீர்கள். எனவேதான் இவ்விவாதத்தின் துவக்கத்தை நிங்கள் சீமோனிலிருந்து துவக்கினீர்கள்.

பரிசுத்த வேதாகமத்தை பொருத்தவரை
இந்தசெய்தி சீமோனிலிருந்து ஆரம்பிக்கப்வில்லை இந்த உலகத்தோற்றத்திற்கு முன்னிருந்து துவக்கப்பட்'டு விட்டது. செய்தியை அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

சரி.., உங்களிடம் அதுபற்றி எல்லாம் விவாதிக்க வேண்டாம். உங்களுக்கு சற்று புரியும்படி ஆப்ரஹாம் சரித்திரத்திலே இருந்து ஆரம்பித்தாலே. போதும் என அதை துவக்கினால், அது சிலுவைபலிக்கு சம்பந்தமில்லை என்கிறீர்கள். சரி, "கொர்பான்" என்று துவக்கினால்.., அதுவும் இதற்கு சம்பந்தமில்லை என்று முரண்டு பிடிக்கிறீர்கள். 


பாய்.., நீங்கள் வைத்திருக்கும் நோட்டுக்கும் கொர்பான் ஆதம் மற்றும் ஆப்ரஹாம் சம்பவங்களுக்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம். எங்கள் வேதத்தின்படி தொடர்பு உண்டே என்ன செய்வது? மட்டுமல்ல

"சிலுவைபலி" என்றால் மேலே குறிப்பிட்டவற்றுடன் மட்டுமல்ல..., எங்களது முன்னோர்களான யூதர்களுடைய ஆசரிப்புக்கூடாரத்தில் கேடானுகோடி மிருகஜீவன்க
ள் பலியிடப்பட்டதல்லவா..? அவற்றுடன் சிலுவைபலி சம்பந்தமுள்ளது. என்பதை நிங்கள் இன்று புரிந்து கொள்ளவேண்டும்.

இங்கு நடப்பது விவாதமேயானாலும் நாங்கள் மனிதனுடைய "நித்திய ஜீவனுக்கேதுவானவைக
ளை அறிவித்துக் கொண்டிருக்கிறோம்" 

நீங்களோ அற்பத்தனமான கேள்விகளை சுமந்து நரகத்துக்கேதுவான கருத்துக்களுடன், எங்களுடன் கேலி பேசி உலாவருவது உகந்ததல்ல.... என்று அன்பாகவே சொல்லுகிறேன்.

இந்த கடைசி சில மணி நேரங்களையாவது.., அர்த்தமுடன் நிறைவு செய்வோம்.

என்றபோதும்..., அவர்கள் விவாதம் முடிவடைய ஏற்படுந்தியிருந்த நேரமான 8- ம் தேதி காலை 9 மணியைக் கடந்து 10 மணி ஆகிவிட்டது அவர்கள் யாரும் வரவேயில்லை நான் ஆராதனைக்கு செல்ல வேண்டியதாக இருந்ததால் கடைசியாக பிண்ணுட்டம் இட்டு கடந்து சென்றேன் :-
நான் இட்ட பிண்ணூட்டம் :-


முசுலீம் நண்பர்களுக்காக வருந்துகிறேன்.
-----------------------------------------------------
முசுலீம் நண்பர்களே... நான் உங்களை ரொம்பவும் நம்பினேன். விவாதத்தின் கடைசிவரைக்கும் இருப்பீர்கள் என நினைத்தேன். ஆனால் நீங்கள் இவ்வளவு சீக்கிரமாக ஓட்டமெடுத்துதான். ஆச்சர்யமாக இருக்கிறது. என்றாலும்...

இவ்விவாதத்தில் பங்கெடுத்ததினிமித்தம் உங்களைப்பற்றி நான் அதிகமாக தெரிந்து கொண்டேன்

நீங்கள் ஒட்டுமொத்த முசுலீம்களின் பிரதிநிதி அல்ல என்றாலும்.., உங்களுக்கு நீங்கள் பொறுப்பாளர் உங்களுக்கு நீங்களே பொறுப்பு நடுந்தீர்வை நாளில் போக்குச் சொல்ல முடியாது என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். உங்களை தப்பித்துக் கொள்ள வழிபாருங்கள். அதற்கான மார்க்கம் இயேசுகிறிஸ்துவிடமே உண்டு.

