Posts

Showing posts from 2013

Immnuel Abraham எனும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்

Image
இம்மானுவேல் ஆபிரகாம் என்னும் பெந்தேகோஸ்தே பாஸ்டர், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் எதிரிகளையும் நேசிக்கும் பண்பாளர். நேசமாக கரம் கொடுப்பவர்களை பாசமாக அணைக்கும் அன்பர். உண்மையாகவே கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துகிற தேவ ஊழியர். பெரிய ஊழியங்கள் என்ற பெயர் பிரபலத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட ஊழியங்களின் வேத விரோத கொள்கைகளை யும் பல ஊழியர்களின் ஏமாற்று செயல்களையெல்லாம் அனைவரும் அறியும்படி வெளிச்சம்போட்டு காட்டிய விதம் அருமை. இவர் ஊழியம் செய்யும் Kallikulam Revival Mission Church என்ற KRM சபை ( http://krmchuch.blogspot.in/p/k-r-m-church-service.html ) முன்னுதாரணமான கிறிஸ்தவ சபையாக செயல்படுவதை கண்களால் கண்டு ஆண்டவரை துதிக்கிறேன். எதையும் கொடுக்க வசதியற்ற ஏழை விசுவாசிகளை பெரும்பான்மையாகக் கொண்ட சபையில் வருமானத்தைப் பற்றிய கவலையின்றி உண்மையாக ஊழியம் செய்கிறவர் சத்தியத்திற்காக வைராக்கியமாக நிற்கிறார். சபை மக்கள் கொடுக்கும் காணிக்கை பணம் சபைக்கு வரும் ஏழைகள் வயதானவர்கள் மற்றும் பசித்தவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கே போதுமா ? என நான் யோசித்திருக்கிறேன். இருந்தாலும் அங்கு செல்...

அடுத்தப் பண்டிகை எப்போது வரும்…?

கிறிஸ்து இயேசுவில் எனக்குப் பிரியமானவர்களே..! உங்கள் நிமித்தமாக கர்த்தரைத் துதிக்கிறேன். கிறிஸ்தவ மார்க்கத்தினர் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளுகிறவர்கள். கர்த்தருடைய வருகையை நோக்கிக் காத்திருப்பதற்கு பதிலாக அடுத்து நமக்கு என்ன பண்டிகை வரும்? என்ற எதிர்பார்ப்புடன் வாழத் துவங்கிவிட்டார்களே?!! என வேதனை ஏற்படுகிறது. பண்டிகைகளுக்கு ஆதரவாக பலரும்.. அது நமக்கு அவசியமா? என்று கேள்வி எழுப்புகிற உண்மை கிறிஸ்தவர் சிலரும் இணையத்திலும் மற்றவிடங்களிலும் பண்டிகை காலங்களில் காரசாரமாய் விவாதிக்கின்றனர். இதன் முடிவில் பண்டிகை வேண்டுமென கூச்சலிடுகிற ஜனங்களுடைய குரல் ஓங்கி ஒலிப்பதும் இது அவசியமா? என்கின்ற ஜனம் அநேகரால் கேலியாய் பார்க்கப்படுவதும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் ஏற்பட்ட அவமானம்  என்பேன். இதையெல்லாம் பார்க்கும்போது.. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். என்ற வசனமே நமக்கு முன் நின்று நம்மை ஆறுதல் படுத்துகிறது. கிறிஸ்தவர்களுடைய ஆராதனை மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை பரிசுத்த வேதகாம உபதேசங்களின் அடிப்படையில்தானே தீர்மானிக்க ம...

நம்மில் யாரும், மறக்கவே மறக்கக் கூடாது.

Image
அன்புள்ளவரான ஆண்டவரிடம்... அரிவாளும் இருக்கிறது என்பதை நம்மில் யாரும் மறக்கக் கூடாது. நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனை திராட்சத்தோட்டக்காரருக்கு உதாரணமாக்குகிறார். தொடர்ந்த வசனங்களில் தன்னை திராட்சச்செடி என்றும் உருவகப்படுத்தி அறிவின்றார். (யோவா 15: 1..3) தன்னுடன் இணைந்திருக்கிறவர்கள் தோட்டக்காரராக சித்தரிக்கப்படும் தேவனுடைய சித்தத்தின்படி நடவாவிட்டால்... அவர்களை கிறிஸ்துவிடமிருந்து பிதாவாகிய தேவன் களைந்துபோடுகிறார். அதாவது.. அன்புள்ளவராக யோவா 3:16 ல் அறிவிக்கப்பட்ட ஆண்டவரிடம் அரிவாளும் இருக்கிறது என்பதைச் சொல்லி நம்மை தெளிவாக எச்சரிக்கிறார். நம்முடைய இரட்சகர். இப்படிக் களைந்து போடப்பட்டவர்கள் உலர்ந்து போவார்களாம். அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து அக்கினியிலே போடுகிறார்கள். அவைகள் எரிந்துபோம். யோவா 15: 6 நண்பர்களே.., நீங்களும் நானும் 2013 ன் இறுதி நாட்களில் இருக்கிறோம். இதுவரை எப்படியிருந்தோம்..? என்றல்ல.., இனிமேல் எப்படி இருக்கப்போகிறோம்..? என்று சிந்தியுங்கள். தீர்மானியுங்கள். புதிய தீர்மானங்களுடன் இந்தப் புதிய வருடத்தை சந்திக்க ஆயத்தப்படுங்கள். கர்த்தர் உங்...

