தசமபாக வழக்கு ஒருதலைப்பட்சமாகத் தெரிந்ததால்..,- 003


தசமபாகம் ஒரு வழக்கு 003
------------------------------------


அரசு வக்கீல் : அப்பொழுதுதான் ஆலயங்களோ, லேவியரோ இல்லையே. எப்படி பொருத்தனையை யாக்கோபு நிறைவேற்ற முடியும் ?

பாஸ்டர் ஜோன்ஸ் : நீங்கள் யாக்கோபின் காலத்தில் ஆலயமோ, லேவியரோ இல்லை என்றீர்கள். அதுபோல லேவியரும், ஆலயமும் இருந்த காலத்தில்இவைகள் செலுத்தப்பட்டன என்பதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். அப்படித்தானே...,

அரசு வக்கீல் : நான் ஒப்புக் கொள்கிறதல்ல, வேதம் அப்படிக் கூறுகிறதா?
 

பாஸ்டர் ஜோன்ஸ் : ஆம், தேவன் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வில் இடைபட்ட பொழுது ஆபிரகாமையும் சரி, யாககோபையும் சரி அவர்களின்; விசுவாசத்திற்கேற்றபடி ஆசீர்வதித்து வந்தவர், அவர்கள் ஒரு ஜனக்கூட்டமாய் ஒரு ராஜ்யமாய் கானானில் குடியேறியபொழுது, இஸ்ரவேலின் 12 கோத்திரங்களிலும் லேவி கோத்திரத்தை ஆசரிப்புக்கூடாரப் பணிவிடை செய்ய தேவன் தமக்காக தெரிந்தெடுத்து, அவர்களுக்கு மற்ற 11 கோத்திரத்திற்கும் கொடுத்ததுபோல, தேசத்தில் (நிலத்தில்) சுதந்தரம் தராமல், தேசத்து நிலத்தில் விளையும் அனைத்து; விளைவுகளிலும் தசமபாகத்தை பிரிதது (எண்; 18: 21, உபா 10: 9,10, 12: 6, 17 14: 22, 23) மற்ற 11 கோத்திரத்தாரும் லேவியருக்கு கொடுத்து வரவேண்டுமென தேவன் கட்டளையிட்டார். 
அதையே இஸ்ரவேல் ஜனங்கள் நிறைவேற்றி வந்தார்கள் என்றும் லேவியர் சமஸ்த இஸ்ரவேல் ஜனங்களின் சேமத்துக்காக பலி செலுத்துவதும் பாவ நிவர்த்திபண்ணுகிறதுமான ஆலயப்பணிவிடைகளைச் செய்து வந்தார்களென்றும் வேதத்திலே சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்குகள் கட்டளையாக்கப்பட்டு மோசே யோசுவா காலத்தில் பயபக்தியுடன் பின்பற்றப்பட்டது மட்டுமல்லாமல், ராஜாக்கள் ஆண்டகாலத்திலும் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு (1 சாமு 8 :15, 2நாளா 31 : 5, 6, 10, நெகே 10 : 37, 13 : 12, மல்கி 3 : 10) ஆகிய வேத வசனங்கள் சான்றாக உள்ளன. இதற்கு சரித்திரச் சான்றுகளும் கல்வெட்டுகளும் கூட ஆதாரமாய் உள்ளது. இப்படியிருக்க தேவ ஊழியர்களாகிய நாங்கள் ஜனங்களை ஏமாற்றி தசமபாகம் வாங்கினோம், என்று சொல்வது வீணாக தேவ ஊழியர்களைக் குற்றப்படுத்தும் தேவ தூஷணம்.

அரசு வக்கீல் : நீங்கள் சொல்லுகிற இந்த வேத பகுதிகளிலெல்லாம் தங்கள் விளைவிலிருந்து தசமபாகம் கொடுத்ததாகவும்... அதில் ஏழைகள், திக்கற்றோர் புசித்ததாகவும், வருடத்தில் ஒருமுறை மட்டுமே தேவ சந்நிதியில் கொண்டு வந்து செலுத்தினதாகவும் வாசிக்கிறோம். ஆனால் போதகர்களாகிய நீங்கள் விசுவாசிகளை மாதந்தோறும், அவர்கள் பெறுகிற சம்பளத்தில் தசமபாகம், செலுத்தும்படி கூறுவது அவர்களை வஞ்சிப்பது ஆகாதா ?

பாஸ்டர் ஜோன்ஸ் : அப்ஜக்ஸன் யுவர் ஹானர் - நாங்கள் வஞ்சிக்கிறோம். என்று அரசு வக்கீல் சொல்வது விசாரணை முடியுமுன் எங்களை குற்றவாளிகளாக்க முயற்சிக்கிறார் என்றே பொருள்படுகிறது. கனம் கோர்ட்டார் அவர்களே, அக்கால ஜனங்கள் தங்கள் விளைவிலும், ஆடுமாடுகள் யாவற்றிலும் மூன்றுவிதமான நிலைகளில் தசமபாகம் செலுத்தி வந்திருக்கிறார்கள். 


முதலாவது.., யாத் 34 : 20-ல் சொல்லப்பட்டுள்ளபடி என் சந்நிதானத்தில் வெறுங்கையாய் ஒருவனும் வரவேண்டாம் என்றும் பலி செலுத்தும் வழக்கத்தின்படி அவரவர் நேர்ந்து கொண்டது போல காணிக்கைகள், பலிகள் செலுத்த வருவார்கள். இதில் முதற்பலன்களும் சேரும். (யாத் 23 : 19, எண் 28 : 26, நீதி 3 : 9 உபா 26 : 2, 3)

இரண்டாவதாக, ஒவ்வொரு ஆண்டும் தன் குடும்பமாக பண்டிகை கொண்டாடுவதற்காக (உபா 14 : 22-26, 12 : 11-12) வருடாந்தரம்; சேர்த்து வைக்கும் தசமபாகத்தை செலுத்துவதற்காகவும் தேவனுடைய சந்நிதிக்கு குடும்பமாக வந்து செலுத்துவார்கள். 