இந்த இரண்டுநாளும் உங்களுடன் நட்பு கொண்டதினிமித்தம் நான் உங்களுக்கு ஒரு ஆலோசனை கொடுக்க விரும்புகிறேன். எந்த இடத்திலும் உங்கள் அறிவுக்கேற்றபடி விவாதம் செய்யுங்கள். மட்டுமல்ல.... உங்களுக்கு தெரிந்ததை அறிவியுங்கள். "அடுத்தவனுடைய சரக்கு நமக்கு ஆபத்து நம்முடைய ஞானமே நமக்கு நல்லதுணை"

சரி.., இவ்விவாதத்தில் பங்குபெற்ற முசுலீம் நண்பர்களுக்கும் இந்த விவாதத்தை பார்வையிட்ட அன்பர்களுக்கும் எங்கள் அன்பான வேண்டுகோள்:- எங்களால் உயர்வாக கருதப்பட்டு கோடிகோடியான மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிற பரிசுத்த வேதாகமத்தை பழித்துப் பேசாதிருங்கள். அது உங்களுக்கு அழிவைத் தேடித்தரும். இம்மையிலும் மறுமையிலும். அழிந்துபோவது என்றால் இல்லாமல் போவதல்ல... நஷ்டப்படுவீர்கள் என்றும் அர்த்தப்படுத்தலாம்.

உலகிற்கெல்லாம் நல்ல ஆசானாம் பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது:- "கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்" (1பேது 3: 15)

என்பதால், உங்களுக்கு பதில்சொல்ல எப்பொழுதும், நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். உங்களது கேள்விகளையும் சந்தேகங்களையும் எங்களிடத்தில் சொல்லுங்கள். இறைவனின் துணையுடன் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறோம்.

கிறிஸ்தவ நண்பர்களுக்கும் கனத்துக்குரிய தேவஊழியர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்:- எங்களுக்காக ஜெபியுங்கள். மேலான உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறோம். எங்களுடன் இந்த ஊழியத்தில் இணைய விரும்புகிறவர்களும் சகோ. வெங்கடேஷன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

பின் குறிப்பு:- இந்த விவாதத்தில் யாருடைய மனமும் புண்படும்படி ஏதாகிலும் நடந்திருந்தால் அதற்காக வருந்துகிறோம்.

"கர்த்தரிடத்தில் இரக்கத்தை நாடுகிறோம்"

சில நேரங்களில் முசுலீம்களுடைய தவறான போக்கை அவர்களது அவசியமும் ஞானமுமற்றப் பேச்சை தடை செய்யப் பயண்பட்டிருக்கலாம். அப்படி இருந்தாலும் தவறு என்று உணருவீர்களால் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளுகிறோம் பொறுத்திடுங்கள். ஒருமனப்பட்டு கூறுகிறோம். அல்லேலூயா...! அல்லேலூயா...! அல்லேலூயா...! (தேவனுக்கே மகிமை)


வாருவார்கள் வருவார்கள் எங்கள் அணியினர் காத்திருந்தபின்னும்...,

சென்னையில் "குர்ஆன் இறைவேதமா" என்ற விவாதத்தில் பங்கெடுக்காமல் முசுலீம் நண்பர்கள் ஓடியது போல இங்கும் ஓடிவிட்டதால்..,





விவாத ஒப்பந்தப்படியான நேரம் முடிந்த பின் விவாதத்தை நிறைவு செய்யும் வண்ணம் காலை 10 மணியளவில் எங்கள் குழுவின் பொறுப்பாளர் சகோ Venkatesan Mycoimbatore அவர்கள் இட்ட பிண்ணூட்டம் :-




 
சிலுவை பலி விவாதத்தில் சிக்கி சிங்கிரி அடித்து ஓட்டம் எடுத்த இஸ்லாமிய சகோதரர்கள்.
 விவாத அழைப்புவிட்ட இஸ்லாமிய சகோதரர்கள் இந்த வாதத்தை முன்னெடுக்க முடியாமல் மூச்சுத்திணறி பாதியில் ஓட்டமெடுத்து உள்ளார்கள்.
இவர்களின் விவாத திறமையை பார்த்து மற்ற இஸ்லாமிய நண்பர்கள் என்னை கொஞ்சம் விடுங்கள் நான் கிழித்துவிடுகிறேன் என்ற தோரணையில் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு இவர்களின் விவாததிறமை உள்ளது.கேட்டப்பட்ட ஒரு கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாமல் நாங்கள் கேள்வியை கேட்போம் .பதில் அளிக்கவெல்லாம் எங்களுக்கு தெரியாது என்கிற தொனியில் கேள்வி கேட்டவர்கள் மூக்குடைபட்டுள்ளார்கள்.
முதலில் 6 பேர் கொண்ட குழு என்று அறிவித்தவர்கள் பருப்புவேகாது என்று தெரிந்து 4 பேர் ஆகிவிட்டார்கள்.அடுத்து அதிலும் ஒருவர் தலைவைத்து படுக்கவே இல்லை
இந்தப்பக்கம்.அவருக்கு தெரியும் இங்குவந்தால் என்ன நடக்கும் என்று.அடுத்தவர் சாதிக் அலி என்பவர்.தவறான கோட்டிங்கை கொடுத்து ஆதாரம் அளிக்கமுடியாமல் ஆரம்பத்தில் இருந்தே அப்ஸ்கேண்டிங் ஆகிவிட்டார்.அப்பப்ப தலையை காட்டுவார் நானும் இருக்கேன் என்று.
 
