முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன? - 2

இரண்டாம் பாகம் 

கிறிஸ்துவுக்குள் எனக்கு மிகவும் பிரியமானவர்களே கிறிஸ்துவின் மாறாத அன்புடன் வாழ்த்துக்கள் கூறி முழுக்கு ஞானஸ்நானம் அவசியம் பற்றிச்சொல்ல விரும்புகிறேன்.

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனங்களின் அடிப்படையில் தெளிப்பா? மூழ்கியா? என்ற கேள்வியே எழுப்பப்பட வேண்டிய அவசியமில்லை. ஞானஸ்நானம் என்றாலே முழுக்கு ஞானஸ்நானம் என்பதைத்தான் வேதவசனம் கூறுகிறது. ஆனால் கள்ள உபதேசங்களில் ஒன்றான தெளிப்பு ஞானஸ்நானம் என்ற நூதன முறையை  கிறிஸ்தவ அமைப்புகளுடன் தந்திரமாக உறவாடி துணிகரமாக நுழைத்து அதற்கான இயக்கங்களையே உருவாக்கிவிட்டபடியினாலே… ஆவிக்குரிய சத்திய சபையாராகிய நாம் விவாதிக்க அவசியமே இல்லாததும் வேதத்தில் காணப்படாத பழக்க வழக்கங்களில் ஒன்றுமான தெளிப்பு ஞானஸ்நானத்தையெல்லாம் மறுக்க வேண்டிய நிலையில் நிற்கிறோம்...!? சற்றுப்பொறுத்துக் கொள்ளுங்கள். சத்தியத்தை, சஞ்சலமில்லாமல் அறிவிப்போம்.

கடந்த பதிவுகளில் மத் 28: 18..20 வரையுள்ள வசனங்களை மேற்கோள்காட்டி ஞானஸ்நானம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே என்ற கர்த்தருடைய கட்டளைகளின்படி எடுக்க வேண்டும். என்பதை எழுதியிருந்தோம்.

  இப்போதும் ஞானஸ்நானம் எப்படி எடுக்க வேண்டுமென்று?  பார்க்கும் முன்பாக..., ஞானஸ்நானத்தின் துவக்கத்தைப் பற்றி மத்.3-ம் அதிகாரத்தில்

யோவான்ஸ்நானகன் தேவராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்றும் தேவராஜ்யத்தில் பங்கடைய ஆவல் உள்ளவர்கள் எல்லாம்  கர்த்தரோடு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டுமென்றும் அந்த உடண்படிக்கைக்கு அடையாளமாக ஞானஸ்நானம் எடுத்தாக வேண்டும் என்ற ஆவியானவருடைய ஆலோசனையை யோவான்ஸ்நானகன் அனைவருக்கும் பிரசங்கிக்கிறார். அவருடைய வார்த்தையை தேவ வார்த்தையாகவே மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் எடுத்துக்’ கொண்டு தேவராஜ்யத்தில் பங்கடைய ஆயத்தமானார்கள். என்று பார்க்கிறோம்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் ஞானஸ்நானம் கொடுத்தார். யோவா 3:22 என்றும் ஞானஸ்நானத்தைப் பற்றிப் பேசும்போது அது மறுபடியும் பிறக்கிற அனுபவம் என்று அதே அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களில் படிக்கிறோம்.

கவனிக்கவும்:-ஞானஸ்நானம் மறுபடியும் பிறக்கிற முக்கிய அனுபவம். யூதருக்குள் அதிகாரிகளாக இருப்பவர்களால்கூட புரிந்து கொள்ள முடியாத அனுபவம்தான் என்றாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து விளக்கமாகக் கூறினார். ஜலத்தினால் பிறக்க வேண்டுமென்று… 
  ஒரு மனிதன் மறுபடியும் பிறக்க வேண்டுமானால்.. புதிய வாழ்வு வாழ வேண்டுமானால். பாவத்திற்கு மரிக்க வேண்டும். அதாவது பாவமனிதன், பழையமனிதன், பாவமானத்தன்மைகள் மரிக்க வேண்டும்.

  நம்முடைய பிதாவாகிய தேவனும்  (ரோம 6;: 2) நாம் அவருக்குள் (பிதாவுக்குள்) தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (இயேசுவை) நமக்காக (பிதாவாகிய தேவன்) பாவமாக்கினார்.(1கொரி 5:21)

அவர் (இயேசுகிறிஸ்து) மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்,(ரோமர் 6:10) நம்முடைய பாவங்களை பிதாவாகிய தேவன் இயேசுவின் மேல் சுமத்தினார் ஆனபடியினாலே ஒரு பாவமும் அறியாத இயேசு நமது நிமித்தமாக பாவமாக்கப்பட்டார். எசே 18: 4 மற்றும் 20 வசனத்தின்படி பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும். என்றும் ரோம 6:23 வசனத்தின்படி பாவத்தின் சம்பளம் மரணம் என்ற வசனங்களின்படியேயும் இயேசு மரித்தார். என்று அறிந்து கொள்கிறோம். அவர் (இயேசுகிறிஸ்து) பாவம் செய்யவில்லை. (ஏசா53:9, யோவா8:46) என்றாலும், நம்முடைய பாவத்தை இயேசு சுமந்தபடியினால்… இயேசுகிறிஸ்து நமக்கு பதிலாக உண்மையாகவே மரித்தார்.

தேவ நீதி மற்றும் தேவ நியமத்தின்படி பாவத்தின் சம்பளம் மரணம் என்ற வசனத்தை நிறைவேற்ற நமது பாவத்தை சுமந்த இயேசு மரித்தார்.

  பாவமே செய்யாத இயேசுகிறிஸ்து நமது பாவம் சுமந்ததால் மரித்திருப்பாரானால் பாவம் செய்த செய்கிற நாம் சாக வேண்டுமென்பது நிச்சயமல்லவா?

ஆனால், ரோம 8:2 ன்படி கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

  எனவேதான் நாம் மரிக்க வேண்டியதில்லை என சபையானது அறிவிக்கிறது. 1பேது 4:1 நமக்காக பாடுபட்டார் ரோம 6:10 மரித்தார். எனவே நாமும் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால் (கொலோ2:20) சரீரப்பிரகாரமான மரணம் இல்லை. பாவத்திற்கு சாபத்திற்கு உலகத்தின் வழிபாடுகளுக்கு பழக்கவழக்கங்களுக்கு…. மரித்துப் போகுதல்
மரித்துப்போன மனிதனின் தன்மை
உதாரணமாக மிகவும் ருசியாக சாப்பிடும் வழக்கமுடைய மனிதன் மரித்துப் போவாரானால் அவருக்கு முன்பாக எத்தனைதான் ருசியுள்ள உணவை நீங்கள் பரிமாறினாலும் சாப்பிட மாட்டார். காரணம் அவர் மரித்து விட்டார். நன்றாக மதுபானம் குடிக்கிற பழக்கமுடைய ஒருவர் மரித்தபின்பு அவருக்கு முன்பாக எத்தனைதான் விலை உயர்ந்த வெளிநாட்டு மதுவகைகளை வைத்தாலும் குடிக்கமுடியாது. காரணம் அவர் மரித்து விட்டார். இன்னும் மண் பொன் பெண் மீது விருப்பம் கொள்ளுகிற மனிதர் செத்துப் போனபின் ஒன்றையும் அனுபவிக்கப் போவதில்லை. அது முடியவும் முடியாது.

  இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்… அது என்ன கேள்வி? என்பதையும், அதற்கான பதிலையும், அடுத்தப் பதிவுகளில் காண்போம்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?