விருந்தினருக்கு பதிலாக ......,

குர்ஆன் என்ற புத்தகம் பல்வேறு மக்களிடமிருந்து ஓலையாக, எலும்புத்துண்டுகளாக, கற்களிலிருந்ததாக பெறப்பட்டு வடிவமைக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறது. அப்படியே நாம் அதை நம்பினாலும்.., வடிவமைப்புப்பணி நடந்தபோது வடிவமைத்தவர்களுடைய சிந்தையின் படிதான் குர்ஆன் உருவாகியிருக்கவேண்டும். ஏனெனில்..., 

எந்த ஒரு வடிவமைப்பாளரும் வடிவமைக்கையில் தங்களுடைய கொள்கைக்கு மாற்றமான கருத்துகளை நீக்கி விடுவதும் குறைவிருப்பதாக உணர்ந்தால் கூட்டிக்கொள்வதும் வடிவமைக்கிற பொறுப்பாளர்களால் எளிதாக செய்யப்படக்கூடிய ஒன்று.

இப்படி தன்னிலேதானே பலவீனமானதும் தமது ரசிகர்களால் மாத்திரமே தூக்கி நிறுத்தப்படுகிறதுமான குர் ஆனிலுள்ள செய்தி அல்லது ஒரு கதை அந்தக் கதையின் கதாநாயகன் பெயர் “லூத் என்பதாகும்

பரிசுத்த வேதாகமத்திலிருந்து இந்த செய்தியை எடுத்து.. கதையாக குர்-ஆன் என்ற புத்தகத்தில் கி.பி 650-களில் எழுதிவிட்டார்கள்.

பின்வந்த நாட்களில் சிற்சில மாற்றங்களை வட்டாரத்திற்கேற்றபடி அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்த மாற்றங்களைச் செய்ய இவர்கள் கையாண்ட வித்தைதான் மிகவும் தந்திரமானது. இவர்கள் தங்களுக்குத் தேவையான மாற்றங்களை அடைப்புக்குறிக்குள் அடைத்துவிட்டோம் என்கிறார்கள். இவர்கள் இப்படிச் சொன்னாலும். குர்ஆனை வாசிப்பவர்கள் கண்டிப்பாக அடைப்புக் குறிக்குள் இருப்பதை சேர்த்துதான் வாசித்தாக வேண்டும். இதன்மூலம் இவர்களுடைய இழிவான முயற்சி அவ்வப்போது சிரிப்பாய் சிரிக்கிறது.

குர்ஆனில் எந்த ஒரு செய்தியும் தொடர்ச்சியாக இருப்பது போன்று இருக்காது. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். கதைகள் மிகக்குறைவாக உண்டு. அப்படிக் கூறப்பட்டுள்ள கதைகளில் லூத்துவின் கதையும் ஒன்று. இதை பரிசுத்த வேதாகமத்தில் லோத்து என்று நீங்கள் காண முடியும்.

லூத் அல்லாவின் தூதராக (சோதோம்-தற்பொழுதைய ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதியில்) இருந்தாராம் இவர் இப்ராஹிமின் (ஆப்ரஹாமின்) நெருங்கிய உறவினர் ஆவார்
 
லூத் தனது குடும்பத்துடன் இருந்த சோதோம் பகுதியில் இருந்த ஆண்கள் மிகப்பெரிய அளவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தார்களாம்.

இந்நிலையில் அம்மக்களை அழிக்க அல்லாஹ் முடிவு செய்துவிட்டானாம் அதனால் தனது தூதர்களை அனுப்பினானாம்.

அந்த தூதர்கள் அல்லாஹ்வின் மற்றொரு தூதரான இப்ராஹிமை சந்தித்தார்களாம். முதிர்வயதான அவருக்கு குழந்தை பிறக்க இருக்கும் செய்தியைத் தெரிவித்துவிட்டு லூத்தின் நகரத்தை அழிக்க இருப்பதையும் அவரிடம் தெரிவித்தார்களாம்.

....நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர். குர் ஆன் 11:70

இப்ராஹிம் பதறியவாறு அங்கு லூத் இருப்பதை கூறுகிறார்.

இந்த இடத்திலேயே குர்-ஆன் தடுமாறுவது உங்களுக்குப் புரிகிறதா? அதாவது தேவதூதர்கள் சொல்லுகிறார்கள் நாம் லூத் சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டோம் என்று..
ஆனால் இப்ராஹிம் அங்கு லூத் இருப்தை தேவதூதர்களுக்கு சொன்னாராம்.

அதே குரான் தொடர்ந்து இப்ராஹிம் .....லூத்துடைய சமுதாயம் குறித்து நம்மிடம் தர்க்கம் செய்யலானார். குர் ஆன் 11:74

அப்டியே அவர்களுக்குள் விவாதம் நடக்கிறது அதன்பின் வானவர்கள் சோதோம் நகருக்கு செல்கின்றார்கள். தேவதூதர்கள் ஆண்கள் உருவில் லூத்தை சந்திக்கின்றார்கள்.