மூன்றாவதாக, மூன்று வருடத்துக்கு ஒருமுறை லேவியருக்கும், ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் அளிக்கும் தர்ம சகாயமாகிய தசமபாகம் செலுத்துவது (உபா 14 : 28, 29, உபா 26 : 12-15). இப்படி பழைய ஏற்பாட்டில் தசமபாகம் மூன்றுவிதமாக கொடுத்து வந்ததாக வேதம் தெளிவுபடுத்துகிறது. வேதத்தில் இல்லாத எதையும் நாங்கள் போதிக்கவில்லை. என்பதை கனம் கோர்ட்டார் அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அரசு வக்கீல் : நீங்கள் வருடாந்தரமாக செலுத்தி வந்த தசமபாகத்தை தற்போது மாதாந்தரம் செலுத்தும்படி கூறி தசமபாகம் பெற்று வருகிறீர்களே, எந்த ஆதாரத்தில் அப்படிச் செய்கிறீர்கள். தேவன் கட்டளையிட்டாரா?
 

பாஸ்டர் ஜோன்ஸ் : அந்த நாட்களில் குடிமக்கள் விவசாயிகளும் ஆடு மேய்க்கிறவர்களுமாய் இருந்தார்கள். ஆகவே தங்கள் விளைவில் தசமபாகம் செலுத்தினார்கள். ஆடுகளில் கூட தலையீற்றுகளைச் செலுத்தினார்கள். தற்போது விசுவாசிகளில் அதிகம் பேர் மாத சம்பளம் வாங்குகிறவர்களாயிருக்கிறார்கள். ஆகவே மாதாமாதம் தங்கள் வருமானத்தில் தசமபாகம் செலுத்துகிறார்கள்.

அரசு வக்கீல் : நீங்கள் சொன்ன வேதாகம குறிப்புகளில் அவர்களெல்லாம் தானியமாகவும், ஆடுமாடுகளாகவும், செலுத்தினதாகத்தான் வாசிக்கிறோம். பணமாக இல்லையே...
 

பாஸ்டர் ஜோன்ஸ் : தங்களுக்கு எந்த வகையில் வருமானம் வருகிறதோ அதே வகையில் தான் தசமபாகம் செலுத்த தேவன் கட்டளையிட்டிருக்கிறார். வேதத்துக்கு மாறாக நாங்கள் போதித்திருந்தால் எங்களைத் தேடி ஜனங்கள் வருவார்களா? சபை பெருகுமா?

அரசு வக்கீல் : பாஸ்டர் ஜோன்ஸ் மல்கியா 3 : 10- ல் தான் நீங்கள் தசமபாகம் வாங்க பிரதானமாய் பிரசங்கிக்கிற வசனம் வருகிறது. அதாவது என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம் பண்டசாலைக்கு கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகனிகளைத்திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோ என்று இதினால் என்னை சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார் என்பது.

பாஸ்டர் ஜோன்ஸ் : ஆம். அதில் உங்களுக்கு என்ன சந்தேகம் ?
 

அரசு வக்கீல் : இது... சொல்லப்பட்டதே ஆசாரியர்களாகிய உங்களுக்கு என்று மல்கி 2 : 1-ல் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதை மாற்றி பொதுமக்களுக்கு தசமபாக கட்டளை என்று பிரசங்கிப்பது எத்தனை அபத்தம் ?
 

பாஸ்டர் ஜோன்ஸ் : வக்கீல் ஐயா, இரண்டாவது அதிகாரத்தின் ஆரம்பத்தை மட்டும் படித்துவிட்டு மூன்றாவது அதிகாரமும் அதன் அடிப்படையில்தான் வருகிறது என்பது உங்கள் அறியாமை. 3-வது அதிகாரம் 6, 9 வசனங்களில் பாருங்கள். யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் என்றும் இஸ்ரவேல் ஜனத்தாராகிய நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள், எதினால் உம்மை வஞசிக்கிறோம் என்கிறீர்கள், தசமபாகத்திலும் காணிக்கையிலும் தானே... என்று எழுதியுள்ளதை கவனியுங்கள்.

நீதிபதி : பாஸடர்; ஜோனஸ் சரியாகதத்தான் வேதத்தை வாசித்திருக்கிறார். என்பது திட்டமாக தெரிகிறது. 


அரசு வக்கீல் : நீங்கள் சொல்லுவது யாவும் பழைய ஏற்பாட்டு பிரமாணங்களைத்தானே சொல்லுகிறீர்கள். புதிய ஏற்பாட்டில் தசமபாகம் செலுத்தும்படிகூறப்பட்டுள்ளதா?
 

பாஸ்டர் ஜோன்ஸ் : yes ஸார். மத் 23 : 23-ல் மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும், வெந்தயத்திலும், சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பிக்கப்பட்ட விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள். இவைகளையும் செய்ய வேண்டும் அவைகளையும் (தசமபாகம் செலுத்துவதையும்) விடாதிருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அரசு வக்கீல் : பாஸ்டர் ஜோன்ஸ் இந்த வார்த்தைகளை இறை இயேசு யாரிடம் சொல்லுகிறார் ?
 

பாஸ்டர் ஜோன்ஸ் : வேதபாரகரிடமும், பரிசேயரிடமும்

அரசு வக்கீல் : நீங்கள் வேதபாரகரா, பரிசேயரா ?
 

பாஸ்டர் ஜோன்ஸ் : இரண்டும் இல்லை.  - தொடரும்..,

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?