ஜாமக்காரன் (2013 ஏப்ரல்) ல் வெளியான தசமபாக வழக்கு ஒருதலைப்பட்சமாகத் தெரிந்ததால்..,- 001

கர்த்தருடைய ஊழியத்தை சென்னையில் திருமுல்லைவாயல் என்ற பகுதியில் சிறப்பாக செய்து வருகிற பாஸ்டர் செல்லத்துரை அவர்கள் ஜாமக்காரன் என்ற பத்திரிக்கையில் தசமபாகத்தைக்குறித்து டாக்டர் புஷ்பராஜ் என்பவர் தவறாக எழுதியதற்கு மறுப்பு தெரிவித்தும் சத்தியத்தை சரியாகவும் எழுதியிருக்கிறார்.

அந்தக் கட்டுரையை பாஸ்டர் செல்லத்துரை அவர்களின் அனுமதியோடு தொடராக வெளியிடுகிறேன். இதை தேவனுடைய ஊழியர்களும் விசுவாச ஜனங்களும் படித்து பயண்பெறுங்கள். ஜனங்களை வஞ்சகத்திலிருந்து தப்புவித்து அவர்கள் ஆசீர்வதிக்கப்பட உதவிடுங்கள். ஆமென். ஆமென்.

இனி பாஸ்டர் செல்லதுரை அவர்கள்..,

கடந்த ஏப்ரல் 2013 ஜாமக்காரன் பத்திரிக்கையில் வெளிவந்த தசமபாகம், ஒரு நீதிமன்ற வழக்கு என்ற தலைப்பிட்டு யாரோ ஒரு சகோதரர் மூலம் மின்னஞ்சலில் பெறப்பட்ட ஒரு அற்புதமான (ஜாமக்காரன் கண்களுக்கு) நாடகத்தை தமிழில் மொழியாக்கம் செய்து ஜாமக்காரனில் வெளியிட்டிருந்ததை எனது திருச்சபை விசுவாசி ஒருவர் பதிவிறக்கம் செய்து கொண்டு வந்து தந்தார்.

அதைப் படிக்கையில் நாடகம்ஜோராக இருந்தது என்றாலும் சத்தியம் ஒருதலைப்பட்சமாய் விவரிக்கப்பட்டு, தசமபாகம் வாங்குவதே தவறு, சட்டவிரோதம், மோசடி என்பது போன்ற வாசகங்களுடன் தசமபாகம் வாங்குகிற பெந்தெகொஸ்தே ஊழியர்கள் யாவரும் ஏமாற்றுக்காரர்கள் எனவும் நயங்காட்டி ஜனங்களுக்கு போதனை செய்து தசமபாகம் பெறுவதாகவும், கொடாவிடில் தேவனுடைய சாபம் வரும் என்று மிரட்டி மக்களை வஞ்சிப்பதாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளதை வாசித்து நானும் அத்தகைய குற்றவாளிகளில் ஒரு வன் என்பதை மனதில் கொண்டு, இந்த கற்பனை நீதிமன்ற வழக்கில் பாஸ்டர் ஜோன்ஸ் அவர்களுக்கு சரியான தீர்ப்பு கீழ்கோர்ட்டில் கிடைக்கவில்லை என்று அறிந்து,

மேல் கோர்ட்டுக்கு அப்ளை செய்ததுபோல பாவித்து, மேற்படி ஜாமக்காரனில் குற்றம் சாட்டியுள்ள அனைத்து ஆதாரங்களிலும் தசமபாகம் வாங்குகிற தேவஊழியர்கள் எவருமே குற்றவாளிகள் இல்லை என்பதை வேத ஆதாரத்துடன் நிரூபித்து வழக்கை நடத்தியுள்ளேன், எழுதியுள்ளேன்.

