இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?

இரட்சிப்பு என்பதை நாம் பல்வேறு வடிவங்களில் காண நோ்ந்தாலும், இறுதியாக ஆவிக்குரியதாகவே முழுமைப்படுத்தப்படுவதை காணலாம்.

கா்த்தா் செய்கின்ற எந்த மீட்பாக இருந்தாலும் அதை பரிசுத்த வேதாகமம் இரட்சிப்பு என்றே அடையாளப்படுத்துகிறது. அதை மட்டுமே குறிப்பிட்டு அழுத்தமாய்ச் சொல்லுகின்ற இடங்களில் எல்லாம் தேவனாகிய கா்த்தா் மனிதனை பாவத்திலிருந்து நீக்கி சுத்திகாிக்கின்ற மீட்பையே குறிக்கின்றது.

பழைய ஏற்பாட்டில்,

எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலை கடந்து சென்றதை இரட்சிப்பு என வேதம் குறிக்கிறது. யாத் 14  : 13

எதிரிகளை  அழித்து இஸ்ரவேலருக்கு கொடுத்ததையும் இரட்சிப்பு என்றே காண்கிறோம். யாத் 15  :2

சத்துருக்களின் கைகளிலிருந்து தமது ஜனங்களை நீங்களாக்கவும், இழந்த உரிமையை பெற்றுக் கொடுக்கவும் தேவனாகிய கா்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சகரை அனுப்புகிறார் என்பதையும் காணலாம். நெகே 9 :27

இஸ்ரவேல் ஜனங்களை சத்துருக்களிலிருந்து மீட்கப்படுவதைவிட அநியாயத்தினின்றும், தீமையினின்றும், மீட்கப்படுதலைப் பற்றி தீா்க்கதரிசிகள் அதிகமாக போதித்தார்கள். மேலும், 

ஜனங்களிடத்தில் நீதி பரிபூரணமாக விளங்கும்போது இரட்சகருடைய இராஜ்ஜியம் தேவ ஜனங்களுக்குள்ளே பற்றி பரவும் என்ற அறிவிப்பை ,

எரே 31 : 31 முதல் படித்தால், “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.
32. நான் அவர்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல.  ஏனெனில், நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
33. அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது. நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

34. இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை. அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

என்பதும் இரட்சிப்பின் வகையிலே வருவதை இந்த வசனங்களில் காணலாம்.

இதேவிதமான இரட்சிப்பு இஸ்ரவேல் அல்லாத ஜனங்களுக்கும் அருளப்படும். என்பதை ஏசாயா 45 21 .....கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை. என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.

22. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள். அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள். 

நானே தேவன், வேறொருவரும் இல்லை.

23. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும்,  நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன். இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது. இது மாறுவது இல்லையென்கிறார். என்பதன் மூலம் இரட்சிப்பு பூமியின் எல்லையெங்குமுள்ளவா்களுக்கு உண்டாகும் என்கிறார்.

இப்படிப்பட்ட வேத அறிவிப்புகளினால்தான், இஸ்ரவேலுக்கு ஆறுதலைக் கொண்டு வருகிற இரட்சகரை நோக்கி காத்திருந்தார்கள் லூக் 2: 25, 26 ல் 

காணப்படுகின்ற சிமியோன்  அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. ஆக 

இரட்சிப்பு என்பது சத்துருக்கள் மத்தியிலிருந்து விடுவிப்பது என்பதிலிருந்து சுயகிரியைகளை நிதாணிப்பதில் பயணித்து தேவனால் அவருடைய குமாரன் மூலமாக பாவத்திலிருந்து பெறப்போகும் இரடசிப்பைக் குறிக்கிறது.

புதிய ஏற்பாடில், இரட்சிப்பை - கிரேக்க மொழியில் Soteria என்று காண்கிறோம்.

இது ஆரோக்யம் அல்லது அடிமை வேலையிலிருந்து விடுவிப்பது (அப் 7:25) போன்ற சரீர சம்பந்தப்பட்டதையே அதிகமாக குறித்தாலும், பெரும்பாலும், இயேசுகிறிஸ்து செய்த பாவத்திலிருந்து மீட்பை குறிப்பதற்கே அதிகமாகப் பயண்படுத்தப்பட்டுள்ளது.

இயேசுகிறிஸ்து இரட்சகா். லூக்  2 : 11
இயேசுகிறிஸ்து இரட்சிக்கிறவா் மத் 1 : 21
இயேசுகிறிஸ்து நம்மை இரட்சிக்கவே வந்தார். லூக் 19 : 10
இயேசுகிறிஸ்து அதிபதியும் இரட்சகருமானவா் அப் 5 : 21
இயேசுகிறிஸ்தவாலே அன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை அப் 4 : 12
இயேசுகிறிஸ்து வின் மரணமும் உயிா்த்தெழுதலும் மனிதா்களுடைய இரட்சிப்புக்காகவே நிகழ்ந்தது. ரோமர் 5 19 அது மட்டுமல்ல..,

சுவிஷேசத்தினால் உண்டாகும் அத்தனை நன்மைகளையும் இரட்சிப்பு என்ற வார்த்தையினாலே அடையாளப்படுத்தினார்கள். அவை பிலி 1:19 , எபி 2:3 . 1பேது 1:9 போன்ற வசனங்களிலும் கண்டு கா்த்தரை மகிமைப்படுத்துங்கள். 

கா்த்தர் உங்களை இரட்சித்து காத்து ஆசீர்வதிப்பாராக. ஆமென்
 




Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.