நம்மில் யாரும், மறக்கவே மறக்கக் கூடாது.

அன்புள்ளவரான ஆண்டவரிடம்... அரிவாளும் இருக்கிறது என்பதை நம்மில் யாரும் மறக்கக் கூடாது.

நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனை திராட்சத்தோட்டக்காரருக்கு உதாரணமாக்குகிறார். தொடர்ந்த வசனங்களில் தன்னை திராட்சச்செடி என்றும் உருவகப்படுத்தி அறிவின்றார். (யோவா 15: 1..3)





தன்னுடன் இணைந்திருக்கிறவர்கள் தோட்டக்காரராக சித்தரிக்கப்படும் தேவனுடைய சித்தத்தின்படி நடவாவிட்டால்... அவர்களை கிறிஸ்துவிடமிருந்து பிதாவாகிய தேவன் களைந்துபோடுகிறார். அதாவது..

அன்புள்ளவராக யோவா 3:16 ல் அறிவிக்கப்பட்ட ஆண்டவரிடம் அரிவாளும் இருக்கிறது என்பதைச் சொல்லி நம்மை தெளிவாக எச்சரிக்கிறார். நம்முடைய இரட்சகர்.

இப்படிக் களைந்து போடப்பட்டவர்கள் உலர்ந்து போவார்களாம். அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து அக்கினியிலே போடுகிறார்கள். அவைகள் எரிந்துபோம். யோவா 15: 6

நண்பர்களே.., நீங்களும் நானும் 2013 ன் இறுதி நாட்களில் இருக்கிறோம். இதுவரை எப்படியிருந்தோம்..? என்றல்ல.., இனிமேல் எப்படி இருக்கப்போகிறோம்..? என்று சிந்தியுங்கள். தீர்மானியுங்கள். புதிய தீர்மானங்களுடன் இந்தப் புதிய வருடத்தை சந்திக்க ஆயத்தப்படுங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?