ஆசிரியர்கள் வேண்டும்..! தேடிக்கொண்டு இருக்கிறேன்...!

கர்த்தர் தந்த நல்ல நண்பர்களுக்காக, கர்த்தரை துதிக்கிறேன்.

கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையினர்களாக இருக்கின்ற ஒரு கிராமத்தில் கர்த்தருடைய அழைப்பின்பேரில் ஊழியத்தை துவங்கின நான். இதுவரை..,

பல சவால்களை, போராட்டங்களை, விவாதங்களை, விதண்டாவாதங்களை நேரிலும் மறைமுகமாகவும் பலமுறை.... பல முறைகளில் சந்தித்து இருக்கிறேன்..., சந்தித்து வருகிறேன். முன்னதாக,

பிறப்பால் பெந்தகோஸ்தே சபைக்காரன் என்று நான் அடையாளம் காணப்பட்டாலும் வழிமுறையாக பெந்தகோஸ்தேக்காரன் ஆகிவிடவில்லை. அதாவது, என் பெற்றோர் கிறிஸ்தவர்களாக இருப்பதால்.., நான் கிறிஸ்தவனானவன் இல்லை.

இரட்சிக்கப்படாத துன்மார்க்கமான உறவினர்களுடன் பழகி வாழுகின்ற சுதந்திரமான நிலை எனக்கு ஏற்பட்டது. அப்படி வளரும் நிலை ஏற்படுத்திக் கொண்டேன்.., வாழ்ந்தேன்.

அவ்வப்போது அனைத்து மதங்களையும் சபைப்பிரிவுகளையும் குறித்த கேள்வி என்முன் எழுப்பப்பட்டபோது, எழுந்தபோது, அவைகளை ஆய்வு செய்ய விரும்பினதினால்.., என்னாலானமட்டும் ஆய்ந்தேன்.நிறைவாக

கற்றுக்கொண்டேன் என்று அல்ல.. இவை போதும் என்று நினைக்கவில்லை என்கிறேன்

இன்னும் அறியவேண்டும் கற்க வேண்டுமென்றே விரும்புகிறேன்.இங்கே



இதோ இங்கொரு நண்பர் அதாவது இப்புகைப்படத்தில் காணப்படும் நண்பர் என் பக்கத்தில் வேகவேகமாக நுழைந்தார். நானும் இவரிடமிந்து ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா? என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன். மற்றவர்களை கவனித்ததுபோல் அல்ல இவரை நிறைய கவனித்தேன். தொடர்ந்து இருப்பார் நிலைத்திருப்பார் என்று நினைத்தேன் ஆனால்..,

இன்று காலையில் என்னை ஏமாற்றி விட்டார். அதாவது, இன்று இவர் என்னை Block செய்துவிட்டு ஓடிவிட்டார். மீண்டும் சொல்லுகிறேன்.  கர்த்தர் என் ஆசிரியரும் பரிசுத்த வேதாகமம் என் பாடமுமாக இருக்கிறது. என்றாலும்..,

நான் கற்றவைகளை பகிர்ந்து கொள்ள.., அவைகளில் மேலும் பல விளக்கங்களை அறிந்து கொள்ள எனக்கு மாணவர்கள் அல்ல.., ஆசிரியர்கள் வேண்டும் எனவே, தேடிக்கொண்டு இருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?