முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன? - 5

ஞானம் + ஸ்நானம் = ஞானஸ்நானம். 

ஞானம்  என்றால் என்னவென்று? ஞானம் உள்ள அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் ஒருவிசை நினைவுபடுத்துகிறேன். இங்கே ஞானம் என்பதை, தேவனுக்கேற்ற அறிவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எப்படியெனில், இஸ்ரவேலர்கள் ஊருக்கு வெளியே வணாந்திரமான இடத்தில், யோர்தான் நதிக்கரையில், பகட்டானதும், மெல்லியதுமான ஆடைகளை அணிந்திருந்திராமல், மிகவும் எளிமையான ஒட்டக மயிர் ஆடை அணிந்துள்ளவன் என்று ஏளனமாக எண்ணாமல்..., எருசலேம் தேவாலயத்திலும், அரண்மனைகளிலும் நின்று அருளுரையாற்ற வேண்டிய சகரியா என்ற ஆசாரியனின் மகன், வணாந்திரத்திலே நின்று சத்தமிடுகிறானே என்று, அசட்டையாக எண்ணாமல்..., பிரசங்கம் பண்ணி ஞானஸ்நானம் கொடுக்கும் இவனுக்கே நல்ல சாப்பாடு இல்லை, நல்ல வசதியான வீடு இல்லை, காட்டுத்தேனையும் வெட்டுக்கிளியையும்தான் உணவாகக் கொள்ளுகிறான். என்றெல்லாம், அவமானப்படுத்தாமல்..., யோவானுடைய வார்த்தையிலிருக்கும் கடுமைகளைக் கண்டு வெருப்படைந்து தூற்றித்திரியாமல்..., இஸ்ரவேல் மக்களில் ஒரு கூட்ட மக்கள் யோவானுடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளை மட்டுமே கூர்ந்து கவனித்தார்கள். எனவே, எங்கள் பிதாக்களுடைய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர் ஆகையால், நாங்கள் பரிசுத்தமாக இருப்பதுதான், கர்த்தருக்குப் பிரியம். நாங்கள் பரிசுத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்ற பயத்துடனும், தேவ ஆலோசனைக்கு கீழ்ப்படிந்து இருந்தால்தான், தேவனுடைய ராஜ்யத்தில் பங்கடையமுடியும் என்ற ஆவலுடனும்தான் பாவங்களை தயங்காமல் அறிக்கையிட்டு, தேவனுக்கேற்ற ஞான உணர்வடைந்து, தேவ மனிதனாகிய யோவானிடத்தில் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அவரது சீஷரிடத்திலும் இயேசுகிறிஸ்துவிடத்திலும் இயேசுவுடைய சீஷர்களிடத்திலும் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டார்கள். 

இதுதான் ஞானமுள்ள, ஸ்நானம்....,  "ஞானஸ்நானம்"

ஸ்நானம்

ஆங்கிலத்தில்: Water Baptism". The word Baptize means "To dip under water" (தண்ணீருக்கு கீழே அமிழ்த்தி ) என்றும் கிரேக்க மொழியில்: "βαπτίζω" Baptizo means "To immerse or dip under water" (தண்ணீருக்குள்ளே மூழ்கி ஆழ்த்தி ) என்றும் சொல்லப்படுகிறது. கர்த்தருடைய ஆலோசனை மூழுக்குவதும் ஆழ்த்துவதும்தான். 

ஞானஸ்நானம் எடுப்பவர்கள் தண்ணீரில் இறங்கினார்கள், ஏறினார்கள் என்று படிக்கிறோம். மத் 3:16. ல் இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே" என்றும் அப் 8:38 39 ல் "அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள் பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான். அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது" என்றெல்லாம் பரிசுத்த வேதாகமத்தில்  படிக்கிறோம். அப்படியானால் மூழ்குவதற்காகத்தான் தண்ணீரில் இறங்கினார்கள் மூழ்கி எடுப்பதுதான் சரியான முறை. அதற்கு ஆதாரமாக இன்னும் சில சம்பவங்களை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். கடந்த பதிவிலேயே நான் குறிப்பிட்டபடிருந்தபடி ஞானஸ்நானத்தின் ஒரு பகுதி அடக்க ஆராதனைக்கு நிகரானது என எழுதியிருந்தேன். அதாவது, மரித்தப்போன மனிதனை அடக்கம் செய்கிற அல்லது புதைக்கிறதான நிகழ்வுதான் ஞானஸ்நானத்தின் ஒரு பகுதி 

அடக்கம் அல்லது புதைத்தல் என்றவுடன் ஒரு சம்பவம் எனக்கு நினைவில் வருகிறது. சமீபத்தில் நாகர்கோவிலில் ஒரு அடக்க ஆராதனையில் கலந்து கொண்டேன். பிறந்த மூன்று நாட்களே ஆன குழந்தையின் உடல் அடக்க ஆராதனை நிகழ்வாகும். நான் கல்லறைத் தோட்டத்திற்குப் போயிருந்தபோது, அந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தைப் புதைப்பதற்காக 6/6 அளவுக்கு குழி எடுத்திருந்தார்கள். அடக்கம் என்றால் அதுதான் முறை. முறைப்படி மரித்தவனை எல்லாரும் அங்கீகரித்து அடக்கம் செய்யும் நிகழ்வில் கிறிஸ்தவர்களது ஒழுங்கு அது. 

