முசுலீம் நண்பர்கள் கவனத்திற்கு...,

எங்களால் அன்புக்குரியவர்களாக எண்ணப்படும் முசுலீம் நண்பர்கள் கவனத்திற்கு..., 

"மனந்திரும்புங்கள்" போலித்தனமான ஒரு மதத்திலிருந்து மனம்மாறுங்கள். என்று அழைக்கிறேன். உங்களுடைய சிந்தனைக்கு ஒரு செய்தி உங்கள் முன்னாள் செதுக்கப்படுகிறது.

முசுலீம்களாக்கப்பட்ட உங்களது நம்பிக்கைக்குரிய மதப்புத்தகம் குர்-ஆன்.

குர்ஆன் கூறும் நெறிமுறைகள் எத்தனை யுகங்கள் கடந்தாலும் வாழ்வியலுக்குப் பொருத்தமானது. எனவே மனிதகுலம் மேன்மையடைய குர்ஆன் கூறும் நெறிமுறைகள் முறைகள் நமது வாழ்வில் இரண்டற இணையவேண்டுமென்று முஸ்லீம்களின் இன்றைய தலைவர்கள் தங்கள் குழுக்களிடம் மட்டுமல்லாமல் மாற்று மதத்தினரிடமும் வற்புறுத்தி வருகின்றனர். 
 
குர்ஆனுடைய வாசகங்களிலுள்ள அடிப்படையான அர்த்தம் எது? என்று உங்களுக்குப் புரியாவிட்டாலும் உங்களுக்கு வெளங்காத அந்த குர்ஆனை முசுலீம்களாகிய நீங்கள் தள்ளிவைப்பது இல்லை. முசுலீமாக நீங்கள் இருப்பதனாலும் குடும்பத்தாருடைய கட்டாயத்தினாலும் குர்ஆனிலிருந்து ஒருசில பகுதிகளையாவது மனப்பாடம் செய்து கொள்வீர்கள். அவ்வப்போது அதை ஓதுவீர். பெரும்பாலும் நீங்கள் சொல்வது சரியா? தப்பா?ன்னுகூட கண்டுபிடிக்க முடியாது. ஏன்னா அது பிராந்திய மொழியில் மனப்பாடம் செய்யப்படுவது இல்லை.

முசுலீம்களாகிய நீங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கை முறைகளை ஏறக்குறைய உங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் எனப்படும் பாரம்பரிய நம்பிக்கைக்குரிய ஆலோசனைகளின்படியே வடிவமைத்துக் கொள்ளுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நீங்களும் எங்களது மதிப்பீட்டை ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

நண்பர்களே ஒரு உண்மையை சொல்லுகிறேன் முசுலீம்களாகிய உங்களிலும் பக்திமானாக தங்களை அறியச் செய்கிற தலைவர்களுக்கே கூட குர்ஆனிய வசனங்களின் பொருள் தெரியாதென்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் மதநம்பிக்கையின்படி உங்களை உங்கள் தலைவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாலேயே தொப்பி கவழ்த்து தாடிவச்ச யார் எதைச் சொன்னாலும் நம்புவீர்கள். அதே நேரம் எங்களைப் போன்றவர்கள் எத்தனை உணமையை பட்டவர்த்தனமாய்ச் சொன்னாலும் நம்ப மாட்டீர்கள். ஆனால் இன்று நீங்கள் நம்பத்தான் வேண்டும். ஏனெனில் நான் சொல்லப்போகிற செய்தி உண்மையானது உங்களுக்கு அவசியமானது.

உங்கள் முசுலீம் தலைவர்கள் தங்களுக்கு குர்ஆனுடைய வசனங்களிலுள்ள யதார்த்தம் தெரியவில்லை என்று என்றைக்கும் கவலைப்பட்டது இல்லை. ஏனென்றால் அவர்கள் ஏதோ ஒரு அணியினரை மனதில் வைத்தேதான் குர்ஆன் வசனங்களை எடுத்து தாக்குவார் சாரி பேசுவார். காரணம் பெரும்பாலான முசுலீம்கள அவர் மதப்பிரசங்கி என்பதைவிட ஒரு குழுபிரசங்கியாகவே இருப்பார். மக்களுக்கும் சரி அவர்களுக்கும் சரி இது வசதியாகவே அமைந்துவிட்டது. எப்படியெனில் அவருக்கு ஏதோ கொஞ்சம் தெரியும் எதிரில் இருப்பவருக்கும் எதுவுமே தெரியாது.

