இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?
இரட்சிப்பு என்பதை நாம் பல்வேறு வடிவங்களில் காண நோ்ந்தாலும், இறுதியாக ஆவிக்குரியதாகவே முழுமைப்படுத்தப்படுவதை காணலாம். கா்த்தா் செய்கின்ற எந்த மீட்பாக இருந்தாலும் அதை பரிசுத்த வேதாகமம் இரட்சிப்பு என்றே அடையாளப்படுத்துகிறது. அதை மட்டுமே குறிப்பிட்டு அழுத்தமாய்ச் சொல்லுகின்ற இடங்களில் எல்லாம் தேவனாகிய கா்த்தா் மனிதனை பாவத்திலிருந்து நீக்கி சுத்திகாிக்கின்ற மீட்பையே குறிக் கின்றது. பழைய ஏற்பாட்டில், எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலை கடந்து சென்றதை இரட்சிப்பு என வேதம் குறிக்கிறது. யாத் 14 : 13 எதிரிகளை அழித்து இஸ்ரவேலருக்கு கொடுத்ததையும் இரட்சிப்பு என்றே காண்கிறோம். யாத் 15 :2 சத்துருக்களின் கைகளிலிருந்து தமது ஜனங்களை நீங்களாக்கவும், இழந்த உரிமையை பெற்றுக் கொடுக்கவும் தேவனாகிய கா்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சகரை அனுப்புகிறார் என்பதையும் காணலாம். நெகே 9 :27 இஸ்ரவேல் ஜனங்களை சத்துருக்களிலிருந்து மீட்கப்படுவதைவிட அநியாயத்தினின்றும், தீமையினின்றும், மீட்கப்படுதலைப் பற்றி தீா்க்கதரிசிகள் அதிகமாக போதித்தார்கள். மேலும், ஜனங்களி...





Comments