சின்னக்குழந்தைதானே ஒரு குவளை மண்ணை அந்த சரீரத்தின் மீது தெளியுங்கள். அப்படிப்பட்ட அடக்கம் போதும் என்று எவனாவது சொல்லுவானா? அப்படி சொல்லுகிறவனை நாகர்கோவில்காரர்கள் மட்டுமல்ல... எவரானாலும் பைத்தியக்காரன் என்று விரட்டியடிப்போம் அல்லவா? அப்புறம் எப்படி? பாவத்திற்கு மரித்தவனை பாரம்பரிய சபையினர் மூழ்கடித்து அடக்கம் செய்யாமல் ஒரு கிளாஸ் தண்ணீரை மாத்திரம் தெளித்து அனுப்புகிறார்கள்? 

உள்நோக்கத்திற்காக ஞானஸ்நானம் எடுப்பவர்களும், திருமணத்திற்காகவும், ஆசிரியர் மற்றும் செவிலியர் அல்லது, சபை சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக ஞானஸ்நானம் எடுப்பவர்களும், உலக ஆசிர்வாதத்திற்காக மட்டுமே முழுக்கு ஞானஸ்நானம் எடுத்த பொன்னுதுரைஜோசப் ( நான் A.G சபையில் அங்கத்தினராக சேர்வதற்கு முன் பாஸ்டர் சொன்ன காரணத்தால் விபரம் தெரியாமல்...! அன்றைக்கு முழுக்கு ஞானஸ்நானம் எடுத்தேன். அந்த நாட்களில் உலக ஆசீர்வாதத்துக்கு ஆசைப்பட்டு இயேசுவை பின்பற்றினேன் -பொன்னுதுரைஜோசப்) போன்றவர்களும் பாவத்திற்கு சாகாமலிருந்தும் பாஸ்டர்களிடம் பாவத்திற்கு செத்துவிட்டோம் என பொய் சொல்லி அடக்கமானவர்கள் பாஸ்டர் தண்ணீரை விட்டு வெளியேறும் முன்னதாகவே எழுந்து வந்து, ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவனை அடக்கம் செய்யும்போது, ஒரு கையையோ, காலையோ உடலின் எந்த ஒரு பகுதியையுமோ, வெளியே தெரியும்படி அடக்கம் செய்யமாட்டார்கள். முற்றிலும் புதைப்பதுதான், சரியான முறை. வெளியில் தெரியும்படி அடக்கம் செய்தால்... நாய்களும், நரிகளும் வெளியே இழுத்துப்போட்டு விடும். காக்கைகளும், கழுகுகளும் தின்று கொழுக்கும். இதே போலவே எல்லா அங்கங்களும் சரியான முறையில் மூழ்கடிக்கப்படாமல், ஞானஸ்நானம் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டவர்களைத்தான் பிசாசு இழுத்து வெளியே போட்டுவிட்டிருக்கிறான். இவர்கள்தான் இன்று அசிங்கமாக அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி தெளிப்பு என்னும் ஏமாற்று ஞானஸ்நானம் எடுத்தவர்களும் அப்படி எடுப்பதை தீவிரமாக ஆதரிப்பவர்களுமான விஜயகுமார், பொன்னுதுரைஜோசப், ஆண்ட்ரூசுந்தரேஷன் போன்றோர் கிறிஸ்தவ மார்க்கத்தை புறவினத்தார், கிறிஸ்தவர் அல்லாதார் மத்தியில் நடித்து, நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை வாசிக்கிற அன்பர்களே...! சற்று யோசியுங்கள். நீங்கள் எந்த ஞானஸ்நானம் எடுத்திருக்கிறீர்கள்? ஒரு வேளை குழந்தை ஞானஸ்நானமும், தெளிப்பு ஞானஸ்நானமும் எடுத்திருப்பீர்களானால்...? இன்று உங்களுக்கு ஒரு நல்ல ஆலோசனையை தேவஞானத்திற்கேற்றபடிக் கொடுக்கிறேன். 
   
பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் கர்த்தருடைய ஆலோசனைப்படி பாவமன்னிப்பிற்கென்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கொடுத்த அதிகாரத்தின்படியே கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்களிடத்திலே ஞானஸ்நானம் எடுத்துக் கொள்ளுங்கள். 
அதுதான் ஒழுங்கு. தேவ ஒழுங்கு.

இங்கே சில அறிவாளிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் முட்டாள்கள் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்கள் எல்லோரும் கள்ளர்களும் காணிக்கை திருடர்களாகவும் இருக்கிறார்கள் தெரியுமா? என்று குற்றஞ்சாட்டுவார்கள். இப்படிப்பட்ட கள்ள, திருட்டு ஊழியர்களைத் தவிர்க்க ஒருவழி சொல்லுகிறேன். மிக சுலபமான வழிதான் கொஞ்சம் பொறுத்திருங்களேன்.       
                                                                                              -தொடரும்

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?