Posts

Showing posts from 2015

நாடார்களே உணா்வில்லையா ?

Image
அடிமைத்தனத்தை உடைத்து அருமையாய் வளா்ந்து நிற்கும் நாடார் சமுதாயத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகவே மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவரை நாடார் என்ற காரணத்திற்காகவே தரையிலே உட்கார வைத்ததின் மூலம் அவரை தெரிந்தெடுத்த அனைத்து சாதி, மத மக்களையும் கேவலப்படுத்தி இருக்கின்றனரே..! நாடு போற்றும் நாடார்களே உணா்வில்லையா? தமிழ்செல்வி நாடார் என்ற முகநூல் விலாசத்தில் உள்ள ஒருவா் ”நாடார்களே கிறிஸ்தவ மதத்திற்கு மாறாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்தும் கிறிஸ்தவர்களின்  புனித நூலாகிய பைபிளை மிககேவலமாகவும் திரித்து கருத்து வெளியிட்டிருந்தார்கள். அவர்களுக்கு பதில் அளித்து நான் வெளியிட்ட கருத்துக்களை அதிலிருந்து எடுத்து விட்டபடியினால், என்னுடைய பக்கத்தில் இதை வெளியிடுகிறேன். திருவாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரிகளும், நாயர்களும் நாடார் உட்பட மற்ற சூத்திர சாதி பெண்களை மேலாடை அணியக்கூடாது என்று சட்டம் போட்டு அப்படி மேலாடை அணிந்தவர்களை பொது இடங்களில் ஒரு நீளமான குச்சியின் முனையில் கத்தியை கட்டி நாடார் பெண்களின் மேலாடைகளை கிழித்ததும், முலைவரி விதித்ததும், அந்த வரி கட்டாத நாடார் பெண்களை மார்பகங்களை வெட்டி

நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி..!

Image
நண்பா்கள் அனைவருக்கும் காலை வணக்கம். ( இது ஏற்கனவே வேறொரு செய்தியின் இடையில் இது எழுதப்பட்ட செய்தியாக இருந்தாலும் காலத்தின் தேவை கருதி தனித்து...) பரிசுத்த வேதாகமத்தை படிக்கிறவா்கள் பரிசுத்த வேதாகமத்தை நான்கு பிரிவுகளாக பிரித்துக் கொண்டு படிக்க வேண்டுமென்று ஆலோசனையாகக் கூறுகிறேன். அப்பொழுது உங்களுக்கு அநேக விஷயங்கள் புரியத் துவங்கும். நாம் மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட பழைய உடண்படிக்கையினால் தேவனைச் சேராமல் புதிய உடண்படிக்கைக்கு உட்பட்டு, அவருடைய பிள்ளைகளாகக்  காணப்படுகிறோம். இதனால் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக பல்வேறு சிறப்பான தகுதியை பிதாவினிடத்தில் பெருகிறோம். இப்படியான மேன்மையான அனுபவத்தை கிருபையாகப் பெற்ற நாம் தேவனை பரியாசம் பண்ணக்கூடாது. உதாரணமாக  எபே 5: 10 கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். (என்றும்) கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். என்றும் ஆவியானவா் நமக்கு அனுமதியளித்துள்ளார். என்னுடைய அனுபவத்திலிருந்து ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன். ஒருநாள் காலையில் தொலைபேசிய

இனி அப்படி இருக்கலாகாது...,

Image
கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்து நமக்குக் கற்றுத்தந்ததும் இந்திய சட்ட திட்டங்களுக்கு சற்றேனும் முரன்படாததுமான போதனைகளை நமது இறைவேதத்தின் கட்டளைக்கு இணங்க மக்களுக்கு போதித்து வருகிறோம். நமக்கு கிடைக்கும் தரிசனத்தின் அடிப்படையில் பல்வேறு பகுதிகள் மாவட்டங்கள் மாநிலங்கள் என்று பயணித்து கிறிஸ்துவின் அன்பையும், நற்போதனைகளையும் சமூக சேவைகளையும் செய்து வருகிறோம்.  நம்மால் அறிவிக்கப்படும் சுவிஷேசத்தைக் கேட்கிற எவ்விடத்திலுமுள்ள ஜனங்கள் தங்கள் பாவ வழிகளை விட்டு என்பதுடன், சமூக சீர்கேடுகளையும், மனித சரீரத்தில் பாதிப்புகளை உண்டுபண்ணுகிற தீமையான பழக்க வழக்கங்களை கூட ஓழித்துவிட்டு மனமாற்றமடைந்து திருந்துகின்றனர்.  இப்படி பல குடும்பங்கள் இயேசுகிறிஸ்துவினால் வருகிற சமாதானத்தை அடைந்து சுகவாழ்வு வாழ்ந்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்தோர் உயருகின்றனர். அவர்களுடைய பிள்ளைகளும் கல்வி அறிவு போன்ற மேன்மைகளை அடைந்து சந்ததிகள் சந்தோஷமாக வாழுகின்றனர். எனவேதான்  நாம் நமது இறைப்பணியை முழுமனதோடும், உற்சாகத்தோடும் செய்து வருகிறோம். என்றாலும்...,  நமதுது இறைப்பணியை கெடுத்துப்போட சில அமைப்புகள் ப

இதுதானே மனந்திரும்புதல்.