அதனால்.... முசுலீம் மதப்பிரசங்கிகள் குர்ஆனில் நவீன அறிவியல் இருக்கிறது என்பதுமட்டுமல்ல..., தொழில்நுட்பங்கள், அதிநுட்பமான கண்டுபிடிப்புகள், மருத்துவம், வரலாறு, புவியியல், பொருளாதாரம் என்று அனைத்தையும் இருப்பதாக கண்கள்சிவக்க, கழுத்துநரம்புகள் புடைக்க, குரலை உயர்த்தி, குர்ஆன் தெளிவான அத்தாட்சி நேர்வழி உறுதியானது உயிருள்ளது மற்றும் நல்லுபதேசம்... என்றெல்லாம் கதைகதையாய் கத்தி கதறி பர்வையாளர்களை இருக்கைகைகளின் ஓரத்திற்கே கொண்டு வந்து விடுவார்கள். இதன்பலனாக 

மதத்தின் பெயரால்.., மக்களை முட்டாள்களாகவும், முரடர்களாகவும் மாற்றுவது அவர்களுக்கு நல்ல வருமானத்தைத் தந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்களது அர்த்தமற்ற உபதேசத்தில்.., நீங்கள் அற்ப்புதம் என்று கருதும் குர்ஆன் வாசகங்கள் வெளிப்படவே படாது.
உதாரணமாக :-
.... இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான் (குர்ஆன் 4:24)

(ஆனால்), அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். (குர்ஆன் 23:6)   இந்தக் குர்ஆன் வசனம் என்ன போதிக்கிறது?

நமது அன்றாட பேச்சு நடையில் சொல்வதென்றால்... அவனவன் தன்தன் திறமையின்படி ஏராளமான பெண்களை வைத்துக் கொள்ளுவதால் அல்லா கேலிகின்டல் செய்யமாட்டானாம். இது உங்களுக்குப் புரிகிறதா? 

இன்றைய நாகரீக உலகிலும் மனைவியைத் தவிர்த்து வேறொரு பெண்ணை நாடிச் செல்லாதவர்கள் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் மட்டுமல்ல... எல்லா இன மொழி மக்களிலும் இருக்கின்றனர். ஒழுக்க நிலையிலிருப்பவர்களுக்கு இந்தக் குர்ஆன் வசனத்தினால் என்ன பிரயோஜனம்? உண்டு....!!!

முசுலீம்களாகிய உங்களுடைய தலைவரென்று நம்பப்படுகிறவர் முதிர்ந்த வயதில் சாகும்வரைக்கும் பெண்களை சொந்தமாக்கிக் கொண்டேயிருந்தாரென்று உங்ககளுடைய பாரம்பர்ய கதைகள் கூறுகிறதே..? நீங்கள் அதை நம்புகிறீர்கள்தானே அப்படியானால்... அந்த தலைவரை பின்பற்றும் முசுலீம்கள் அவர்பாதையில் நடப்பதுதானே சரி. அதுதானே பின்னடியார்களுடைய கடமை என்று கருதமுடியும். அப்படி வாழ்கிறவர்கள் ஒழுக்கநிலையில் வாழவில்லை என்று சொல்லலாமா? கூடாதா? அவசியமான நேரம் தவிர்த்து மற்றநேரங்களில் புலனை அடக்கி வாழ்வது தவறா? தவறில்லை அதுதான் சரி என்றால் மதம் இனம் மொழி தவிர்த்து ஒழுக்கமாக வாழ்பவர் அந்த முசுலீம் தலைவரைவிட சிறப்பானவர் அல்லவா?

நிச்சயமாக ஒழுக்கமுடையோர் எவராக இருந்தாலும்.. குர்ஆனின் இவ்வனுமதிகளை அதாவது பலமனைவிகளுடன் தன் இஷ்டப்படி வாழ்வதை ஏற்றுக்கொள்ளமாட்டான்.

ஒருவேளை அந்த நாட்களுக்கு அது பொருந்தும். இன்று நீங்கள் எதை சரி என நினைக்கிறீர்களே..!!! அதை செய்யுங்கள். என்று முசுலீம் மதபோதகர்கள் சொல்லுவார்களானால்... குர்ஆன் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது என்று முழங்குவது குற்றமல்லவா? என்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. குர்ஆனின் இப்படிப்பட்ட அனுமதிகள் இந்த நாட்களில் ஒத்துவராது என்று சொன்னால் குர்ஆனின் வசனங்களை புனிதமானவைகள் என்றும் கூறக் கூடாது என்றே ஆலோசனை கொடுக்கிறேன்.

தனிமனிதனுக்கோ அல்லது ஒரு சமுதாயத்திற்கோ எவ்வகையிலும் பயனற்ற செயல்படுத்த இயலாத இவ்வசனங்களை புத்தகத்திலும் மனதிலும் பதித்து வைப்பதால் எவ்வித பயனும் இல்லை.

அதனால்தான் நண்பர்களே.., அன்புடன் அழைக்கிறோம்.
மனந்திரும்புங்கள்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?