Immnuel Abraham எனும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்



Copy of P1060642

பெரிய ஊழியங்கள் என்ற பெயர் பிரபலத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட ஊழியங்களின் வேத விரோத கொள்கைகளையும் பல ஊழியர்களின் ஏமாற்று செயல்களையெல்லாம் அனைவரும் அறியும்படி வெளிச்சம்போட்டு காட்டிய விதம் அருமை.

இவர் ஊழியம் செய்யும் Kallikulam Revival Mission Church என்ற KRM சபை (http://krmchuch.blogspot.in/p/k-r-m-church-service.html) முன்னுதாரணமான கிறிஸ்தவ சபையாக செயல்படுவதை கண்களால் கண்டு ஆண்டவரை துதிக்கிறேன்.

எதையும் கொடுக்க வசதியற்ற ஏழை விசுவாசிகளை பெரும்பான்மையாகக் கொண்ட சபையில் வருமானத்தைப் பற்றிய கவலையின்றி உண்மையாக ஊழியம் செய்கிறவர் சத்தியத்திற்காக வைராக்கியமாக நிற்கிறார்.

சபை மக்கள் கொடுக்கும் காணிக்கை பணம் சபைக்கு வரும் ஏழைகள் வயதானவர்கள் மற்றும் பசித்தவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கே போதுமா? என நான் யோசித்திருக்கிறேன். இருந்தாலும் அங்கு செல்லும் அனைவருக்கும் உணவு நிச்சயம் உண்டு.

சொந்த பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ சொத்து சம்பாதிக்கும் விருப்பமில்லாதவர். தன்னுடைய பிள்ளைகளுக்கு பெரிய அளவிலான உயர் கல்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அத்துடன் தனது நான்கு பிள்ளைகளையும் தேவனை மட்டுமே சார்ந்திருக்கும் விசுவாசத்தில் பழக்குபவர் பிள்ளைகள் எதிர்காலத்துக்காக நான் எதையும் செய்யப்போவதில்லை .என்னை நடத்திய கர்த்தர் என் பிள்ளைகளையும் நடத்துவார் என்னும் இவரது விசுவாசம் ஆச்சரியமானது.

இவர் ஊழியம் செய்யும் சபையில் ஆராதனை ஒழுங்கு மிகவும் விரும்பத்தக்கது. முதலாவது கொஞ்சம் நேர துதி ஆராதனை அடுத்ததாக பாடல்கள் அதன்பின்பு ஆராதனைப் பகுதி. ஆராதனை வேளையில் ஆண்டவரின் மகத்துவங்கள் அவரது கிருபை அவரது அன்பைச் சொல்லி ஜனங்களை ஆண்டவரோடு இணைக்கும் இவரது முயற்சி முற்றிலும் விரும்பத்தக்க ஆராதனையாக அமையும்.

செய்தி வேளையில் சத்திய வசனத்தை சரியானபடி பகுத்து போதிக்கும் இவரது ஆற்றல் ஆண்டவர் கொடுத்த வரம்தான் அன்றி வேறல்ல.

மிக மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தாலும் மிக சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழும் இவர் தன் மனைவியையும், நான்கு பிள்ளைகளையும் மிகவும் நேசித்து எப்போதும் அவர்களோடு இருப்பதையே அதிகம் விரும்புபவர். இவரது சிரித்த முகம் கோணும்படியாக இவரது மனைவியோ பிள்ளைகளோ ஒருபோதும் நடந்துகொள்வதில்லை. உத்தமசீலரான இவரிடம் வரும் அனைத்து சகோதரிகளையும் சொந்த சகோதரிகளாகவே கருதி பழகுகிறார்.

இவர் வீடுவீடாக அலைவது இல்லை. இவர் ஊழியம் செய்யும் சபையின் மக்கள் என்ன தேவை என்றாலும் இவரிடமே ஓடி வருகின்றனர். முக்கிய நிகழ்வுகள் வியாதிக்காக ஜெபிக்கப் போவது போன்ற காரியங்களுக்காக அன்றி விசுவாசிகளின் வீடுகளுக்கு செல்ல இவர் விரும்புவதில்லை.

துர் உபதேசங்களை கடுமையாக எதிர்க்கிறார். துர் உபதேசங்கள் சபை விரோத கொள்கைகள் போன்றவற்றை எதிர்ப்பதனாலேயே இணைய உலகில் இவருக்கு பல எதிரிகள். இருக்கின்றனர்  இவரை பலர் எதிரிகளாக கருதினாலும், அவர்களை எதிரிகளாக எண்ணுவதில்லை.

பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் பற்றியும் அவர் குணங்கள் குறித்தும் அவருடன் பழகிய நண்பர்கள் அறிந்து கொண்டோம். இதை படிக்கிற நீங்களும் அவருடன் நட்பு கொள்ளும்போது அறிந்து கொள்ள முடியும். அவர் எல்லாரோடும் இனிமையாக பழகுவதையும் அன்பை வெளிப்படுத்துவதையும் விரும்புகிறவர் தற்பெருமை இல்லாதவர். எல்லோரையும் சமமாக நடத்துகிறவர்.

இவருடைய ஊழியங்களுக்காக இவருடைய குடும்பம் சபை மக்கள் அனைவருக்காகவும் இணையதள நண்பர்கள் ஜெபியுங்கள். 

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

224488_431903870179235_1487966775_n                                                                 
                                        இப்படிக்கு,
                                                                       Bro. Shunmugam veerakutty

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?