முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன?

மூன்றாம் பாகம் 
பாஸ்டர்... மனம்திரும்பினவர்கள் மரித்துப் போனவர்கள் அதாவது பாவத்திற்கு மரித்தவர்கள் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் ஞானஸ்நானம் எடுத்ததாகச் சொல்லுகிற நிறைய கிறிஸ்தவர்கள் மனந்திரும்பினதற்கான எவ்விதமான அடையாளமும் இன்றி வாழ்கிறார்களே..? என்று ஒரு கேள்வி எழலாம்.
"ஞானஸ்நானம் எடுத்தவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லை" என்பதை இங்கே நீங்கள் அறிந்து கொள்வது நல்லது. கிறிஸ்தவன் என்று அழைக்கப்படுகிற எந்த ஒரு நபரும் கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்ளாவிட்டால், அவர்கள் கிறிஸ்தவத்திற்கு கறைகளாகவும் குறைகளாகவும், காணப்படுகிறார்கள். உதாரணமாக, கத்தோலிக்கர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக் கொள்வார்கள். இவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதால் கிறிஸ்தவர்களா? இல்லையே இவர்கள் பெற்றோர் காலத்தில் சூழ்நிலையால் கிறிஸ்தவர்களாக மாறினார்களாம். சரித்திரத்தில் அப்படித்தான் வாசிக்கிறோம்.

ஒரு நண்பரிடம் பேசியபோது அவர் இவ்வாறு சொன்னார்:  எங்கள் பெற்றோருடைய காலத்தில் நாங்கள் சுடலைமாடன் என்ற துஷ்டஆவியை வணங்கி வந்தோம். இப்போது சிலையையும் பெயரையும் மட்டுமே மாற்றி இருக்கிறோம். ஆனால் கடவுள் வணக்கமாக இருந்தாலும் எங்கள் வாழ்க்கை முறையாகட்டும் நாங்கள் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை என்றார். இன்னும் விளக்கமாகச் சொல்லுங்கள் என்றேன் தொடர்ந்து அவர் இவ்வாறு சொன்னார்:  
சூடம் கொளுத்தி சாமி கும்பிட்ட நாங்கள் மெழுவர்த்தி கொளுத்தி மாதா கும்பிடுகிறோம். அன்று தோப்புக்கரணம் போட்டோம் இன்று முழங்கால் போடுகிறோம். அந்தச் சாமியும் சிலை இந்த மாதாவும் சிலை அந்த சாமிக்கும் மாலை இந்த மாதாவுக்கும் மாலை அந்த சாமிக்கும் (மாந்து) பட்டு இந்த மாதாவுக்கும் (மாந்து) பட்டு அங்கு சப்பரம் இங்கு தேர் அங்கும் கொடிமரம் இங்கும் கொடிமரம் அந்த கொடி மரத்திலும் சுடலை இந்தக் கொடி மரத்திலும் சுடலை அங்க பத்து நாள் கொடை இங்க பத்து நாள் திருவிழா அங்கயும் சினிமா கச்சேரி இங்கயும் சினிமா கச்சேரி அங்குள்ள பெண்களுடைய நெற்றியில மட்டும்தான் குங்குமம் இங்குள்ள மாமி நெற்றியில மட்டுமில்ல வகிடு எடுக்குமிடத்திலும் குங்குமம். அங்கும் கோயிலை சுற்றி வந்து கிடா வெட்டுவோம் இங்கும் கோயிலை சுற்றி வந்து கிடா வெட்டுகிறோம். சுடலைக்கோயில் கொடை சமயத்தைக் காட்டிலும் மாதா கோயில் திருவிழா நேரத்தில்தான் பிராந்திக்கடையில் அதிக விற்பனை நடக்கிறது. வெளிநாட்டுச்சாராயம் குடிச்சுட்டு ஆடுகிற ஆட்டத்திற்கு அளவே இல்லை. இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம் பெயர் மட்டுமே மாறி இருக்கிறது மற்றபடி எல்லாம் அதேதான் இது என்றார்.  இவர்களை கிறிஸ்தவர்கள் என்று அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அப்படி அழைத்தால் என்னை வேத வசனம் அறியாதவன் என்று சொல்லலாம்தானே...!  ஏனெனில்:
 
  முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோம 6: 17..23


முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,
உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
அன்றியும் பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்இ
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 1பேதுரு1:14..19


ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2கொரி 5:17

 என்ற வேத வசனங்களெல்லாம் இருக்கும்போது வேதவசனத்தின்படி கீழ்படியாமல் வாழ்ந்து வருவது மட்டுமல்லாமல், கிறிஸ்துவுக்கும், கிறிஸ்தவ மார்க்கத்திற்கும் உண்மையாய் இருப்பவர்களைப் பற்றி, தாறுமறாக எழுதுகிற தகுதியில்லாதவர்களை  நான் எப்படி கிறிஸ்தவன் என்ற அழைக்க முடியும்
  
நம்மீது அன்பு கொண்ட செல்லப் பிராணிகளான நாய்கள் டாமி (தோமா),  ஜிம்மி (ஜேம்ஸ்),  ஜோஷி (ஜோசப்) என்ற கிறிஸ்தவ பெயர்களுடன் வலம் வருகிறது, வாலை ஆட்டுகிறது. தன் எஜமானனுக்காக மற்றவர்களைப் பார்த்து குலைக்கிறது. இந்த கிறிஸ்தவ பெயர் தாங்கின நாய்களை,  தங்கள் கிறிஸ்தவ எஜமானனுக்காக நன்றியோடு காணப்படும் அதை  யாரும் கிறிஸ்தவநாய்கள் என்று சொல்வதில்லையே?



அப்புறம் எப்படி தாங்கள் சார்ந்துள்ள சபைகளிலிருந்து மக்கள் வெளியெறி ஆவிக்குரிய சபைகளுக்கு போவதை பொறுக்கமாட்டாமல் ஆவிக்குரிய சபை போதகர்களை, அவர்களுடைய மனைவி மற்றும், பிள்ளைகளைப்பார்த்து கத்தி, குலைக்கிறவர்களாகிய:- மதுரை-விஜய்குமார், பாளையங்கோட்டை-பொன்னுத்துரைஜோசப், திருநெல்வேலி-ஆண்ட்ரூசுந்தரேஷன், நாகர்கோவில்-ஜாய்ஷில்ஜோசப், உடன்குடி-பால்ஞானையா மற்றும் இவர்களைப் போன்ற மற்றவர்களையெல்லாம் எப்படி கிறிஸ்தவர்கள் என்று அழைக்கிறீர்கள்? 

   நான் எழுதியிருக்கிற இந்த வார்த்தைகள் இவர்களது ஆதரவாளர்களுக்கும், விபரமறியால் இவர்களுடன் நட்பாக இருப்பவர்களுக்கும் வருத்தமாக இருக்கும். எதுவும் புரியாமல், எல்லாத்துக்கும் ஜால்ரா போடும் அரைகுரைகளுக்கு ஆத்திரமாக வரும். பரிசுத்த ஆவியின் நிறைவை குண்டலினி எனும் பிசாசு வணக்கத்தோடு ஒப்பிடுகிறவனை, ஊஞ்சலில் வைத்து தாலாட்டுப் பாட்டு பாடவா வேண்டும்?

கர்த்தருடைய கட்டளைகளின்படி நடக்காத எவனையும் நான் கிறிஸ்தவன் என அழைப்பதில்லை. எது கட்டளை? அடுத்த வெளியீடைப் பாருங்கள்...!

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?