என்னுடைய மணவாளனுக்கு தேவை மணவாட்டிதான்.....

என்னுடைய மணவாளனுக்கு தேவை மணவாட்டிதான் விபச்சாரி அல்ல..

வேதம் சொல்லுகிறது :- விபசாரரே, விபசாரிகளே, உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். யாக் 4: 4

உலகம் முழுவதுமுள்ள மக்களில் பெரும்பான்மையானோர் தங்களுக்கென்று ஒரு தலைவனைத் தெரிந்து கொள்வதுண்டு அவர்களால் தெரிந்து கொள்ளப்பட்ட மனிதன் எப்படிப்பட்டவன்? அவன் பேசுவது என்ன? அவன் செய்கிறது சரியானதுதானா? என்பதை பற்றியெல்லாம் அவனுடைய ஆதரவாளர்களுக்கு கவலையே இல்லை.

ஒருவேளை அவர்களுடைய தலைவன் சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் பிடித்தாலும்.., "புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாயிற்றே.!?" அதை இப்படி ஸ்டைலாக செய்து காண்பித்து மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுகிறானே..!? என்கிறவர்கள் அந்த கிறுக்கு இரசிகனுக்கு எதிரியாகவே தெரிவான் என்பது உண்மையல்லாவா?

அதே மாதிரியான மனநிலை உள்ள கிறிஸ்தவர்கள் பெருகியிருப்பது கிறிஸ்துவ சமுதாயத்திற்கே அவமானம் அல்லவா? இங்கும் அதாவது கிறிஸ்தவர் நடுவிலும் ஏராளமான தலைவர்கள். அந்த தலைவர்களுக்கு கொடி பிடிக்கும் இரசிகக் கூட்டங்கள்.

என்னைப் போன்றவர்களுடைய எழுத்துக்களால்.., மனுஷனை நம்பி அவன் பின்னே போகாதே..! கர்த்தரையும் அவர் வார்த்தைகளையும் நம்பி அதைப் பற்றிக்கொள் என்று எழுதினால் அநேகமான பிரபல ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்களாம்..! அவமானப்படுத்தப் படுகிறார்களாம்..! அவர்களுடைய இரசிகர்கள் ஆத்திரப்படுகின்றனர்.

ஒருசிலர் கள்ள உபதேசக்காரர்களை தவறான போதனைகளை இவர்கள் கிறிஸ்து வகுத்த வழிகளல்லாத வழிகளில் ஜனங்களை வழிநடத்துகிறார்கள் என்பதை நாம் சுட்டிக்காட்டி எச்சரிப்பதால் கிறிஸ்தவ மார்க்கமே நம்மால் அவமானப்படுத்தப்படுவதாக அவசியமில்லாமல் அலறுவது நமக்கு வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

என்ன செய்யலாம்? 

என் ஆண்டவராம் மனவாளனுக்கு தேவை மனவாட்டிதானே..!?
   நான் எப்போதும் அவருக்கு மனவாட்டியாகவே இருப்பேன்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?