Immnuel Abraham எனும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்
இம்மானுவேல் ஆபிரகாம் என்னும் பெந்தேகோஸ்தே பாஸ்டர், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் எதிரிகளையும் நேசிக்கும் பண்பாளர். நேசமாக கரம் கொடுப்பவர்களை பாசமாக அணைக்கும் அன்பர். உண்மையாகவே கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துகிற தேவ ஊழியர். பெரிய ஊழியங்கள் என்ற பெயர் பிரபலத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட ஊழியங்களின் வேத விரோத கொள்கைகளை யும் பல ஊழியர்களின் ஏமாற்று செயல்களையெல்லாம் அனைவரும் அறியும்படி வெளிச்சம்போட்டு காட்டிய விதம் அருமை. இவர் ஊழியம் செய்யும் Kallikulam Revival Mission Church என்ற KRM சபை ( http://krmchuch.blogspot.in/p/k-r-m-church-service.html ) முன்னுதாரணமான கிறிஸ்தவ சபையாக செயல்படுவதை கண்களால் கண்டு ஆண்டவரை துதிக்கிறேன். எதையும் கொடுக்க வசதியற்ற ஏழை விசுவாசிகளை பெரும்பான்மையாகக் கொண்ட சபையில் வருமானத்தைப் பற்றிய கவலையின்றி உண்மையாக ஊழியம் செய்கிறவர் சத்தியத்திற்காக வைராக்கியமாக நிற்கிறார். சபை மக்கள் கொடுக்கும் காணிக்கை பணம் சபைக்கு வரும் ஏழைகள் வயதானவர்கள் மற்றும் பசித்தவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கே போதுமா ? என நான் யோசித்திருக்கிறேன். இருந்தாலும் அங்கு செல்...