நாம் விலகிவிட வேண்டியது அவசியம்...,

திரித்துவம் பெயரல்ல உபதேசம்.


 
*பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராக இருக்கிற நம்முடைய தேவன் பரிசுத்தர்.

*பரிசுத்தராம் பிதாவாகிய தேவனிடத்திலே நாம் சேரவேண்டுமானால் நாமும் பரிசுத்தராக வேண்டும்..


*தேவனுடைய ஒரேபேரான குமாரனாம் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் பரிசுத்தரிடத்தில் சேரும் சிலாக்கியத்தை பெற்றிருக்கிறோம். முன்னதாக.

*பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவானவருடைய கட்டளையின்படியே அதாவது பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவருடைய நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றால் பரிசுத்த ஆவியானவரைப் பெறுகிறோம்.

ஆவியானவருடைய துணையோடு பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைவதும் ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக காத்திருப்பதுமே நமது முக்கியப்பணி. எனவேதான்..

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் என்ற திரித்துவ தேவனில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. அல்லது தனித்து நின்று செயல்படுவதும் இல்லை என்பதை அறிந்து நாம் திரித்துவத்தை அறிக்கை செய்து உயர்த்துகிறோம்.

இதை மறுதலிக்கிறவர்கள் தேவனுடைய சித்தத்திற்கு எதிர்த்து நிற்கிற பிசாசினுடைய ஆவியுடையவர்களாக இருப்பதால் இப்படிப்பட்டவர்களிடத்திலிருந்து நாம் விலகிவிட வேண்டியது அவசியம். காரணம், இவர்களுடன் கூடுவதால் நாம் பரிசுத்தத்தை இழந்து போக ஏதுவாகும்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?