அந்த நல்ல நாளுக்காக...,

Image
கிறிஸ்து இயேசுவில் என்க்கு பிரியமானவர்களே..!  மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில்  கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி, பயப்படாதிருங்கள். இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக் 2: 8..11 என்று சொன்ன அந்த நல்ல நாளுக்காகவும்.., இணைய பயணத்தில் என்னுடன் இணைந்து பயணிக்கிற நல்ல நண்பர்களுக்காகவும் கர்த்தரைத் துதிக்கிறேன்.  இந்த 2013 ன் 25ந்தேதியிலே, நீங்கள் எவ்வித மனநிலையில் இருந்தாலும், பரவாயில்லை. நானோ, இந்த வருடம் நேற்று ஆரம்பித்தது போல இருந்ததே, அதற்குள் அதாவது 2013 ம் வருடம் திடீரென்று கடந்து போய்விட்டதே  என்பதை  எண்ணி வியந்து போகிறேன்..  இந்த 25ந்தேதி முதல், கடந்த வந்த பாதைகளை திரும்பிப்பார்க்க முற்படு...

இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வாழ்த்துகிறேன்.  காத்தருக்கு ஸ்தோத்திரம்.  மீட்கப்பட்டவர்களான விசுவாசிகள் அடிக்கடி சோர்ந்து போகிறார்கள். சோர்வை தவிர்க்க வேண்டுமானால் ஒவ்வொரு விசுவாசிகளும் தான் யார்? என்றும் தன்னைக் குறித்த தேவ நோக்கம் என்ன? என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.  ஏனெனில்...,  நம்மை நாமே அறிந்தோமானால் நாம் அசைக்கப்படமாட்டோம். வேத வசனத்தை நாம் தியாணிப்போமானால்… நம்மில் யாரும் துக்கமுகமுள்ளவர்களாக வழிநடப்பதை தேவன் விரும்புவதில்லை என்பதை அறிய முடிகிறது. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்ன? வென்று கேட்டார். லூக் 24 :17. நம்மில் யாரும் அதாவது இரட்சிக்கப்பட்ட மீட்கப்பட்ட நம்மில் யாரும் துக்கமுகமுள்ளவர்களாக வழிநடப்பதை நம்முடைய ஆண்டவர் விரும்புவதில்லை என்பதை இங்கே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்பதுடன் அவர் துக்கமுகமாக நடக்கிறவர்களை விசாரிக்கிறவராகவும் இருக்கிறார். 2கொரி 7: 10 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்க...

ஆசிரியர்கள் வேண்டும்..! தேடிக்கொண்டு இருக்கிறேன்...!

Image
கர்த்தர் தந்த நல்ல நண்பர்களுக்காக, கர்த்தரை துதிக்கிறேன். கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையினர்களாக இருக்கின்ற ஒரு கிராமத்தில் கர்த்தருடைய அழைப்பின்பேரில் ஊழியத்தை துவங்கின நான். இதுவரை.., பல சவால்களை, போராட்டங்களை, விவாதங்களை, விதண்டாவாதங்களை நேரிலும் மறைமுகமாகவும் பலமுறை.... பல முறைகளில் சந்தித்து இருக்கிறேன்..., சந்தித்து வருகிறேன். முன்னதாக, பிறப்பால் பெந்தகோஸ்தே சபைக்காரன் என்று நான் அடையாளம் காணப்பட்டாலும் வழிமுறையாக பெந்தகோஸ்தேக்காரன் ஆகிவிடவில்லை. அதாவது, என் பெற்றோர் கிறிஸ்தவர்களாக இருப்பதால்.., நான் கிறிஸ்தவனானவன் இல்லை. இரட்சிக்கப்படாத துன்மார்க்கமான உறவினர்களுடன் பழகி வாழுகின்ற சுதந்திரமான நிலை எனக்கு ஏற்பட்டது. அப்படி வளரும் நிலை ஏற்படுத்திக் கொண்டேன்.., வாழ்ந்தேன். அவ்வப்போது அனைத்து மதங்களையும் சபைப்பிரிவுகளையும் குறித்த கேள்வி என்முன் எழுப்பப்பட்டபோது, எழுந்தபோது, அவைகளை ஆய்வு செய்ய விரும்பினதினால்.., என்னாலானமட்டும் ஆய்ந்தேன்.நிறைவாக கற்றுக்கொண்டேன் என்று அல்ல.. இவை போதும் என்று நினைக்கவில்லை என்கிறேன் இன்னும் அறியவேண்டும் கற்க வே...

ஆண்டவர் தமது மாட்சியை மரியாளுக்கு விட்டுக்கொடுக்கவில்லை..!

Image
இயேசுவுக்கு பதில் மரியாளா ? திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி ," திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார். இயேசு அவரிடம் , " அம்மா , அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும் ? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார். யோவா 2: 3 மேலே நீங்கள் காண்பது கத்தோலிக்க திருவிவிலியத்தில் உள்ளது.  அதே திருவிவிலியாத்தில்.. , லூக் 18: 27 இயேசு , " மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார். ஆக.., நேரம் வரவில்லை என்றவர்  அதே திருமண வீட்டில் தண்ணீரை இரசமாக மாற்றினார். யோவா 2 : 11 ல் இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். (என்றும்) இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. ஆக... , ஆண்டவர் தமது மாட்சியை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை குறிப்பாக.. மரியாளுக்கு..! இது தெரியாத கத்தோலிக்கர்கள் கானாவூர் செய்தியில் மரியாளை புகழ்வார்கள். நண்பர்களே கர்த்தருடைய வல்லமையை மட்டுப்படுத்த வேண்டா...