பரிதாபமாக பார்க்க வேண்டியிருக்கிறது.
மதங்கள்
குறிப்பாக இந்திய மதங்கள் காலத்திற்கேற்றபடி தங்கள் மத நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டே
வருவதை விபரமறிந்தவா்கள் ஒத்துக் கொள்ளுகின்றனா். இவா்கள் முன்நாட்களில் தங்கள் மத
நம்பிக்கையாக அறிவித்தவைகளையே பின் நாட்களில் மறுத்து விடுகிறதும், மறைக்கிறதுமான பல்வேறு
சம்பவங்களை நாம் பல நேரங்களில் கண்டிருக்கிறோம். இந்த தைரியம் பெரும்பாலும் இந்து மதத்திற்கு
மட்டுமே இருப்பதைக் கண்டு, ஆச்சா்யப்படும் அதேநேரம், அந்த மதத்தின் பாமர இந்துக்களைத்தான்
நாம் பரிதாபமாக பார்க்க வேண்டியிருக்கிறது.
வேதங்களை
உடையதாக பெருமைப் பேசுகிற பிராமணிய மதம், தற்போது இந்து மதமாய் உலகிற்கு அடையாளப்படுத்திக்
கொள்ளுவதற்கு முன், பல்வேறு மத நம்பிக்கைகள் என்னும் பிற நிறத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டு இணைக்கப்பட்ட மதங்களுக்கு ஏற்ப தன் நிறத்தை பல்வேறு விதமாக
மாற்றிக்கொண்டதை சரித்திர வாயிலாகவே நாம் அனைவரும் அறிய முடியும்.
முதலில் திராவிடமும் பின்னா் சமண
பௌத்த வழிபாடுகளும், இதை ஒழிப்பதற்காகவே எழுந்த
பக்தி இயக்கங்களான சைவம் வைணவம் போன்றவையும் மட்டுமல்ல பிராமணீய மதத்தவா்கள் சற்றுக்கூட ஏற்கவியலாததாக கருதப்பட்ட நாட்டார் வழிபாட்டு முறைமைகள் போன்றவைகளையும் சுலபமாக தன்னுள் இணைத்துக் கொண்டு காலத்திற்கேற்ப தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மதம்தான் இந்து மதம். இதுதான் இன்று அந்தியாவில் காவித்தீவிரவாதத்தை
செயல்படுத்த முயலுகிறது. இவை இந்து மதத்தின் மாறுபட்ட காட்சிகள்.
பிரம்மன்
என்பவனுடைய முகத்திலிருந்து தோண்றியதாகத் தன்னைப்பற்றிப் பெருமையாக அறிவித்துக்கொண்ட
பிராமணா்கள் தீண்டப்படாதோராக எண்ணப்பட்ட மக்களுடைய குலக்குறி வழிபாட்டினால் உருவானதாகச் சொல்லப்படும்
விலங்குகளை வழிபடும் நிலைக்குத் தள்ளப்பட்டது அறியாமையா? சூழ்ச்சியா? என்றால், இது
இரண்டும்
கலந்த கலவை மட்டுமல்ல, “வேறு வழியில்லை” என்பதால்தான்…., இதைத்தான் இந்து மதம் என்கிறார்கள்.
குலமரபு
சின்னம் அல்லது குலக்குறி வழிபாடுகளில்
யானையைக் குலக்குறியாகக் கொண்டவா்களுடைய வழிபாடு
பின்னா் பிள்ளையார்
வழிபாடாக மாறியதையும்,
வேப்ப
மரத்தை குலக்குறியாகக் கொண்டவா்கள்
அம்மனாக வழிபாடாக அதை மாற்றிக்
கொண்டதையும் அறிவோம்.
மத
வழிபாடுகளுக்கு ஆதராமாகச் சொல்லப்படும் கதைகள் முன்னா் வாய்வழியாகவும் பின் எழுத்து வடிவங்களிலும்
தோண்றியது. அந்த கதைகள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கும்போதுதான், விமா்சனத்திற்கு
உள்ளாகிறது. இந்த வகையில்,
பிள்ளையார்
தோன்றிய விதம் கதைகளாக விதம்விதமாய்
விரிகிறது. இதுவரையிலான ஆய்வில் 32 வகையான பிள்ளையார் கதைகள்
இருப்பதாக பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் தனது ஆய்வில் கூறுகிறார். ஆகவே,
ஒவ்வொரு
பிள்ளையாருக்கும் ஒவ்வொரு வகையான கதைகள்
கதை
1:
பார்வதி
குளிக்க செல்லும் முன் தன் உடல்
அழுக்கையெல்லாம் ஒன்று திரட்டி பிள்ளையாரை
செய்து காவலுக்கு நிறுத்தி வைத்துவிட்டு குளிக்க சென்றதாகவும் அப்போது..,
சிவன் உள்ளே வர பிள்ளையார்
அவரை மறிக்க சினம்
கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை
வெட்டி வீழ்த்துகிறார்.
குளித்துவிட்டுவந்த பார்வதி நடந்தேறிய சம்பவத்தை
பார்த்து சிவனிடம் கோவித்துக் கொள்ள வேறு வழியின்றி அருகில்
இருந்த யானைத்தலையை வெட்டி வெட்டுபட்ட பிள்ளையாரின்
உடலோடு ஒட்டியதாக ஒரு கதை.