திரு. டாக்டர் புஷ்பராஜ் அவர்களுக்கு, அவரது ஜாமக்காரனில் வெளி
வந்த மேற்படி வழக்கு விசாரணையைப் படித்த ஒரு ஊழியர்கூட தங்கள் பக்கத்துக்கு ஆதாரவான சத்திய வசனங்களை எழுதுவதற்கு பதில், அவரைத் திட்டியும், சாபமிட்டும் கடிதம் எழுதினதாகப் படித்து மிகவும் வேதனைப்பட்டேன். ஒருவர்கூட தசமபாகம் வாங்குவது சரி என்று கூறும் வேத வசனங்களையோ விளக்கத்தையோ கொடுக்காதது பெந்தெகொஸ்தேகாரர்களுக்கு சத்தியமே தெரியவில்லை என்ற தவறான கருத்தை உறுதிப்படுத்துவது போலாகிவிட்டது.

டாக்டர் புஷ்பராஜ் அவர்களுக்கு தெரிய வேண்டிய சத்தி யத்தை நானாவது எழுத வேண்டும் என்று இந்த வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுபோய்... விசாரணையை மணவாட்டி வாசகர்களும் படித்து அறியும் வண்ணம், தசமபாகம் வாங்குகிற ஊழியர்கள் சத்தியத்தை சரியாய் புரிந்து கொண்டு தைரியத்தோடு ஊழியம் செய்ய இது பயனளிக்கும் என்ற உறுதியோடு மணவாட்டியிலும் வெளியிட்டிருக்கிறேன்.

கர்த்தர் தாமே தமது வேதத்தை வெளிச்சமிட்டு காட்டுவாராக. வாசியுங்கள் ! சிந்தியுங்கள் ! ஜெயம் பெறுங்கள் !

 தசம பாகம் ஒரு வழக்கு - ஒரு நாடகம்.
இந்த நாடகத்தில் வரும் நீதிபதி,  பப்ளிக் பிராசிக்கூட்டர்  அரசு வக்கீல், பாஸ்டர் ஜோன்ஸ் மற்றும் திருச்சபை விசுவாசி டைட்டஸ் என அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையே. 
இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்படாமல் தேவ ஜனங்களை பண்படுத்தும் நோக்கத்தோடே எழுதப்பட்டு வெளியிடப்படுகிறது.
ஏற்கெனவே ஜாமக்காரன் பத்திரிக்கையில் (ஏப்ரல் 2013) வெளியான தசமபாகம் ஒரு நீதிமன்ற வழக்கு என்ற தலைப்பில் வெளியான இந்த நீதிமன்ற விசாரணை நாடகம் ஒருதலைப்பட்சமான தீர்ப்பாகத் தெரிந்தபடியால், பாஸ்டர் ஜோன்ஸ் தனக்கு சரியான நீதி கிடைக்கப்படாததால் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு விசாரணை விபரம் வருமாறு.


இடம் : உயர் நீதிமன்றம்.

நேரம் : காலை 11.00 மணி


பாத்திரங்கள் : உயர் திரு நீதிபதி அவர்கள் அரசு வழகக்குஞைர் மற்றும் பாஸ்டர் ஜோன்ஸ் மற்றும் விசுவாசி டைட்டஸ் ஆகியோர்.

நீதிபதி : இவ்வழக்கு ஏற்கனவே கீழ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு நியாயங்களை சரிவர எடுத்துரைக்க கால அவகாசம் கொடுக்கப்படாதபடியால் பிரதிவாதி உயர்நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்துள்ளார். ஆகவே இவ்வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மிஸ்டர் பப்ளிக் பிhசிக்கியூட்டர் நீங்கள் வழக்கை விசாரணை செய்யலாம்.


அரசு வக்கீல் : இங்கே குற்றவாளியாகக் கூண்டில் நிற்கிற பாஸ்டர் ஜோன்ஸ் அவர்கள்...


பாஸ்டர் ஜோன்ஸ் : அப்ஜெக்ஸன் யுவர் ஹானர். நான் இந்தக் கூண்டிலே நிற்பது விசாரணைக்காகத்தானேயல்லாமல் நான் குற்றவாளியல்ல... என்னை பப்ளிக் பிராசிக்கூட்டர் குற்றவாளி என்று சொல்வதை நான் ஆட்சேபிக்கிறேன்.