இதுவரை ஓரளவுக்கு திருவிவிலியத்திலிருந்து கி.பி 652 ல் எடுத்து எழுதியவர்கள் இதன் பின்புதான் முரண்பாடான தங்களது கதைகளை ஆரம்பிக்கிறார்கள். எப்படியெனில் லூத் என்பவர்களை சந்தித்த...

தேவதூதர்கள் பின்வருமாறு கூறினார்கள்:  குர்-ஆன் 11: 81.

..... மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்...... இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (.....) சென்றுவிடும்!

உம்முடைய மனைவியைத் தவிர உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம்.


கி.மு 2000 க்கு முன்னிருந்து தோறாவில் லோத்துவின் குடும்பத்திலுள்ள அனைவரிடமும் உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். என்று கட்டளையிடப்பட்டிருந்தது. என்றாலும் லோத்துவின் மனைவி தேவ கட்டளையை மீறி திரும்பிப் பார்த்தால் அதனால் அவள் உப்புத் தூனாகிப் போனாள் என்றிருக்கிறது. இதை கிறிஸ்துவுக்குப்பினும் யூதர்களும் கிறிஸ்தவர்களான நாமும் படித்து வருகிறோம். திடீரென 

யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லாத உலகிலேயே கேடு கெட்டவர்களாக இருந்த சமுதாயத்திலிருந்து தோண்றிய ஒரு குழு தங்களை தாங்களே முசுலீம்கள் என்று அழைத்துக் கொண்டு தாங்கள் இப்ராஹீமின் வம்சா வழி என்பதெல்லாம். உச்சகட்ட கிறுக்குத் தனமல்லவா? அப்படி அழைத்துக் கொண்டது மட்டுமல்ல…  கி.பி 652 களில் ஆப்ரஹாமின் தேவவடிவமைப்பின்படியான சந்ததிகள் படித்துப் பின்பற்றிவந்த தோறாவிலிருந்து செய்திகளை எடுத்துக் கொண்டு இட்டு கட்டினார்கள் என்பதற்கு இது ஆதாரமல்லவா?

அவர்களுடைய அதே குர்ஆனில் இதே செய்தி

குர்-ஆன் 15: 60 அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்”

65 ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூதுவர்கள் கூறினார்கள்.


அப்படியானால் குர் ஆன் 11: 81 ல் உள்ளபடி

லூத்து குடும்பத்துடன் சென்றாரெனில் மனைவியையும் உட்படுத்தியே சென்றிருக்கிறார். அதனால்தான்.. உம்முடைய மனைவியைத் தவிர உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். என்று சொல்வதாக இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு நேரெதிராக

குர்-ஆன் 15 65 ன்படி  உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். என்று சொல்வதாக எழுதப்பட்டுள்ளது இதில் எது உண்மை?

இதில் ஏதாகிலும் ஒன்று உண்மையாக இருக்க வேண்டும்.

இது குர்-ஆனில் உள்ள செய்தி. எனவே இரண்டும் உண்மைதான் என்பது நியாயமாக இருக்க முடியாது.

தொடர்ச்சியாக அந்த செய்தியை பார்ப்போமானால்....

லூத்தை சந்திக்க அழகிய ஆண்கள் வந்திருக்கின்றனர் என்ற செய்தி ஊருக்குள் பரவியது.

குர் ஆன் 11:78. அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்;. எதற்காக? என்று கேள்வி எழுப்புவோமானால்...
நான் முன்னரே குறிப்பிட்டது போல சோதோம் பகுதியில் இருந்த ஆண்கள் அனைவருமே மிகப்பெரிய அளவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தார்கள்.

அவர்கள் தீய நோக்கத்துடனேயே லூத்துடைய வீட்டுக்குமுன் கூடினார்கள்.


அவர்களை நோக்கி லூத் என்பவர் :-  “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள் இவர்கள் உங்களுக்கு (த் திருமணத்திற்கு) ப் பரிசுத்தமானவர்கள் என்று கூறினார்.  என்று….

குர்-ஆனில் எழுதப்பட்டுள்ளதை படித்து சம்பந்தமே இல்லாத இடத்தில் திருமணத்திற்கு என்ற வார்த்தையை அடைப்புக்குறிக்குள் வைத்திருக்கிறார்களே. என்று அதிர்ச்சி அடைந்தேன்.


அறியாமையினால் குர்-ஆனை இறைவேதமென்று புகழும் முசுலீம்கள் அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் முரண்பாடான வார்த்தைகள் என்னத்திற்கு என்று யோசித்தார்களா?

