“மகிழ்ச்சியான எங்கள் நேரங்கள் தேவனுக்கு மகிமையாய் காணப்பட்டது”

நாங்கள் ஒன்றிணைந்தால் என்ன நடக்குமென்று இன்று (30 01 2014) மாலையில் தெரிவிப்பதாக இன்று காலையில் ஒரு பதிவை பதித்திருந்தேன். அதை Like - கியதுடன் பிண்ணூட்டங்களைப் பதிவிட்டு உற்சாகமூட்டிய அனைவருக்கும் என் முதல் வணக்கங்கள் உங்கள் நிமித்தமாக கா்த்தரை துதிக்கிறேன்.  

நான் தாமதாகவே வீட்டிற்கு வந்ததால்.., பதில் எழுதவும் தாமதமாகிவிட்டது. பொறுமை காத்ததற்கு நன்றி.

நாங்கள் நேற்றுதான் (29 01 2014) முதன்முதலாக நேரடியாக சந்தித்துக் கொண்டோம் முதல் நாளில் சுமார் 8 மணி நேரங்களுக்கு மேலாக ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தோம். எங்களுடன் மேலும் சில இணைய நண்பா்களும் கலந்துகொண்டனா்.


“மகிழ்ச்சியான எங்கள் நேரங்கள் தேவனுக்கு மகிமையாய் காணப்பட்டது”

மீண்டும் இந்த நாளிலும் ஒன்று கூடினோம். அதைத்தான் முன்னதாகவே ”நாங்கள் ஒன்றிணைந்தால் என்ன நடக்குமென்று” இணையத்தில் பதித்திருந்தேன்.

நாங்கள் சந்தித்துக் கொண்டபோது இங்கு நடந்தவைகளை முகநூலில் வெளிப்படையாய் எழுத வேண்டாமென்று நண்பா்களாய் தீா்மாணித்தோம். என்றாலும்

எங்களுடைய சந்திப்பை கொச்சைப்படுத்த முயற்சிக்கும் கள்ளஆவி பிடித்த சிலா்…  இவா்கள் சந்திப்பில் இதுதான் நடந்திருக்கும்..! அதுதான் நடந்திருக்கும்..! என்று கட்டுக்கதைகளை புணைந்து எங்களை தவறாக சித்தரிக்கவும் தொடந்து இழிவான ஆதாயத்தை இச்சித்து காசு தேடவும் ஒரு கூட்டம் ஆயத்தமாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீா்கள். ஏனென்றால்..

இவா்கள்தான் ஆரம்ப நாட்களிலேயே அதிரடியாக நுழைந்து நண்பா்களுக்குள் மோதலை ஏற்படுத்தி என்னைப்போன்ற அநேகரை வேலை செய்யவிடாது தடுப்பதற்கான முயற்சிகளை செய்து வேடிக்கை பார்த்தக் கூட்டம் என்பதையும் நன்கு அறிந்திருக்கிறேன்.

இப்போதும் அப்படி ஆகிவிடக்கூடாதே என்பதற்காகவே இந்த நாளில் எங்களது சந்திப்பில் நிகழ்ந்தவைகளை எழுத விரும்பினேன். அதன் காரணமாக நண்பா்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பின்னரே இதை எழுதுகிறேன்.

இணையதளத்தை பயண்படுத்துகிற நாம் அனைவரும் நம்முடன் தொடா்பு கொள்ளுகிற அனைவருமே நம்மைப் போலவே சுகமாய் நலமாய் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அது பொய்யென்று நிரூபிக்கும் வண்ணமான ஒருநபரை நேரில் கண்டு கலங்கிப்போனோம்.

அந்த நண்பா் 6 ஆண்டுகள் படுத்த படுக்கையாக ஒரு சிறு அறையில் தனிமையாக இருக்கிறார். அவருடைய வயது 26 மட்டுமே அதாவது 20 வயதில் ஏற்பட்ட விபத்தில் அவருடைய மார்பு பகுதிக்கு கீழே உள்ளங்கால் வரையுள்ள பகுதிகளில் உணா்ச்சியற்றவராக 6 ஆண்டுகளாகப் படுத்திருக்கிறார்.

நேற்றுமுதல் அந்த நண்பருக்காக ஜெபிக்க ஆரம்பித்தோம். படுக்கையில் இருந்த அந்த நண்பரை தைரியப்படுத்தினோம். அந்த நண்பருக்கு ஏதாகிலும் செய்ய வேண்டுமென்று தீா்மாணித்தோம். இன்று (30 01 2014) கூடினோம். மேலும் சில நண்பா்களைக் கூட்டிச்சோ்த்தோம். அருமையான சந்திப்புகள்..! அன்பான உபசரிப்புகள்...! ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்.

இவரை, இவரது நிலையை முதன்முதலாக நமது நட்பு வட்டாரத்தில் நண்பா் Peter Samuel S அவா்கள்தான் அறிந்திருந்தார்கள். அப்போதிலிருந்து அந்த தம்பியுடன் சுமார் ஒன்றரை ஆண்டுகாளாக தொடா்பில் இருந்திருக்கிறார் என்பதை அறிந்தபோது என் சகோதரன் பீட்டா் அவா்களைக்குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

நண்பா் Peter Samuel S அவா்கள் அந்த தம்பியை நேசிப்பதிலும் அவரை சந்திப்பதிலும் இயண்ற மட்டும் அவருக்கு செலவழிப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார்.

நண்பா் பீட்டா் சாமுவேல் அவா்களுடன் நண்பா் விஜயகுமார் மற்றும் ஐயா சண்முகம் வீரக்குட்டி  அவா்கள் மட்டுமல்லாது நான் ஊழியம் செய்யும் சபையின் மூப்பா் கார்லோஸ் ஜோசப் அவா்களும் ஆகியோராக கடந்துசென்று அந்த வாலிபனைக் கண்டபோது, உள்ளம் உடைந்து போனோம். அதுமுதல்..,

அந்த தம்பியை விசாரித்து அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை பற்றி கேட்டறிந்து அதுமுதல் செயல்படத்துவங்கி நமது நட்பு வட்டாரத்திலிருக்கும் சித்தா மருத்துவா் Lazar Stanley (மதுரை) அவா்களை அழைத்து சிகிச்சையை துவங்க கா்த்தா் கிருபை செய்தார்.

இதற்காக உழைத்த ஒத்துழைத்த அனைவருக்காகவும் ஆண்டவரைத் துதிக்கிறேன். இதனால் எங்களுக்குள் அன்பு அதிகாரித்தது. அந்த தம்பிக்கு ஆறுதலும் தேவன்போரில் நல் நம்பிக்கையும் உண்டானது.

”நாங்கள் ஒன்றிணைந்தால் இப்படிப்பட்டவைகள்தான் நடக்கும்”



<photo id="1" />




இதற்காக உழைத்த ஒத்துழைத்த அனைவருக்காகவும் ஆண்டவரைத் துதிக்கிறேன். இதனால் எங்களுக்குள் அன்பு அதிகாரித்தது. அந்த தம்பிக்கு ஆறுதலும் தேவன்போரில் நல் நம்பிக்கையும் உண்டானது. தேவனுக்கே மகிமை.

”நாங்கள் ஒன்றினைந்தால் இப்படிப்பட்டவைகள்தான் நடக்கும்”

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?