அடுத்தப் பண்டிகை எப்போது வரும்…?
கிறிஸ்து இயேசுவில் எனக்குப் பிரியமானவர்களே..! உங்கள் நிமித்தமாக கர்த்தரைத் துதிக்கிறேன்.
கிறிஸ்தவ மார்க்கத்தினர் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளுகிறவர்கள். கர்த்தருடைய வருகையை நோக்கிக் காத்திருப்பதற்கு பதிலாக அடுத்து நமக்கு என்ன பண்டிகை வரும்? என்ற எதிர்பார்ப்புடன் வாழத் துவங்கிவிட்டார்களே?!! என வேதனை ஏற்படுகிறது.
பண்டிகைகளுக்கு ஆதரவாக பலரும்.. அது நமக்கு அவசியமா? என்று கேள்வி எழுப்புகிற உண்மை கிறிஸ்தவர் சிலரும் இணையத்திலும் மற்றவிடங்களிலும் பண்டிகை காலங்களில் காரசாரமாய் விவாதிக்கின்றனர்.
இதன் முடிவில் பண்டிகை வேண்டுமென கூச்சலிடுகிற ஜனங்களுடைய குரல் ஓங்கி ஒலிப்பதும் இது அவசியமா? என்கின்ற ஜனம் அநேகரால் கேலியாய் பார்க்கப்படுவதும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் ஏற்பட்ட அவமானம் என்பேன்.
இதையெல்லாம் பார்க்கும்போது.. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். என்ற வசனமே நமக்கு முன் நின்று நம்மை ஆறுதல் படுத்துகிறது.
கிறிஸ்தவர்களுடைய ஆராதனை மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை பரிசுத்த வேதகாம உபதேசங்களின் அடிப்படையில்தானே தீர்மானிக்க முடியும் ..? எனவே..,
1கொரி 5:14..16 ல் “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால் எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க எல்லாரும் மரித்தார்கள் என்றும்.,

பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல் தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.
ஆகையால் இதுமுதற்கொண்டு நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம். நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும் இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம். என்று வாசிக்கிறோம்.
எனவே நாம் இங்கே ஒரு கேள்வி எழுப்புவோம் மாம்சத்தின்படி இயேசு யார்?
ரோம 1: 5 ல் மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும்…. என்று எழுதப்பட்டுள்ளது அதுதானே உண்மை.
மத் 13: 53.. முதல் 56 வரை இயேசு… "தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்றார்கள் இதை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து விரும்பவில்லை என்றே சொல்லுவோம். எப்படியெனில்..,

இப்படி அவர்கள் சொன்னதை அவர் கனவீனம் என்றார். கவனிக்க :- 57 ம் வசனம். ....தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்... என்றார். அத்துடன் அது அதாவது, அப்படி சொன்னது அவர்களுடைய அவிசுவாசம் என்றும் சொல்லுகிறார்.
ஏன் அப்படிச் சொல்லுகிறார்? என்ற கேள்வி எழுப்பினால் எபி 13: 8 வசனம் நினைவுக்கு வருகிறது அதில் "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். என்று எழுதியிருக்கிறது. இவ்வார்த்தகளை நான் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிறேன். இதுதான் சத்தியம்.
இந்த வசனத்தை பதிவிட்டவுடன் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு நாட்டுடைய அரசன் தன் மக்களுடன் சாமாணியனாய் பழகி அவர்களது குறைவுகளை நீக்க விரும்பினான். அரசஉடை, சாரட் வண்டி, மந்திரிகள் மற்றும், பாதுகாப்பு அதிகாரிகளுடன் மக்களை சந்திக்க சென்றால்.., மக்கள் தன்னுடன் சகஜமாய் நெறுங்கமாட்டார்கள் என்பதை அறிந்த ராஜா மேன்மைகளை கலைத்துக்கொண்டு.., தோற்றம் மாறி
இராப்பிச்சைக்காரன் போன்று, அந்நாளின் மாலை 7 மணி முதல் இரவு 10:30 மணிவரை தன் நகரைச்சுற்றி வந்தார். மீண்டும் தன் அரண்மனைக்குத் திரும்பினார். இதற்கிடையில்..,
திறமையான ஒவியர் ராஜாவுடைய கந்தலான தோற்றத்தில் அவரைப்படம் வரைந்து இவர்தான் நம்முடைய ராஜா..! நமது தேசத்தை ஆளுகை செய்கிறவர் இப்படித்தான் இருப்பார் என்று அறிவித்தால்.., ராஜாவுக்கு அது பெருமை சேர்க்குமா? கோபப்படுத்துமா? சற்றே சிந்தியுங்கள்.
இன்று இயேசு கிறிஸ்துவை சித்திரமாக சிலைகளாக வரைந்திருப்பவர்கள், வைத்திருப்பவர்கள் அவருடைய எந்த தோற்றத்தை வைத்திருக்கிறார்கள்? ராஜாதி ராஜாவாகவா? அல்லது தரித்திரராக வெளிப்பட்டவிதத்திலா?
பிலி 2: 5..8 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
ரோம 1: 5 ன் முழுமையை படித்தோமானால்.., அவர் அதாவது இயேசுகிறிஸ்து “மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்." அப்படியானால்..,
இயேசுகிறிஸ்துவானவர் பிறந்தபோது மட்டுமல்ல. அவர் தன்னை யோவான்ஸ்நானன் கையின் கீழே தாழ்த்தி தேவநீதியை நிறைவேற்றினபோதும்,
இயேசுகிறிஸ்துவானவர், அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தபோதுமட்டுமல்ல.., நம் நிமித்தம் சிலுவையில் அடிக்கப்பட்டு அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே தேவக்குமாரனாயிருக்கிறாரென்று பலமாய் நிரூபிக்கப்பட்டார். என்றாலும்..., ஒன்றை மறந்துவிடாதிருங்கள்.
நம்மில் ஒவ்வொருவரும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை அறிக்கை செய்தே ஆக வேண்டும் அதை இப்பண்டிகையின் வழியாய் அஞ்ஞானிகளுடைய மதப்பழக்க வழக்கங்களுடன் அனுசரித்து தேவனை மறந்து அடுத்த பண்டிகை எப்போது? என்று ஏமாந்து போகாதிருங்கள்.
கிறிஸ்தவ வாழ்க்கையிலும், கர்த்தருடைய வசனத்தில் வளருகிறதிலும், தேவநீதியிலும், ஆவிக்குரிய அனுபவத்திலும் இருக்கிற நாம் (எல்லாரையும் அல்ல) பிற இனத்தவரைப் பின்பற்றி, இயேசுகிறிஸ்துவை மாம்சத்தின்படி பிறந்ததை மட்டுமே அறிந்து அறிவிப்பதையும், முக்கியப்படுத்துவதையும் செய்து, அவருடைய மேன்மையை கனவீனப்படுத்தாமல்.., பொய்களுக்கு விலக வேண்டும் என்கிறேன். அதனால் நீங்கள் விசுவாசிகள் என்ற தகுதி அடைவீர்கள். புறஜாதிகள் விழாவை புறக்கணிக்க விரும்புவீர்களானால்..,
அப்போஸ்தலனாகிய பவுலுடன் இணைந்து உரக்கச் சொல்லுங்கள்:-
“இதுமுதற்கொண்டு நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம். நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும் இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.”

உங்கள் தீர்மாணத்திற்காக ஆண்டரை துதிக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
இப்படிக்கு
பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம்
Comments
Post a Comment