அடைப்புக் குறிக்குள் இருப்பவை என்னத்திற்கென்றால்..? குர்-ஆனை நன்கு விளங்கிக் கொள்வதற்காக எங்களது அறிஞர்களால் இவை சேர்க்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுவீர்களானால். முசுலீம் மற்றும் முசுலீமல்லாத நண்பர்களே நன்கு புரிந்து கொள்ளுங்கள் இவர்கள் அனைவரையுமே நம் எல்லாரையும் நன்றாக ஏமாற்றுகிறார்கள்.

குர்ஆனை நிதானமாக அர்த்தம் புரிந்து வாசிப்பீர்களானால் அங்கே காணப்படும் பல்வேறு முரண்பாடுகள் உங்களைப் பார்த்து பல்லிளிக்கும். ஏனெனில் முஸ்லீம்களில் அறிஞர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்ட தந்திரக்காரர்களான சிற்சிலக் குழுக்களின் தலைவர்களே முரண்பட்ட செய்திகளை அடைப்புக்குறிகளுக்குள் வைத்து எல்லாத் தரப்பினரையும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.

சோதோமிலுள்ள ஆண்களில் இளைஞர்களும் கிழவர்களும் லூத்தின் இல்லத்திற்குமுன் பெரும் கூட்டமாக கூடி வந்த காரணம் ஒன்றே ஒன்றுதான். அது லூத்தை சந்திக்க வந்துள்ள (தூதர்களுடன்) ஆண்களுடன் ஓரினச் சேர்க்கையின் மூலமாக தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு லூத்து தடைசெய்யாமல் அனுமதிக்க வேண்டுமென்று இப்போது லூத்தை வற்புறுத்துகின்றனர். தனது வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தினர்களுக்கு அவமானம் நேர்ந்துவிடக்கூடாது என்று பதறிய லூத் வெளியில் காத்திருக்கும் அக்கூட்டத்தினரிடம் விருந்தினருக்கு பதிலாக தனது மகள்களை வழங்க முன்வருகிறார்.

எதற்கு? என நாம் கேள்வி கேட்டால்…. திருமணம் செய்வதற்காகவாம்…!!!

லூத் அந்த பட்டணத்து ஆண்களிடம் இருந்து அந்த இரவில் தன்னுடைய விருந்தினர்களை பாதுகாப்பதற்காக விருந்தினர்களுக்குப் பதிலாக தனது மகள்களையே வழங்க முன் வந்துள்ளார். என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே…! திருமணத்திற்காக என்றால் அவர்களுடைய திருமண முறை என்ன?
கதை விடுவதற்கும் ஒரு அளவில்லையா?

தன் வீட்டு வாசலில் கூடியிருக்கும் இவர்கள் பெண்களை நாடுகிறவர்களில்லை என்பது ஏற்கனவே லூத்திற்கு தெரிந்திருக்கக் கூடும். எனவே அப்படிச் சொன்னார் என்றும் இங்கே கருதலாமே ஒழிய திருமணம் செய்ய என்பது இட்டுகட்டுவதிலும் கேடுகெட்ட காரியம்.

கி.பி 650 -களில் குர்ஆனை வடிவமைத்த முசுலீம்களில்;;களுக்கு லூத்து தன்னுடைய விருந்தினர்களுக்கு பதிலாக மகள்களை கொடுத்தான் என்ற செய்தி எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் முசுலீம்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிய செய்தி அது. ஏனெனில் அந்தக்கால முசுலீம்களுக்கு மனைவியர்கள் மட்டுமல்ல எண்ணிக்கையிலடங்காத அடிமைப்பெண்களும் பற்பல வைப்பாட்டிகளும் வைத்திருந்தனர். அது அவர்களின் கலாச்சாரமாகவும் இருந்தது.

அவர்களது வாழ்க்கைமுறையை பாருங்கள் கொலை கொள்ளை கற்பழிப்புகளாகவே இருந்திருக்கிறது. பெண் என்றாலே அது ஒரு போகப்பொருளாகவே அவர்கள் நினைத்திருந்தனர். உதாரணத்திற்கு அவர்களது கதையில் முஹம்மது என்பவர் மெக்கவிலிருந்து சுமார் 80 தோழர்களுடன் குடிபெயர்ந்து மதீனா வந்தபோது மதீனாவிலிருந்த தோழர்கள் மக்காவிலிருந்து வந்தவர்களுக்கு பொருட்களை மட்டுமல்ல தங்களது மனைவியர்களையும் வழங்கி உதவி செய்தனர்.  என்பதை முஸ்லீம்கள் பெருமையாகக் கூறுவதை நீங்கள் காணலாம்.

இந்நாட்களில் இருக்கிற முசுலீம் அறிஞர்?-களோ ஆபாசங்களை தவிர்க்க விரும்பினார்கள். அதற்காகவே அடைப்புக் குறிக்குறிக்குள் மாறுபாடானவைகளை மடக்கி வைத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?