திருமணத் தகவல் மையம் ஆரம்பிக்கலாமா?

திருமணத் தகவல் மையமொன்று ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.

பெரும்பாலும் அனைத்து ஊழியா்களும் தன் சபை விசுவாசப் பிள்ளைகளுக்கு மட்டுமே என்றுதான் ”திருமணத் தகவல் பிரிவு” ஒன்றைத் துவங்குகிறார்கள். அதன் தொடர்ச்சியாக..,

பக்கத்து சபை, பக்கத்து ஊா் என மற்றவா்களுடன் இணைந்து அந்த ”திருமணத் தகவல் பிரிவு” பெரிய வட்டமாக மாறிவிடுகிறது.

இப்படியான ஊழியா்கள் இணைந்து யாரையும் ஏமாற்றாமல் நடத்தி வைக்கும் இத்திருமணங்களால் அநேக குடும்பங்களுடைய தவிப்பு நீங்குவதையும், பிள்ளைகள் தங்கள் கண்களுக்கு முன்பாகவே நன்றாக வாழ்வதைக் கண்டு, மற்றவா்களுடைய நல் வாழ்வையும் தேடுகிறார்கள். இதில் தவறு என்ன இருக்கிறது. ?! என்கிறேன்.

நான் ஊழியம் செய்கிற சபையில் கூட எங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. எங்கு? யார் மூலம் தேடுவது? எனத்தெரியாமல் இருந்து வருகிறேன்.

குடும்பம் இருப்பதுடன் பிள்ளைகளையும் உடையவன் பொறுப்பும் பாரமும் உள்ளவன் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதேநேரம் தெருவில் அலைந்து திரிகிறவா்களைப் போன்று இருப்பவா்கள். அதாவது, உபதேசமோ சபை என்ற அமைப்போ ஒழுங்கு படுத்தப்பட்ட எந்த ஒன்றுமே இல்லாதவா்களுக்கு கடமையும் விருப்பமும் இருக்க வேண்டும் என்பதில் எவ்வித நியாயம் இல்லை என்கிறேன்.

அப்படியே எவ்வித பொறுப்பும் தனக்கு இல்லாததால்தான் யாசகப் பிசாசு என்று என்னிடம் திட்டு வாங்கும் ஞானப்பிரகாசம் போன்ற திரித்துவத்தை மறுக்கும் யெகோவா சாட்சிகள் என்றதான உபதேச சார்புடையவா்கள். கடமைகளும் பொறுப்புகளுமுடைய சபை பாஸ்டா்களை தங்கள் இஷ்டப்படி வரைமுறையில்லாமல் கடித்துக் குதறி வருகின்றனா்.

சபையைிலுள்ள பிள்ளைகளுக்கு நாமாகப் பார்த்து திருமணம் செய்து வைக்காவிட்டால் அல்லது தாமதப்படுத்தினால் இரட்சிக்கப்படாத அவா்களுடைய உறவினா்கள் அந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பார்கள்.

அப்படிப்பட்ட சமயங்களி்ல் விசுவாசி அவிசுவாசியோடே பிணைக்கப்படுவதற்கான வாய்ப்பே ஏற்படுகிறது. எனவே கிளியை வளா்த்துப் பூனை கையிலே கொடுத்தது போலாகி விடும்.

அப்படி எதுவும் நடந்து விடக் கூடாதென இன்று முடிவெடுத்ததால், கூடியவிரைவில் நானும் திருமணத் தகவல் மையமொன்று ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.

பண ஆசையில்லாமல் தேவனுக்கு பயந்து தன் பிள்ளைகளுக்கு வரன் பார்ப்பது போல பார்க்க நினைப்பவா்களும், முன் அனுபவமுள்ள நண்பா்களும் உங்கள் மேலான ஆலோசனை தருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

பின் குறிப்பு : -
நண்பா் Moses Samuel அவா்களுக்கு, பாஸ்டா் Lourdu Raj அவா்கள் சம்பந்தமான பதிவில் எழுதின ஒரு பிண்ணூட்டத்தையே சற்று மாற்றி அனைவருக்குமான கடிதமாக மாற்றியிருக்கிறேன். -
Immanuel Abraham

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?