அரசு வக்கீல் :- ஐயாம் சாரி பாஸடர் ஜோனஸ். நான்  கூண்டைத்தான் குற்றவாளிக்கூண்டு என்கிற பொருளில் சொன்னேனே தவிர தங்களையல்ல...


நீதிபதி : சரி விசாரணைக் கூண்டில் நிற்கிற பாஸ்டர் ஜோன்ஸ் என்று இனி சொல்லிவிடுங்களேன்.


அரசு வக்கீல் : யெஸ் யுவர் ஹானர். இந்த விசாரணைக் கூண்டிலே நிற்கும் பாஸ்டர்  ஜோன்ஸ்  அவர்கள் இறைவன் பெயரைச்சொல்லி கடந்த 20 ஆணடுகளாக தன் சபையாரின் வருமானத்தில் 10-ல் ஒரு பங்கை தசமபாகம் என்கிற பெயரில் பெற்றதாகவும், தசமபாகம் தருபவர்களை இறைவன் ஆசீர்வதிப்பார் என்று நயங்காட்டியும் அப்படி தசமபாகம் தராதவர்கள் மீது தேவனுடைய கோபம் வருமென்று மிரட்டியும் தசமபாகம் பெற்று வந்ததாகவும் பாதிக்கப்பட்ட திருச்சபை விசுவாசி டைட்டஸ் இவர் மீது குற்றம்சாட்டி பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இப்படி கடவுளின் திருப்பெயரால் மக்களை ஏமாற்றுவதும் பணம் பறிப்பதும் சட்டப்படி குற்றம். உங்கள் மீது சாட்டப்பட்ட இந்தக் குற்றங்களை பாஸ்டர் ஜோன்ஸ் அவர்களே, ஒப்புக் கொள்கிறீர்களா ?


பாஸ்டர் ஜோன்ஸ் : கனம் நீதிபதியவர்களே, இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். வன்மையாக கண்டிக்கிறேன். எமக்கு இறைவன் அருளிய வேதம் எதைச் சொல்கிறதோ அதையே நான் மக்களுக்கு போதித்து வருகிறேன். ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் கொடுத்தான். தேவன் அதினிமித்தம் அவரை ஆசீர்வதித்தார். அவர் மிருகஜீவன்களும், வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தார். என்று வேதம் சொல்கிறது. அதைத்தான் நான் பிரசங்கித்தேன்.


அரசு வக்கீல் : அது சரியல்ல பாஸ்டர் ஜோன்ஸ், ஆபிரகாம் தசமபாகம் கொடுத்த பிறகல்ல, கொடுக்கு முன்னமே ஆதி 13: 2-ல் வெள்ளியும் பொன்னுமுள்ள  சீமானாயிருந்தான் என்று வேதம்  சொல்லுகிறது. தசமபாகம்  கொடுத்ததாலதான் ஆசீர்வதிக்கப்பட்டார் என்று சொல்வது சரியல்ல.


பாஸ்டர் ஜோன்ஸ் : அதை நான் மறுக்கவில்லை யுவர் ஹானர். ஆனால் ஆபிரகாமுக்கு அத்தகைய பொன்னும் வெள்ளியும் எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தார்கள்? 12-ம் அதிகாரத்தில் தேவன் ஆபிரகாமைப் பார்த்து உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பன் வீட்டையும் விட்டு புறப்பட்டு நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்குப் போ என்ற தேவ கட்டளையைக் கேட்டு புறப்பட்டுவந்த ஆபிரகாமின் பக்தியை ஆண்டவர் கண்டு, அவரை ஆசீர்வதித்த விதம் அவருக்கு ஆடுமாடுகள், ஆஸ்தியும் பெருக காரணமாயிருந்தது.


