Our Faith

எனது விசுவாசம்

பரிசுத்தமும், சர்வ வல்லமையுமுள்ள ஒரே தேவன் உண்டென்றும், அவரே எமக்கு "பரிசுத்த வேதாகமம்" என்ற தேவனுடைய வார்த்தையை தந்திருக்கிறார் என்றும், விசுவாசிக்கிறேன். 

பரிசுத்தமும், சர்வ வல்லமையுமுள்ள ஒரே தேவன்தான் திரியேகதேவனாய்  பிதாகுமாரன், பரிசுத்த ஆவியாய் செயலாற்றுகிறார் என்றும் விசுவாசிக்கிறேன்.

இயேசுகிறிஸ்து, பிதாவின் ஒரேபேறான குமாரன். பரிசுத்த ஆவியினால் கருத்தரித்து கன்னிமரியாளிடத்தில் பிறந்தார் என்றும், விசுவாசிக்கிறேன்.

இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, தாம் முன் சொன்னபடியே.., மூன்றாம் நாளில்  உயிரோடு எழுந்தார் என்றும், விசுவாசிக்கிறேன்.

உயிரோடு எழுந்த இயேசுகிறிஸ்து, இப்போது பரலோகத்தில் பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்து, தமது பரிசுத்தவான்களுக்காக, பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்றும், விசுவாசிக்கிறேன்.

எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையறறவர்களானபடியால், பாவ மன்னிப்புக்கென்று மனம்திரும்புதல் அவசியம் என்றும், இயேசு கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினாலே, பாவமன்னிப்பின் நிச்சயமும், பரிசுத்தஆவியானவரின் அபிஷேகமும், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்கு அடையாளமாக, அந்நிய பாஷையில் பேசுதல் உண்டு என்றும் விசுவாசிக்கிறேன்.
 
மனம் திரும்பிய யாவரும்பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தினாலே மணவாட்டியாகிய சபைக்கு முன்பாக, வேதவசனத்தின் ஒழுங்கின்படியான தேவ ஊழியருடைய கரங்களால், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே முழுக்கு ஞானஸ்நானம் எடுக்கவேண்டும். என்றும்

அப்படி மனம் திரும்பி ஞானஸ்நானம் பெற்றவர்கள்கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறவேண்டும் என்றும், இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையில், சரீர உயிர்த்தெழுதல் உண்டென்றும் நீதிமான்களுக்கு நித்திய ஜீவனும், துன்மார்க்கருக்கு நித்திய நரகமும் உண்டென்றும் உறுதியாக விசுவாசிக்கிறேன்.

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?