எனது தாய்மதம் எது? பாகம் -1

புதிதாக ஒரு வார்த்தை தோன்றப்பண்ணப் பட்டிருக்கிறது அது: ‘தாய்மதம்’. இப்போது சிலர் மதம் மாறி இருக்கிறார்களாம் இவர்கள் வேறு பல மதங்களிலிருந்து இந்து தருமத்தை தழுவ ஆரம்பித்துள்ளதாக ஒரு பரபரப்புச் செய்தி பரப்பட்டது.. இதில் எனக்கு வருத்தமளிக்கும் செய்தி என்பது இவர்கள் மதமாறியதால்  அல்ல.  பத்திரிகைகள் உட்பட பலரும் இவர்கள் “தாய்மதத்துக்குத் திரும்பிவிட்டார்கள்” “தாய்மதத்துக்குத் திரும்பிவிட்டார்கள்” என இதை பரபரப்பான செய்தி ஆக்குவதுதான் சரியில்லாதது போல் தோன்றுகிறது.
ஒருவருக்கு எது தாய்மதம்? முதலில் அப்படி ஒன்று இருக்கிறதா?  தாய்மொழியைப் போன்றதாய் அது இருக்குமென்றே எடுத்துக்கொள்ளலாம். தாய்வழி -மொழி  தாய்மொழி என்பதற்கு சரியாய்  தாய்வழி மதம்தானே தாய்மதமாயிருக்க முடியும்.  மதம் மாறியவர்களைப் பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியவில்லை. ஆனால் “எனது தாய் மதம் இந்து மதம் அல்ல” என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்து மதம் இந்தியாவில் எப்படி உருவானது? இந்தியர் அனைவருக்கும் எந்த நாள் முதலாய் அது தாய்மதமானது? என்பதை நாம் ஆய்வு செய்வோமால் , கிடைக்கும் பதில்:  தாய்மதம்னு ஒன்னு கெடயவேகெடையாது.
ஒரு சிலர்  தாங்கள் தங்கள்  தாய்மதத்திற்கு மாறுவதாகச் சொல்வது, அவர்கள் முதல் தலைமுறை இந்துக்களாயிருந்தால் மட்டுமே சரியானதாயிருக்கும். இல்லையென்றால் இந்தியாவில் பிறந்தவரான எல்லோருமே அடிப்படையில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுடைய  ‘தாய்மதம்’ இந்து மதம்தான்  என்பதுபோலாகிவிடும் அல்லவா?  தாய் மொழின்னா என்ன? அம்மா பேசுற மொழிதானே? அந்த அம்மாவே யார்னு தெரியாதவங்களுக்கு எது தாய்மொழி..?  எதை தாய்மதம்னு சொல்ல முடியும்?  ஒருவன் எதை தன்னுடைய மொழியென்றோ மதமென்றோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறானோ அதுதான் அவனுடைய மொழி அல்லது மதம். இப்படி வைத்துக் கொள்வோம். ஒருவேளை ஒருவன் ஒரு மதத்தில் பிறந்து அவனே விரும்பி வேறொரு மதத்திற்கு மாறி… பிறகு திரும்பவும் பழைய மதத்திற்கே போகிறான் என்றால்…, தாய்மதம் திரும்புகிறான் என்று சொல்லலாம். அதாவது வயது வந்த ஒருத்தர் சுய நினைவோடும் சுய விருப்பத்தோடும் தான் இன்ன மதத்தான் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால்… முதன்முதலில் அவர் தன்னை  அடையாளப் படுத்தும் மதத்தை வேண்டுமானால் தாய்மதம் எனலாம்.  என்னுடைய ஆதங்கமெல்லாம் மற்றவர்கள் செய்யும்போது இது ‘கட்டாய மதமாற்றமாகவும்’ சிலர் செய்யும்போது ‘தாய்மதம் (அவர்களாகவே) திரும்புதலாகவும்’  காட்டப்படுது எப்படி? என்பதுதான். இதையும் மதமாற்றம் என்றே அழைக்கவேண்டும். மனித இனத்துக்கு எது தாய் மதம்? இந்தியாவில் எத்தனையோ மதங்கள் வாழ்ந்தும் வீழ்ந்தும் சென்றுள்ளன. பல தலைமுறைகளாக ‘தாய் மதங்கள்’ என்று போற்றப்பட்டவை  இருந்துண்டு இல்லாமலும் போய்விட்டிருக்கின்றன என்பதையெல்லாம் மொத்தமாய் மறந்துவிடக்கூடாது.