கிறிஸ்துவில் எனக்குப் பிரியமானவா்களே தேவ திட்டத்தை மிக சுருக்கமாக மற்றும் தெளிவாக எழுத விரும்புகிறேன். தேவனாகிய கா்த்தா் ஆதாமுக்கு ஒரு மனைவியைக் கொடுத்தார். அதன்பின் வந்தவா்களில் ஒரு சிலரைத் தவிர அநேகா் தங்கள் விருப்பத்தின்படி பல மனைவிகளை தங்களுக்காக அமா்த்திக் கொண்டார்கள். புதிய ஏற்பாட்டிலே ஒரே மனைவியையுடையவனாக இருப்பதை ஆவியானவா் வலியுறுத்திக் கூறுகிறார். தேவன் தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட ஏவாளுக்கு நகையை அணிவிக்காமல், ஆடையையே அணிவித்தார். என்பது கவனிக்கத்தக்கது அதன்பின் வந்தவா்களோ தங்கள் இஷ்டப்படி உலோக ஆபரணங்களை உருவாக்கி தங்கள் சரீரங்களில் துளையிட்டும் இடாமலும் அணிந்து அசிங்கப ்பட்டுக் கொண்டார்கள். புதிய ஏற்பாட்டில், மனந்திரும்புங்கள் என்கிறார். பழையவைகளை ஒழித்துப் போடுங்கள் என்கிறார்.அதுமட்டுமல்ல.., பொன்னினாலாவது,முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், அதாவது அலங்கரிக்க வேண்டாம் என்றும்..... பொன்னாபரணங்களை அணிந்து உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அதாவது இரு

கிறிஸ்தவத்திற்கு என்னவாயிற்று?

Image
பெந்தகொஸ்தே சபைகளின் உண்மை நோக்கம்.  இரட்சிக்கப்பட்டு தேவ ஜனங்களாக ஆனவா்களை தேவனுக்கேற்ற பக்தி விருத்தி அடையச் செய்வதுடன்,  அவா்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் கறை திரை பிழையில்லாமல் வாழச்செய்ய வழி நடத்துவதும்,  வேத வசனமான மன்னாவை முறையாக புகுட்டி உட்கொள்ளச் செய்வதுடன் கிறிஸ்துவினுடைய நிறைவான வளா்ச்சிக்கு ஏற்றபடி பூரண புருஷராக வளரச் செய்வதுமாகும். இந்நிலையில், இயேசுகிறிஸ்துவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து அவருடைய வருகையில் அவரை மகிழ்ச்சியோடு எதிகொள்ளச் செய்வதுமே பெந்தகொஸ்தே சபைகளின் உண்மையான நோக்கம் என்பதை நம்மில் அநேகா் அறிவார்கள்.    அதேநேரம்..., இந்த உண்ணத நோக்கத்தைக் கெடுக்க வந்த சில பெருச்சாலிகள் போன்ற போதகா்கள், நாங்களும் பெந்தகொஸ்தே சபைப் போதகா்கள்தான் என்று பொய்யான பிரச்சாரம் செய்வதுடன்,  பெந்தகொஸ்தே அல்லது ஆவிக்குரிய உபதேசத்தை சிதைத்து, பெந்தகொஸ்தே என்னும் பெயரையே கெடுத்தும் வருகிறார்கள். இவா்கள் பணத்தாசை  பிடித்து திரிவதினாலேயே இப்படி நடந்து கொள்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடாகவே இந்த மொட்டை போட்ட மனிதரை வைத்து இவா்கள் நடத்துகிற கூட்டத்தை காண்கி