அடுத்து அபு பஸ்லன் உண்மையாகவே நல்ல நண்பர் .தங்களால் பதில் அளிக்க முடியவில்லை என்றே நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று திறந்த மனதோடு ஒத்துக்கொண்டவர்.பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தலைசொரிந்து புண்ணாக்கிவிடாரொ என்ற சந்தேகம் உள்ளது.

அடுத்து அபுபக்கர் இவர் இந்த குழுவின் தலைவர்.இஸ்லாமிய அறிஞர்களால் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கொம்புசீவி விடப்பட்டுள்ள காளை.ஆனால் இஸ்லாமிய அறிஞர்களின் பொய் எழுத்துக்களை மட்டுமே நம்பி நாட்டாற்றில் விடப்பட்டவர்.

கேட்ட கேளிவிகள் பல சொதப்பிவிட்டதை உணர்து பலமணி நேரங்கள் முகநூலுக்கு முகம் காட்டாமல் நொந்துபோயுள்ளார்.

எப்படியோ இவர்கள் இதுவரை சிலுவை பலிக்கு எதிராக நம்பிவந்த கட்டுக்கதைகள் இன்றோடு மூட்டைகட்டிவிட்டு சுயமாக சிந்திப்பார் என்பது நிச்சயம்.

விவாத நேரம் முடிந்துவிட்டது ,இனி இதில் யாரும் பதிவிட வேண்டாம்.





என்று நம்முடைய நண்பர் வெங்கடேஷன் நிறைவு செய்தபின் 


நாங்களெல்லாம் ஆராதனைக்கு போருப்போம் என்று அறிந்து..,







வழக்கம்போலவே தோற்றுப்போன முசுலீம் அணியினர் வெற்று மைதானத்தில் வந்து நாங்களும் வீரம் காட்டுவோம், நாங்களும் வீரம் காட்டுவோம் என்று சொல்வதைப்போல




நண்பர் Abu Fazlan அவர்களும் அவருடைய இன்னும் சில நண்பர்களும் கூடி வந்து ஆத்திரத்தில் அறிவில்லாமல் இழிவான வார்த்தைகளை பேசியதால்..., அந்த பிண்ணூட்டங்கள் நீக்கப்பட்டன.



எனவே முசுலீம் அணியின் பொறுப்பாளர் Abu Bakr Shiddique அவர்கள் கடைசியாக இட்ட பிண்ணூட்டம் :-


விவாதம் ஒன்பது மணியோடு முடிந்தது ! விவாதம் சம்பந்தமாகவும் , சிலுவை பலி தொடர்பாக தனி திரியில் ennidam முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ சகோதரர்கள் கேட்கலாம் ! விவாதத்தில் பங்கு பெறாதவர்கள் கேட்குமாறு கேட்டுகொள்கிறேன் - என்றார்.




இதை வாசிக்கிற அன்பானவர்களே முசுலீம்களுக்காக ஆங்காங்கே ஜெக்குழுக்களை அமைத்து நன்றாக ஜெபியுங்கள்.  இஸ்லாமியர் எனப்படும் முசுலீம்கள் உணர்வடையவும் இரட்சிக்கப்டுவதற்காகவும்.., சத்திய மார்க்கமாம் கிறிஸ்தவ மார்க்கத்தின் உபதேசங்களை முசுலீம் மக்கள் ஏற்றுக் கொண்டு கர்த்தரிடத்தில் திரும்ப வேண்டும். அதற்காக




காத்திருப்போம் கர்த்தருடைய பாதத்தில்...

   கடந்து செல்வோம் அரபிய இருளில் பிரகாசிக்க....!

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?