தாய்மதம் திரும்புதல் என்பது பிராமன  ஊடகங்களின் விஷ(ம)அம்பு.  திட்டமிட்டுப் பயன்படுத்தப்படும் வார்த்தைப்பிரயோகம். மதம் மாறுதல் என்பது மனம் சம்பந்தப்பட்டதாக இருந்தால்  மட்டுமே உண்மையாய் இருக்க முடியும். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி ஒரு மதத்திற்குள் அடைக்கும் யதேச்சாதிகாரச் சூழலில் இன்று இந்தியா இல்லை என்பதே உண்மை. ஆக மதம் மாறுவது என்பது தனிமனித விருப்பம். கட்டாய மதமாற்றம் என்ற வார்த்தைப் பிரயோகம் வெகு காலமாக ஊடகங்களில் பயன்படுத்தப்படுவதை நாம் எதிர்க்காமல் இருந்து விட்டதால் இன்றைக்கு தாய்மதம் திரும்புதல் என்ற ஊடகஅம்பு எறியப்படுகிறது. இந்து மதத்திலிருந்து கிறித்துவத்துக்கோ, இஸ்லாத்திற்கோ மதம் மாறுவதாகட்டும் அல்லது கிறித்துவத்திலிருந்து, இஸ்லாத்திலிருந்து, இந்து மதத்திற்கு மாறுவது என்பது “தனி மனித உரிமை”தை விமர்சனத்திற்கோ விசாரணைக்கோ உட்படுத்த வேண்டிய அவசியம் எவருக்குமில்லை. என்பதான  அதே வேளையில் அதை கொண்டாடவேண்டிய அவசியமுமில்லை என்கிறேன்.
மதம் என்று அழைக்கப்படும் எல்லாவற்றிற்கும் ஒரு பெயர்க்காரணம் அல்லது அர்த்தம் உண்டு. உலகின் மிகப்பழமையான  யூத மதத்திற்கு ஈபுரு மொழியில் “கொண்டாடப்படுவது” என்ற அர்த்தமும் யாக்கோபின் நான்காவது மகனான யூதாவின் வழிவந்தவர்கள் என்ற பெயர்க்காரணமும் உண்டு. கிறிஸ்துவத்திற்கு இயேசு கிருஸ்துவின் வழி வந்தவர்கள் என்கிற அர்த்தமும், இஸ்லாமிற்கு சரணடைதல் என்கிற அர்த்தமும் உண்டு. பௌத்த, ஜைன மதங்களுக்கும் உரிய‌ பெயர்க்காரணங்களும் உண்டு. ஆனால் இந்து என்கிற சொல் சிந்து என்கிற சொல்லில் இருந்து மறுவி வந்தது என்கிற பின்னணி மட்டும்தானேன இருக்கிறது. ஆனால் வேதங்களிலோ புராணங்களிலோ மற்ற இந்து மத நூல்களிலோ இந்து என்கிற சொல்லே இடம்பெறவில்லை. இந்து என்கிற சொல்லிற்கு பாரசீக மொழியில் இந்திய கண்டத்தைச் சேர்ந்தவன். அடிமை மற்றும் பெரியார் கலைஞர் கூறிய திருடன் என்ற அர்த்தமும் உண்டு. 5000 ஆண்டு தொன்மையுடையது என்று கூறப்படும் ஒரு சமயத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முன் படையெடுத்து வந்த பாரசீகர்களால்தான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்து மதம்தான் இந்தியாவின் தொன்மையான மத நம்பிக்கை என்கிற வாதமே பொய்யானது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?. ஆரியர்களால் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இனம்பிரிக்கும் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட‌ சனாதானம் என்கிற கட்டமைப்பே பாரசீகர்கள் இந்திய கண்டத்தினரை இழிவாக குறிக்க உபயோகித்ததாகும். இந்து என்கிற சொல்லை வளிநாட்டினரிடம் இருந்து கடன் வாங்கி இன்று இந்து, இந்துமதம் என்று அழைத்துப் பெருமைப் பட்டுக்கொள்கிறார்கள்…!
