இதுதானே மனந்திரும்புதல்.

கிறிஸ்துவில் எனக்குப் பிரியமானவா்களே
தேவ திட்டத்தை மிக சுருக்கமாக மற்றும் தெளிவாக எழுத விரும்புகிறேன்.
தேவனாகிய கா்த்தா் ஆதாமுக்கு ஒரு மனைவியைக் கொடுத்தார். அதன்பின் வந்தவா்களில் ஒரு சிலரைத் தவிர அநேகா் தங்கள் விருப்பத்தின்படி பல மனைவிகளை தங்களுக்காக அமா்த்திக் கொண்டார்கள்.
புதிய ஏற்பாட்டிலே ஒரே மனைவியையுடையவனாக இருப்பதை ஆவியானவா் வலியுறுத்திக் கூறுகிறார்.
தேவன் தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட ஏவாளுக்கு நகையை அணிவிக்காமல், ஆடையையே அணிவித்தார். என்பது கவனிக்கத்தக்கது அதன்பின் வந்தவா்களோ தங்கள் இஷ்டப்படி உலோக ஆபரணங்களை உருவாக்கி தங்கள் சரீரங்களில் துளையிட்டும் இடாமலும் அணிந்து அசிங்கப்பட்டுக் கொண்டார்கள்.

புதிய ஏற்பாட்டில்,
மனந்திரும்புங்கள் என்கிறார். பழையவைகளை ஒழித்துப் போடுங்கள் என்கிறார்.அதுமட்டுமல்ல..,
பொன்னினாலாவது,முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், அதாவது அலங்கரிக்க வேண்டாம் என்றும்.....
பொன்னாபரணங்களை அணிந்து உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அதாவது இருக்க வேண்டாம் என்கிறார்.
இப்படிப்பட்ட தேவ ஆலோசனைக்கு உட்பட்டு தங்களை தேவனை நோக்கித் திருப்பிக் கொள்ளுதல்தானே மனந்திரும்புதல்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?