கதை
2:
அசுரேந்திரன்
எனும் அசுரன் தேவர்களை அடக்க
வலிமையான ஒருவனை தேடியதாகவும் அது
வசிஸ்டர் வழிவந்த மரகத முனிவரின்
மூலம் கிடைக்கும் குழந்தைக்குத்தான் உண்டு என்று சொல்லப்பட்டதால்
விபுதை எனும் அசுர குல
பெண்ணை அனுப்பிவைக்கிறார்.
அவளும் அவருக்கு அருகில்
தவமிருக்க, தவம் களைந்த முனிவர்
எதிரே புணர்ந்து கொண்டிருந்த யானைகளை பார்த்து கிறக்கம்
கொண்டு..,
அருகில் இருந்த விபுதையை
கேட்காமலேயே மந்திரத்தின் மூலம் யானையாய் மாற்றி
புனரந்ததாகவும் அப்படி அவர்களுக்கு பிறந்த
குழந்தைதான் கஜமுகசூரன் என்றும்,
அவன் தேவர்களை
துன்புரித்தியதாவும் இதை கேள்விப்பட்ட பிள்ளையார்
தன கொம்பின் மூலம் அவனை கொள்ள
துரத்த அவன் எலியாய் மாறி
பிள்ளையாரின் காலுக்கடியில் விழுந்ததாகவும் பின் அதுவே பிள்ளையாரின்
வாகனமாக மாறிப்போனதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இன்னும் சில கதைகள் உண்டு
சங்க
இலக்கியங்களில் பிள்ளையார் பற்றிய குறிப்பு எதுவும்
இல்லை என்பதால் இது சங்க காலத்திற்கு
பின்புதான் உருவாகி இருக்கவேண்டும் என்பதுடன், கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான்
தமிழகத்திற்கு அறிமுகமாகி பிள்ளையாரை முதல் கடவுளென்றும் பிள்ளையார்
சுழி போட்டே எந்த காரியத்தையும்
துவங்க வேண்டுமென்றும் புதிய இடங்களுக்கு இடம்
பெயரும்போது, அங்கு கணபதி ஹோமம் நிகழ்த்த வேண்டுமென்றும்
மெல்ல மெல்ல பிராச்சாரம் செய்து ஓரளவு வெற்றியும் கண்டுள்ளனா்.
தமிழ்
நாட்டின் பழைய பிள்ளையார் என்றால்.., காரைக்குடிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார்பட்டி
குடைவரை கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் சிலைதானாம். காரணம் அந்த பிள்ளையார் பிராமணா்களைப்
போல பூணூல் அணிந்திருக்கவில்லையாம்...!
பிள்ளையார்
வழிபாடு சுதந்திர போராட்ட காலத்தின் துவக்கத்தில்
வலுகட்டாயமாக அரசியலுக்கும் இழுக்கப்பட்டது. ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக
அனைத்து தரப்பு இந்துக்களையும் திரட்டும்
ஒரு யுக்தியாக விநாயகர் வழிபாட்டை பயன்படுத்திக்கொண்டார் திலகர்.
திலகர்,
லால் பகதூா் போன்றவா்கள் இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராகவும் கிருஸ்த்துவத்திற்கு எதிராகவும் இந்துக்கள் மதம் மாறமால் இருக்கவும்
பிள்ளையார் வழிபாட்டை முன்னிலைபடுத்தியதோடு நில்லாமல் அதை ஒருங்கிணைந்த வழிபாட்டு
முறையாகவும் மாற்றினார்கள்.
இந்து
மக்களை ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் திரட்ட இயலாமல் போனபோது மேல்நிலை கீழ்நிலை என
அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றுபடுத்த விநாயகர் வழிபாட்டை ஒருங்கிணைந்த வழிபாட்டு
முறையாக மாற்றினர்.
இதிகாச
கதைகளில் பிள்ளையார் அசுரர்களிடமிருந்து தேவர்களை பாதுகாத்து போன்று ஆங்கிலேயர்களிடமிருந்தும்
நம்மை பாதுகாப்பார் என சுததந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த
இந்து மக்களை நம்பச் செய்ய
முயன்றனர்.
குலமரபு
சின்னமாக துவங்கிய யானை வழிபாடு பின்
காலவளர்ச்சிக்கேற்ப பிள்ளையார் வழிபாடாய் மாறி, பிராமணிய ஆதிக்கத்துக்கு
உட்பட்டு, பின்பு பூணூல் அணிந்த
விநாயகராய் உருவெடுத்து, தற்கால சூழலுக்கேற்ப LapTop இயக்கும் பிள்ளையார் சிலைகள் கூட வந்துவிட்டன. ஆக..,
இறை
நம்பிக்கை என்பதும், இறை வழிபாடு என்பதும், காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில்லை
என்பதைப் புரிந்து நாம் நடப்பது மட்டும் அல்ல அறியாமைமையில் உழலும் ஜனங்களையும் மீட்போம்.
Comments
Post a Comment