விஜய் மற்றும் அவரது நண்பர்களான "நவீன தீவிரவாதிகளுக்கு" ஒரு எச்சரிக்கை.

மனிதன் தேவ சாயலாக படைக்கப்பட்டிருக்கிறான்.

ஆதாம் பரிசுத்தமாக மகிமையுடையவனாய் தேவனால் படைக்கப்பட்டான். தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தில்; உலாவ வரும்போதெல்லாம் பரிசுத்த தேவனை பரிசுத்தமுடைய மனிதனான ஆதாம் சந்திக்கும்படி ஓடி வருவான். ஒருநாள் ஆதாம் ஓடி ஒளிந்து கொண்டானாம். காரணம் அவன் தேவசாயலான மகிமையின் சாயலை இழந்துவிட்டான். பிசாசினுடைய ஆலோசனைக்கு கீழ்படிந்ததால் மனிதன் பிசாசின் சாயலானான்.  (ஆதி 1:27 ஆதி 3:8)  பிசாசின் குணங்களில் ஒன்று அது தேவனுடைய சமூகத்தினின்று விலகி ஓடும். (மாற் 1:24, மத் 8:29)  தேவசாயலை இழந்து , பிசாசின் சாயலான மனிதன் கர்த்தருடைய சமூகத்திற்கு விலகி ஓடி ஒளித்துக் கொண்டான்.

பாவம் செய்வதற்கு முன்புவரை அவன் தேவசாயலாக இருந்தான். தேவ சாயலாக இருப்பவன் தேவனைப் போலவே கிரியை செய்வான். என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். எனவே நாங்களும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்போலவே வாழ்ந்து வருகிறோம் ஒரு வேளை எங்களை அறியாமல் அல்லது நாங்கள் ஒன்று செய்ய வேறு ஒன்றாய் நடந்த சம்பவங்களும் உண்டு. இல்லையென சொல்லவில்லை அதற்காக ஆண்டவரிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுப் பெற்றுக் கொண்ட அனுபவங்களும் உண்டு. அதே நேரம் அப்படிப்பட்ட தவறை திரும்பவும் செய்யக் கூடாதென்று தீர்மாணித்திருக்கிறோம். எப்படியாயினும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமானபடி  நடந்து அவருடைய பாதையை கவனமாக பின் தொடர்கிறோம். உதாரணமாக:

1. முழுக்கு ஞானஸ்நானம்.

பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பெற்றிருக்கிறவரும் தேவஜனங்களால் நற்சாட்சி பெற்றிருக்கிறவருமான ஆவிக்குரிய சபையின் போதகரிடத்திலே இயேசுகிறிஸ்துவைப் போலவே மூழுக்கு ஞானஸ்நானம் எடுத்திருக்கிறோம். மத் 3:14..17

2. பரிசுத்த ஆவியின் அபிஷேகம்.

ஜலத்தினால் பிறந்தவர்கள் ஆவியினால் பிறப்பது அவசியம் என தேவ சமூகத்தில் காத்திருந்து அந்நிய பாஷையின் அடையாளத்துடன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கிறோம். யோவா 3: 3 5 அப் 2: 38

3. வேறுபிரிக்கப்பட்ட கிறிஸ்தவ ஜீவியம்.

உலகத்துடன் சிநேகமாக இராமல் உலகத்தின் கிரியைகளை செயல்படுத்தி  வாழாமல்  மாறுபாடுள்ள சநததிகளை விட்டு விலகி ;எங்களை காத்துக்கொண்டிருக்கிறோம். அப் 2:40 1யோவா 2:15

பிரதிஷ்டை பண்ணப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வரும் நாங்கள் கர்த்தருடைய வார்த்தைகளை உபதேசிக்க கர்த்தரால் கட்டளை பெற்றிருக்கிறோம். ( மத் 28:18..21  1தீமோ 3:2 தீத் 1:7..9) இதனிமித்தம் கர்த்தருக்காக அவருடைய வார்த்தைகளுக்காக வைராக்கியம் பாராட்டுகிறோம்.

இப்படியாக, நாங்கள் எங்களைப் போன்றே கிறிஸ்துவின் உபதேசத்திற்கு கீழ்படிகிற சபைகளுக்கு ஜெபத்தில் மட்டுமல்ல அவர்கள் விருப்பப்படி எல்லா விதங்களிலும் ஆலோசனையும், ஆதரவும் கொடுத்து வருகிறோம். உபதேசம் தெரியாதவர்களும், கிறிஸ்துவின் உபதேசத்திற்கு எதிர்த்து நிற்பவர்களும், உண்மை ஊழியர்கள் சத்தியத்தை அறிவித்தால் அதற்கு எதிராய் நிற்பவர்களுமான இவர்கள், எந்த ஒரு சபைக்கும் கீழ்படியாது இருக்கும் ஆவிக்குரிய குற்றவாளிகள சகோ.விஜயகுமார், பொன்னுத்துரைஜோசப், ஆண்ட்ரூசுந்தரேஷன் போன்றோர். இவர்கள் கிறிஸ்தவ மார்க்கத்தை காப்பாற்ற புறப்பட்டு விட்டார்கள் என்று சொல்வீர்களா?

