Posts

Showing posts from February, 2017

ஒரு குரல் பதிவு வேகமாக பரவி வருகிறது.

Image
கிறிஸ்துவில் பிரியமான சகோதர, சகோதரிகளே உங்கள் நிமித்தமாக கர்த்தரைத் துதிக்கிறேன். தற்போது சமூக வலைத்தளங்களில் குறிப்பாக " What's App " -பில் தன்னை இந்து என்று அறிவித்துக்கொள்ளும் ஒருவர் கிறிஸ்தவர்களிடம் பேசி விவாதிக்கும் ஒரு குரல் பதிவு வேகமாக பரவி வருகிறது. அந்தக்குரல் பதிவில் பேசுகிறவர் தனது பெயர் குமார் என்றும் தன்னை ஒரு வக்கீல் என்றும் சொல்லுகிறாா். இந்த இந்து நண்பர், தான் வேறு பல கிறிஸ்தவ நண்பர்களிடம் பேசி தோற்றுப் போன குரல் பதிவுகளை வெளியிடாமல், தான் திறமையாய் பேசின அதாவது, எதிரே பேசுகிற கிறிஸ்தவரை பேச விடாமல், திறமையாக பேசி விட்டதாக நம்புகிற குரல் பதிவுகளை மட்டும் வெளியிட்டு பரப்புரை செய்து வருகிறார். இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி என்னவெனில், நாம் நம்முடைய கிறிஸ்தவ மார்க்கம் சார்ந்த ஜனங்களை தனி மனிதனுக்கு பக்கமாக திருப்புகின்ற வித விதமான ஜெபங்கள், ஆடல்கள், பாடல்கள், பற்பல ஆராதனைகள் போன்றவைகளை மட்டுமே போதித்து நடத்துவதை குறைத்துக்கொண்டு, வேத சத்தியத்தையும், வரலாற்றையும், பிற மதங்களின் தோற்றம், உருமாற்றம், வளர்ச்சிகளையும்

கர்த்தர் எனக்காகக் கொடுத்த இடம் .

Image
☝காய்கறிகள் விற்கும் கடை ஒன்று இருந்தது. அதில் ஜோசப் என்ற மனிதர் இருபது ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருந்தார். அந்தக் கடையின் முதலாளி அவரது உழைப்பையும் , நேர்மையையும் வெகுவாக நேசித்தார். அங்கு பணிபுரிந்தவர்களிலேயே அவர் மட்டுந்தான் கிறிஸ்தவர். அவரது உணர்வுகளை முதலாளி மதித்தார். கடை திறக்கும்போதும் , மூடும்போதும் , வேறு சில பண்டிகை நாட்களிலும் செய்யப்படும் எந்த சடங்குகளிலும் அவர் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அன்று மட்டும் யாருக்கும் விடுமுறை அளிப்பதில்லை. ஆனால் அவருக்கு மட்டும் ஆலயம் செல்வதற்காக , ஒவ்வொரு வாரமும் விடுமுறை அளிக்கப் பட்டது . கர்த்தர், தன்னுடைய வேலை ஸ்தலத்தில் தனக்குக் கிடைக்கும்படி செய்திருந்த சலுகைகளை எண்ணி அவர் அடிக்கடி கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்.  முதலாளி ஒரு நாள் இறந்து போனார் . அவருடைய இடத்தில் அவருடைய மகன் இருந்து கடையை நிர்வகிக்கத் தொடங்கினான். வந்த முதல் நாளிலேயே ஜோசப் , அவன் கண்களுக்கு நெருடலாகத் தெரிந்தார் . கடையில் நடக்கும் சடங்குகளுக்கு அவர் விலகியிருப்பதும் , நல்ல வியாபாரம் ந

சமஸ்கிருதத்தில் “அல்லா” என்றால், அம்மா என்று பொருளாம்..!

அல்லா உபநிஷடம் அல்லது அல்லாவுபநிஷத் (1650 CE): அல்லா உபநிஷடம் அல்லது அல்லாவுபநிஷத் என்பது அக்பரது காலத்தில், குறிப்பாக அக்பர் “தீன்-இலாஹி” என்ற மத்தை உருவாக்க, பல மதங்களைச் சார்ந்த குருமார்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த வேளையில் தோன்றிய சிறிய சமஸ்கிருத நூலாகும். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அரேபி சாயலுடன், அல்லா, நபி போன்ற வார்த்தைகளுடன் சுலாகங்கள் போல உருவாக்கப்பட்டிதது. அல்லா உபநிஷடம் அதர்வணவேதத்தில் உள்ளது என்று அக்பரிடம் சில காஜிகள் சொல்லி அதனை ஊக்குவித்தனர். ஆனால், பிறகு தான் தெரிந்தது, அது சமஸ்கிருதத்தில் ஒரு போலி உபநிடதம் என்று மேலும், அது அக்பரை “நபி” என்று விவரிக்கிறது. இது ஆசார இஸ்லாத்திற்கு எதிரானது. அக்பர் தனது மதமான “தீன்-இலாஹி” பற்றிய விவாதங்களில், தன்னை அம்மதத்தின் காரணக்கர்த்தாவாக காட்ட வேண்டும் என்றாதால், சில முஸ்லிம் பண்டிதர்கள் அவ்வாறான போலி உபநிடதத்தை உருவாக்கினர். அதனை இந்துக்கள் படிக்கும் போது, அல்லாவே மித்ர, வருண என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளதால், அதனை நம்பி, மதம் மாறுவர் என்று அவ்வாறான நூலை எழுதினர். அக்பரின் கொடுமையான சித்திரவதை தண

KRM சபையின் இவ்வார நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள்

ஞாயிறு மாலை 7 மணிக்கு தெற்கு கள்ளிகுளம், மீன் சந்தை அருகிலுள்ள சகோ.ருபேந்திரன் வீட்டில் வீட்டுக் கூட்டம். 28-02-2017 செவ்வாய்கிழமை மாலை 7 மணியளவில், தெற்கு கள்ளிகுளம் ஓடைத்தெருவில் உள்ள சகோ.கார்லோஸ் ஜோசப் அவர்கள் வீட்டில் வீட்டுக் கூட்டம் 01-03-2017 புதன்கிழமை - நமது K.R.M சபையில் காலை 6 மணி முதல் 7-15 வரை, புதிய மாத துவக்க ஆசீா்வாத ஆராதனை. அதே நாளில், வடக்கன்குளம், சகோ.ஆனந்த் அவா்கள் வீட்டில் கூடி வருபவா்களுக்கான வேதபாட வகுப்பு (Bible Study) 04-03-2017சனிக்கிழமை (உள்ளுா் சிறப்பு விடுமுறை) காலை 10 மணி முதல் மதியம் 01 மணிவரை சிறப்பு Bible study நடைபெறும். முக்கிய அறிவிப்பு : சனிக்கிழமை கூடுகையில் வாலிபர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீா்கள். 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை : பரிசுத்த ஆராதனையும் தொடா்ந்து கா்த்தருடைய பந்தியும் நடைபெறும், மதிய உணவுக்குப்பின் Work shop நடைபெற இருக்கிறது. ஏதேனும் கேள்விகள் இருந்தால், அதற்கான பதிலை பெறவேண்டுமென்ற ஆவலோடு வாருங்கள். எல்லாவற்றிற்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். கா்த்தருக்கு ஸ்தோத்திரம். தொடா்புக்