ஆரியர்கள் எப்படி சூத்திரனும் பஞ்சமனும் தன்னை விட தாழ்ந்தவனாக கருதினார்களோ..! இன்றும் கருதுகிறார்களோ..! அதேப் போன்று பாரசீகர்கள் இந்தியாவில் வாழ்ந்த அனைவரையும் (ஆரிய திராவிட இன வேறுபாடுகள் இன்றி) இந்து என்று பொதுவாக இழிவாக அழைத்தார்கள். பாரசீகர்கள் சாதியின் பெயரால் பிரிந்து கிடந்த சமுதாயத்தை தங்கள் ஆளுமைக்கு கீழ் கொண்டுவர அவர்களுக்கு வர்ணாசிரம் உதவி புரிந்திருக்கிறது. சூத்திரன் ஆளும் நாட்டில் இருப்பதைவிட வேறு எங்காவது வாழலாம் என்று 80-களில் பார்ப்பனர்கள் அமெரிக்காவிற்கு போனது போல… உயர்சாதியினர் ஆளுகைக்கு கீழ் இருப்பதை விட அந்நியர்களின் ஆளுகைக்கு கீழ் வாழ்வது மேல் என்று இந்திய கண்டத்தின் பழங்குடியினர்களான சூத்திரர்கள் பஞ்சமர்களின் ஆதரவு கிடைத்திருக்க வாய்ப்புகள் அதிகம். மேலும் பாரசீகர்களின் படையெடுப்பிற்கு முந்தைய யாத்திரீகர்களான மெகஸ்தனீஸ் மற்றும் யுவான் சுவாங் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகளில் இந்து என்கிற சொல் இடம்பெற்றிருக்கிறது என்று எந்த ஒரு இந்துத்துவாவாதியும் தக்க சான்றுகளுடன் நிரூபிக்கவே முடியாது. மேலும் ஹிந்து, ஹரி, ஹரிஹரன் என்கிற சொற்களில் உள்ள வடமொழி ஆதிக்கத்தை கவனிக்கும்போதே, அது தமிழருக்கு அந்நியமானது என்பதற்கான அடையாளங்கள் ஆகும். ஆகவே இன்று இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரான கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்கள் போன்றவர்களுக்கு  தாய் மதம் என்று ஒன்று இருக்குமானால் அது இயற்கையையும்  அய்யனார் விருமாண்டி முனியாண்டி போன்ற நாட்டார் தெய்வங்களே. ஆனால் இந்துமதவெறியர்கள் தொடர்ந்து எல்லா இடங்களிலும் இந்தியருக்கெல்லாம் தாய்மதம் இந்து என்று, தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் அதன்மூலம்.  இந்தியா, இந்து, இந்தி போன்ற தேசிய வாதச்சொல்லாடல் காரணமாகவே   ‘தாய்மதம்’ என்று இந்துமதத்தை அடையாளப்படுத்தி வருகின்றனர். இந்து என்ற மதப்பெயரைத் தவிர்த்து அந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கான பொதுத்தன்மை என்ற ஒன்று இல்லவே இல்லை.
இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து சமயங்களுக்கும் 200 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினர் இந்து என்ற ஒரே சொல்லில் அழைத்தனர்.  பண்டிட் ஜவகர்லால் நேருவும் இதைதான் சொல்லி இருக்கிறார். தற்போது பிச்சைக்காரனின் வாந்தியைப் போன்று ஒருங்கிணைக்கப்பட்டு, வெளியில் தெய்வீக பிரசாதாமாக காட்டப்டுகிறது. தாய்மதம் இந்து மதம் என்று சொல்வதன் மூலம் கிறித்துவ இஸ்லாமிய சமூகத்தினரை மன அளவில் தாக்க முடியும் என்றே கருதுகின்றனர். தலித்துகள் தாய்மதம் திரும்புகிறார்கள் என்று சொன்னால் எப்படி? புத்தமதத்திற்கு திரும்பினால் தான் அவ்வாறு சொல்ல முடியும். இந்துமதம் தாய்மதம் இல்லை. அது ஒரு மாயச்சொல்லாடல் பார்பன, பனியா இந்துவெறி கும்பல்கள் மறுபடியும் தங்களுக்கு சேவை செய்வதற்காக தலித்துக்களை இந்துக்களாக…., தலித்துக்களின் சம்மதமின்றியே அறிவித்துக் கொண்டார்கள். மாற்று மதத்தினரை தொடர்ந்து இழிவு படுத்துவிதமாக இந்துமதம் – தாய்மதம் என்று சொல்லப்படுவது கடும் கண்டனத்துக்குறியது.
