இப்போதைக்கு எதுவுமே வேண்டாம்.,,,!


காலக்கிரமங்களின்படி வேதாகமத்தை வாசிக்க வேண்டும். -1 
---------------------------------------------------------------------------------------------------

 
எல்லாமே சிக்கலாக இருக்கிறது.
எங்கிருந்து துவங்குவது..? பலமாய் சிந்திக்கிறேன்.

கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதினால்...., 
எந்த கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதுவது?  கிறஸ்தவத்திலும் பல வகைகள்.
சபையைப் பற்றி எழுதினால்… ,
எந்த சபையைப் பற்றி எழுதுவது? சபைகளிலும் ஏராளமான சபைப் பிரிவுகள்.
ஞானஸ்நானத்தைப் பற்றி எழுதலாமென்றால்..., 
எந்த ஞானஸ்நானத்தைப் பற்றி எழுதுவது? அதிலும் பல மாடல்கள்.
பரிசுத்த ஆவியானருடைய அபிஷேகம் பற்றி எழுதலாமென்றால்..., 
அதை எப்படி அடையாளப்படுத்துவது? அதிலும் பல்வேறு அடையாளங்கள்.
உபதேசம்….   கேட்கவே வேண்டாம்...!
ஊழியம் என்றால்............,  எது ஊழியம்? 
அடிதடி நடத்தப்படுமளவிற்கு அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே அதுவா?
இப்போதைக்கு எதுவுமே வேண்டாம்.....!

நண்பர்களே...! பரிசுத்தவேதாகமத்தை எடுத்துக்கொண்டு அமருவோம். ஆவியானவர் காட்டும் வழியில் பயணிப்போம். விசுவாசமாகச் சொல்லுவோம் "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன்.
 
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 
 
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர். உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
 
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
 
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும். நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.  சங் 23: 1…6

இனி நாம் வேதாகமத்தை வாசிக்கலாம்.
பரிசுத்த வேதாமத்தை வாசிப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமானதும், முதலாவதுமான ஆலோசனைகள்:-
 
பரிசுத்த வேதாகம வசனங்களை காலங்களுக்கேற்றபடி நான்கு (4) பிரிவுகளாக பிரித்துக் கொள்ளுங்கள். எப்படியெனில்….

1.    மனசாட்சியின் காலம்
2.    நியாயப் பிரமாண காலம்
3.    கிருபையின் காலம்
4.    சபையின் காலம்
இதை முறையே பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாடு என்ற பகுதியில் முதல் இரண்டு பிரிவுகளாகவும் புதிய ஏற்பாடு என்ற பகுதியில் மற்ற இரண்டு பகுதிகளையும் பிரித்துக் கொள்ளப்பட வேண்டும். பிரிக்கும்போது அது கீழ்காணுமாறு வரிசைபடுத்தப்பட வேண்டும். 

1. ஆதாம் முதல் மோசே சீனாய் மலையிலேறி தேவனிடத்திலிருந்து நியாயப் பிரமாணத்தைப் பெற்றுக் கொண்ட நாள்வரை மனசாட்சியின் காலமாகவும்.

2. நியாயப்பிரமாணத்தை பெற்றுக்கொண்ட நாள்முதல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் ஞானஸ்நானம்பெற்று கரையேறினபோது வானம் திறக்கப்பட்டதுவரை நியாயப்பிரமான காலமாகவும்
 
3. இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே வானம் திறக்கப்பட்டு தேவ ஆவி புறாவைப்போல இறங்கி இயேசுவின்மேல் வந்ததும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று தேவனால் அறிவிக்கப்பட்டதுமான நாள் துவக்கம் பெந்தெகோஸ்தே நாளில் சீஷர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்ட நாள்வரைக்கும் கிருபையின் காலமாகவும்

4.    மேலறையில் இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்த நாள் துவக்கம் இன்று வரை, சபையின் அல்லது பரிசுத்த ஆவியானவருடைய காலமாகவும்
கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். 

இந்தக் காலக்கிரமங்களின்படி வேதாகமத்தை வாசித்தீர்களானால் தேவசித்தத்தை தேவ ஒத்தாசையோடு சுலபமாக விளங்கிக் கொள்வதுடன் வேதாகமத்தின் ஒவ்வொரு செய்தியையும் சுலபமாகப் புரிந்து கொள்வீர்கள். மட்டுமல்ல..., கள்ள உபதேசங்களை முறியடிப்பீர்கள். உங்களுடைய வெற்றியை நீங்கள் உங்கள் கண்களாலேயே காண்பீர்கள்.
நாம் மேலே கண்டுள்ளபடி மட்டுமல்ல இதற்குள்ளும் பல உட்பிரிவுக்ள் உண்டு என்றாலும் கர்த்தருக்குச் சித்தமானால் வரும் காலங்களில் அதைப் பார்க்கலாம்.

இப்படி நாம் காலங்களை பிரித்துக் கொண்டு படிப்பது மட்டுமல்ல.. எப்பொழுதெல்லாம் வேதாகமத்தை படிக்கிறீர்களோ அப்போதெல்லாம் மிகவும் நிதாணமாக வாசித்தல் மிகவும் அவசியம். வேதாகமத்தை அவசரப்படாமல் நிதாணமாக நிறுத்தி வாசிக்கிறவர்கள் வேதாகம வசனங்களை தவறாக புரிந்து கொள்ளுவதிலிருந்தும் குழப்பங்களிலிருந்தும் பல்வேறு நூதனமான போதகங்களிலிருந்தும் தப்பித்துக் கொண்டுள்ளதை நான் நன்கு அறிவேன்.
வேதத்தை காலங்கள் கணக்கிட்டு படிக்காததால் என்ன ஆபத்து வந்துவிடும்? என்று உங்களில் அநேகர் யோசிக்கக்கூடும்.
இன்று உருவாகும் பல்வேறு கள்ளஉபதேசங்கள் பரிசுத்த வேதாகமத்தை முறைப்படி படித்து புரிந்து கொள்ளாததாபடியினாலும் அறியாமையிலிருந்தும்தான் ஆரம்பிக்கிறது.
மனிதன் பாவத்தில் வீழ்வதற்கு அடிப்படை…. தேவனுடைய வார்த்தையின்மேல் அவள் ;அல்லது அவன் கவனமாயிராததேக் காரணம் என்பதை நாம் அறிவோம்.
எனவே நாம் அவருடைய வார்த்தையின் மேல் கண்ணோக்கமாக கவனமாக இருப்பது அவசியம்.                                              - தொடரும்

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?