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

Image
யோகா - நோய்களை குணப்படுத்துமா? யோகாவின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். -------------------------------------------------------------------------------- அற்புத ஆற்றலாமே? யோக(ம்) என்னும் சொல், பொருள் தெரிந்தோ தெரியாமலோ நாட்டில் பரவலாக, பேசப்பட்டு வருகிறது. ஊடகங்களிலும் முதன்மை இடத்தைப் பிடித்து வருகிறது. யோகா- என்றால் அது ஓர் அற்புத ஆற்றல் பெற்றது என்று அதன் ஆதரவாளர்களால் பரப்புரை செய்யப்பட்டும் பறைசாற்றப்பட்டும் வருகிறது. யோகா - என்பது ஒன்றும் வைதிக, ஆத்மீக, மதச் சடங்கல்ல அது ஒரு உடற் பயிற்சி..! கல்வி நிலையங்களில் கூட அது பயிற்றுவிக்கப்பட வேண்டும்; பயிற்று விக்கப்படும் என்று அறிவிப்பும் வந்துள்ளது. யோகா என்ற சொல்லில் - கருத்தில் ஏதோ ஒரு மயக்கம் நம்மில் பெரும்பாலானவர்க்கு வந்திருக்கிறது. அரசியல் தலைவர்கள்; பேராசிரியா்கள், அலுவலர்கள்; கல்வியாளர்கள்; விளையாட்டு வீரர்கள்; விளம்பர மாதிரிகள் (Models) திரையுலகை சோ்ந்தோர் யோகாவெனும் இம்மாயவிலையில் சிக்கி ஈடுபாடு காட்டி இறைந்து போகின்றனர். இதில் ஒரு வேடிக்கை - வியப்பு என்னவென்றால்.., யோகா நோயைக் குணமாக்கும் மருத்துவ முறை

பரிதாபமாக பார்க்க வேண்டியிருக்கிறது.

Image
மதங்கள் குறிப்பாக இந்திய மதங்கள் காலத்திற்கேற்றபடி தங்கள் மத நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டே வருவதை விபரமறிந்தவா்கள் ஒத்துக் கொள்ளுகின்றனா். இவா்கள் முன்நாட்களில் தங்கள் மத நம்பிக்கையாக அறிவித்தவைகளையே பின் நாட்களில் மறுத்து விடுகிறதும், மறைக்கிறதுமான பல்வேறு சம்பவங்களை நாம் பல நேரங்களில் கண்டிருக்கிறோம். இந்த தைரியம் பெரும்பாலும் இந்து மதத்திற்கு மட்டுமே இருப்பதைக் கண்டு, ஆச்சா்யப்படும் அதேநேரம்,  அந்த மதத்தின் பாமர இந்துக்களைத்தான் நாம் பரிதாபமாக பார்க்க வேண்டியிருக்கிறது. வேதங்களை உடையதாக பெருமைப் பேசுகிற   பிராமணிய மதம்,  தற்போது  இந்து மதமாய் உலகிற்கு அடையாளப்படுத்திக் கொள்ளுவதற்கு முன், பல்வேறு மத நம்பிக்கைகள் என்னும் பிற நிறத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டு இணைக்கப்பட்ட மதங்களுக்கு ஏற்ப தன் நிறத்தை பல்வேறு விதமாக மாற்றிக்கொண்டதை சரித்திர வாயிலாகவே நாம் அனைவரும் அறிய முடியும். முதலில் திராவிடமும் பின்னா் சமண பௌத்த வழிபாடுகளும், இதை ஒழிப்பதற்காகவே எழுந்த பக்தி இயக்கங்களான சைவம் வைணவம் போன்றவையும் மட்டுமல்ல பிராமணீய மதத்தவா்கள் சற்றுக்கூட ஏற்கவியலாததாக கருதப்பட்ட

தேவஜனங்கள் வேதவசனத்தைக் கேட்கனும், அதன்படி நடக்கனும் அதையே முதன்மைப்படுத்துவேன். - Pastor Immanuel Abraham.

Robin Shalal என்ற நண்பா் எனக்காக ஒரு கடிதம் எழுதி பதிவிட்ட பதிவின் மூலம் அவா் தனது அறியாமையை இங்கே வெளிப்படுத்தி இருக்கிறாரேயன்றி வேறொன்றும் அதில் தெரியவில்லை . என்றாலும் , எனக்கு கடிதம் எழுதிய அவருக்கு பொறுமையாக பதிலளிக்க வேண்டியது எனது கடமை . ஆதலால் , இதை பதிவு செய்கிறேன் .   நண்பா் கேட்ட கேள்விகளும் , அதற்கான எமது பதில்களும் ,   // 1. உங்களுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட ஊழியம் என்ன ? ஐயா .//   கா்த்தரால் மீட்டுக் கொள்ளப்பட்டவா்கள் அடங்கிய சபைக்கு என்னை கா்த்தர் ஊழியக்காரனாக ஏற்படுத்தி இருப்பதினாலே   கா்த்தருடைய சபையை அசுத்தமானவா்களிடமிருந்தும் கள்ளா்களிடமிருந்தும் தப்புவிக்கும் ஊழியத்தை நேரிலும் இணையத்திலும் தேவபெலத்தோடு செய்து வருகிறேன் .   // 2. கடந்த 20 ஆண்டு காலமாக ஊழியம் செய்து உள்ளீர் . ஆத்துமா ஆதாயம் எவ்வளவு ஐயா .//   தனி ஒரு நபா் யாருடைய துணையுமின்றி கா்த்தருக்காக ஆத்தும ஆதாயம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .   உதாரணமாக மோகன் சி லாசரஸ் , ஆல்வின் தாமஸ் போன்ற மேடை அமை