அரசு வக்கீல் : அதாவது... ஆபிரகாமின் உடனடி கீழ்படிதலுக்கு தேவன் தந்த ஆசீர்வாதம் அது, தசமபாகம் கொடுத்ததால் அவை வரவில்லை என்று ஒத்துக் கொள்கிறீர்கள் அப்படித்தானே ?


பாஸ்டர் ஜோன்ஸ் : யுவர் ஹானர், ஆபிரகாம் வெள்ளியும் பொன்னுமுள்ள சீமான் என்பது 13-ம் அதிகாரத்திலேயே கூறப்பட்டுள்ளது. ஆபிரகாம் 14-ம் அதிகாரத்தில் தான் தசமபாகம் கொடுத்ததாக வாசிக்கிறோம். ஆகவே தசமபாகம் கொடுத்ததால் ஆபிரகாம் ஆசீர்வதிக்கப்படவில்லை, என்று அரசு வக்கீல் சிந்திக்கிறார். இது சட்டம் படித்தவரின் சிந்தனை. ஆனால் வேதம் படிந்த எனக்கு என்ன தெரிகிறது, ஆதி 12-ம் அதிகாரத்தில் நாட்டையும் வீட்டையும் விட்டு புறப்பட்டு வந்த ஆபிரகாம் பெத்தேலில் பலிபீடம் கட்டி தேவனை தொழுதுகொண்டார் என்று வாசிக்கிறோம்.


அரசுவக்கீல் : அங்கே தொழுது கொண்டான் என்றுதான் எழுதப்பட்டுள்ளது தசமபாகம் செலுத்தினதாக எழுதப்படவில்லையே.


பாஸ்டர் ஜோன்ஸ் : அரசு வக்கீல் அவசரப்படுகிறார் மைலார்ட். தொழுது கொண்டார் என்பதில் காணிக்கை செலுத்தவில்லை என்று நினைக்கக்கூடாது. ஆடு மாடுகளை பலி செலுத்துவதும் காணிக்கை செலுத்தினதாகத்தான் அர்த்தம். அவர் எதை காணிக்கையாகப் படைத்தாரோ அதைத்தான் தேவன் வர்த்திக்கப்பண்ணினார். ஆகவே ஆடுமாடுகள் ஏராளமாய்ப் பெருகினபடியால்வெள்ளியும், பொன்னும் அவைகளால் ஆபிரகாமுக்கு கிடைத்தன. அதனால் ஆபிரகாம் பெரிய சீமானானார்.


அரசு வக்கீல் : அப்ஜெக்ஷன் யுவர் ஹானர். பாஸ்டர் ஜோன்ஸ் தனக்கு சாதகமாக வேதத்தை மாற்ற முயற்சிக்கிறார். ஆபிரகாம் பலி செலுத்தியிருந்தால் ஆடுமாடுகள்தானே பெருகியிருக்க வேண்டும். ஆபிரகாம் பொன்னும் வெள்ளியு முள்ள சீமானாய் எப்படியானார் என்று பாஸ்டர் ஜோனஸ்  கூறுவீரா?


பாஸ்டர் ஜோன்ஸ் : சொல்கிறேன் யுவர் ஹானர். அரசு வக்கீல் நெல்சாகுபடி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். விளைந்த நெல்லை விற்காமல் வைத்திருப்பாரா யுவர் ஹானர் ? விற்றால், அவர் கையில் பணம் இராதா ? பணம் இருந்தால் பொன், வெள்ளியெல்லாம் வாங்கமாட்டாரா? ஆபிரகாமின் பொருளாதார ஆசீர்வாதம் தசமபாகம் கொடுத்ததினால் வந்தது அல்லவென்று சொல்ல முடியுமா ? அரசு வக்கீல், வாதம் மட்டும் செய்தால் போதாது. வேதத்தையும் விசுவாசிக்க வேண்டும்.

நீதிபதி :- நீங்கள் என்ன சொல்ல வறுகிறீர்கள்?  - தொடரும்..

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?