இந்துமதத்தை ஏற்றுக் கொள்பவன் வருண பேதத்தையும் ஏற்றுக் கொள்கிறான் போற்றுகிறான் என்றே பொருள். இந்தியாவில் வருண பேதம் ஒழியவேண்டுமென்றால் அது இந்துமதம் சிதைந்தால் மட்டுமே சாத்தியம். இந்த பிரமாணர்கள் பிழைப்பதற்காக இந்து மதத்தை சொல்லி சாப்பிடுவதற்கு  அதாவது வயித்து பிழைப்பு ஒன்றை  மட்டுமே நோக்கமாக் கொண்டு தான் இந்த தாய்மதம் என்னும் புளுகு மூட்டை.  இவங்க சொல்ற இந்து  மதத்திற்கும் இந்தியாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.கிறிஸ்தவம் என்பது ஒரு மதம் இல்லை அது ஒரு மார்க்கம்” - ” இந்து மதம் என்பது  பிராமணர்களின் பார்ப்பனமதம் “
இந்த நாட்டின் தொன்மையான மக்களுக்கும் இந்த பிராமணர்களின் மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் வியர்வை சிந்தாமலேயே மதத்தின் பெயரால் வயிற்றையும், தங்கள் வளத்தையும் பெறுக்கிக் கொண்ட கூட்டத்தின் தந்திரம்.  மென்மேலும் தமிழர்களை ஏமாற்ற நினைத்தால் அது முட்டாள்தனம் தான். இந்து என்ற ஒரு கட்டமைப்பை இவர்கள் வடிவமைத்திருக்காவிட்டால்  பார்ப்பனர்கள் அனாதைகளாகி இருப்பார்கள். இந்த அச்சத்தினாலும்,  எப்படியாகிலும் அந்த கட்டமைப்பை வைத்து ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க வேண்டுமென்ற  ஆசையினாலும்,  எதிலுமே இல்லாதவைகளை புராணங்கள் என்ற பெயரில் ஆளாளுக்கு வடிவமைத்தார்கள் அதனடிப்படையில்தான்,  ஆட்சி முறை இருக்க வேண்டுமென்றனர். அப்படி இல்லாமல், பிரிதொரு ஆட்சியின் கீழ் வாழ்வதை சனாதன தருமப்படி மிகப்பெரும் பாவம் என்று கட்டுக்கதைகளை உருவாக்க வேண்டிய தேவை அவர்களுக்கு  ஏற்பட்டது. இந்த காரனத்தினாலேயேதான் யார் இந்து? என்று அரசியல் சாசனங்களை வரையறுக்கும் போதெல்லாம் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களுள் யாரெல்லாம்  இஸ்லாமியன் இல்லையோ, யாரெல்லாம்  கிறித்துவன் இல்லையோ, யாரெல்லாம் ஆங்கிலோ இந்தியன் மற்றும்  பெர்சியன் இல்லையோ, அவர்களெல்லாம் இந்து என்று கூறி விட்டார்கள்.  பார்ப்பனீயத்தனம் அல்லது திருவிளையாடல்கள்.  ஆடு எது ? என்று கேட்டால், அதை பற்றி சொல்லாமல், எதுவெல்லாம் மாடு இல்லையோ..,  எதுவெல்லாம்  குதிரை  அல்லது கழுதையில்லையோ, அதுதான் ஆடு என்று கூறுவதுவதுதான் பார்ப்பனீய தந்திரம்.
இங்கே இந்து என்ற‌ ஒரு இழிவை யாரும் தேடிச்சென்று ஏற்ப‌டுத்திக்கொண்ட‌தில்லை. மாறாக அனைவ‌ரின் த‌லை மீதும் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ திணிக்க‌ப்ப‌ட்ட‌து. தாய் மதம், பாரதம், ஹிந்து என்ற சொல்லாடல்கள் எல்லாம் பார்ப்பனியத்தை மற்ற மக்கள் மீது தினிப்பதற்க்காக சொல்லப்படும் வார்த்தை விளையாட்டுகள். பாரதத்தின் பெருமை என்பது ஐந்து பேருக்கு மனைவியாக இருந்த  பாஞ்சாலியின் நாகரீகம் என்றா சொல்லுகிறீர்கள்?  தன்னை இந்து என்பவர்கள், இந்த நாகரீகத்தை ஏற்றுக்கொள்வார்களா?  சூதாட்டமும், காம விளையாட்டுக்களும், நிகழ்ந்தாக கூறும் மகாபாரத்ததை பார்ப்பனர்களை தவிர, எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் ? இந்த அழங்கோல தகாத உறவை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நானும், ஏற்றுக் கொள்ள  மாட்டேன்.
                                                                                   நன்றி -  http://www.revivo.in

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?