விஜய் என்பவர், தான் இருக்கும் சபை எது? அச்சபையின் உபதேசம் என்ன? அது சரியா? தவறா? என்று  விவாதிக்க ஆயத்தமாக இருக்கிறாரா? அதை விட்டுவிட்டு விஜயகுமார் போன்றோர் அண்டை வீட்டை...., ஆவிக்குரிய சபைகளை எட்டிப்பார்க்க குற்றம் சுமத்த துனிகரம் கொண்டது எப்படி?

     தேவ ஊழியக்காரனான எனக்கு கர்த்தருடைய சபையை நடத்தும் பொறுப்பும் உரிமையும் கொடுக்கப்பட்டிருக்கிறபடியினாலே, எமது கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவை தலையாகக் கொண்ட மணவாட்டியும், இயேசுவின் சரீரமுமான சபையின் உறுப்புகளை கேவலப்படுத்தி; கேலிபேசுவதுமட்டுமல்ல ஆங்காங்கே பிடித்து இழுத்து துன்பப்படுத்தும் கயவர்களை கண்டிக்கிறேன். காரணம் ,நான் கர்த்தருடைய சாயலில் படைக்கப்பட்டவன். இயேசுகிறிஸ்துடைய சிந்தையை தரித்திருக்கிறேன். தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார்.

 சகோ.விஜயகுமார், பொன்னுத்துரைஜோசப், ஆண்ட்ரூசுந்தரேஷன் போன்றோர் எழுதலாம் உங்களது சபைகளைப் பற்றி மட்டுமே உங்களது சபையின் முறைமைகள் அதின் நிறை குறைகள் உங்களது சபை உபதேச காரியங்கள் தேர்தல் சம்பந்தமான மோதல்கள் இன்னபிற நிகழ்வுகள் பற்றி பேசி எழுதிக் கொள்ளுங்கள்.  அதை விட்டு விட்டு  பரிசுத்த ஆவியின் நிறைவில் பாடித் துதிப்பவர்களை வலிப்பு நோய் வந்தவர்கள் என்பதும் குண்டலினி என்பதும் சரியில்லை. அப்படியும் விடாமல் செய்வீர்களானால்.. என்னால் முடிந்த அளவிற்கு எதிர்ப்பேன். மறுப்பு தெரிவிப்பேன். இயலாத பட்சத்தில் உங்களுக்கும் எனக்கும் இடையில் நின்று  கர்த்தர் நியாயம் தீர்க்கட்டும் என்று விட்டுவிடுவேன்.

Comments

  1. Your accusations against these brethren are not based on logic or scriptures at all. They have simply brought to our notice what has been happening in the secret places of our spiritual lives. They are performing the function of "watchmen" to warn us. How can you say that they are not part of any local churches? Do you have any evidence. They have merely said that the spirit of Kundalini is active in our midst and has never said that the spirit of Kundalini is present in our churches. The devil is not omnipresent at all. Kindly correct yourself. We should know how the Holy Spirit works in our midst by going through the Acts of apostles. There are many weird manifestations of evil spirits in our midst. The people who manifest such weird manifestations remain the same and there is no change in their spiritual lives. They commit the sin willfully. We have to know the fruits of these people and their leaders. Read what the Holy Spirit writes to the seven kinds of churches. There are churches in our midst where the prophetess Jezebel preaches her false doctrines. There are churches in our midst where false teachers are teaching, taking the place of "apostles and prophets".

    ReplyDelete
    Replies
    1. "Prophet India" என்ற கம்பேனி வைத்திருக்கும் நண்பர்.., தமிழ் மொழியில் இருக்கும் இந்த பதிவை தமிழிலேயே படித்திருப்பார் என்றே நினைக்கிறேன். தமிழிலேயே பதில் அல்லது பிண்ணூட்டமும் அனுப்பியிருக்கலாமே...?!! நான் ஆங்கிலம் வாசிப்பேன். எல்லாவற்றையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கு புலமை பெற்றவன் இல்லை. ஒருவேளை உங்களுக்கு தமிழ் வரவில்லையானால்..., தமிழை ஆங்கிலத்தில் எழுதுவீர்களானால்.., புரிந்து கொண்டு, நான் பதில் அளிக்க வசதியாக இருக்கும். நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?