நாடார்களே உணா்வில்லையா ?
அடிமைத்தனத்தை உடைத்து அருமையாய் வளா்ந்து நிற்கும் நாடார் சமுதாயத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகவே மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவரை நாடார் என்ற காரணத்திற்காகவே தரையிலே உட்கார வைத்ததின் மூலம் அவரை தெரிந்தெடுத்த அனைத்து சாதி, மத மக்களையும் கேவலப்படுத்தி இருக்கின்றனரே..! நாடு போற்றும் நாடார்களே உணா்வில்லையா?
தமிழ்செல்வி நாடார் என்ற முகநூல் விலாசத்தில் உள்ள ஒருவா் ”நாடார்களே கிறிஸ்தவ மதத்திற்கு மாறாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்தும் கிறிஸ்தவர்களின் புனித நூலாகிய பைபிளை மிககேவலமாகவும் திரித்து கருத்து வெளியிட்டிருந்தார்கள். அவர்களுக்கு பதில் அளித்து நான் வெளியிட்ட கருத்துக்களை அதிலிருந்து எடுத்து விட்டபடியினால், என்னுடைய பக்கத்தில் இதை வெளியிடுகிறேன்.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரிகளும், நாயர்களும் நாடார் உட்பட மற்ற சூத்திர சாதி பெண்களை மேலாடை அணியக்கூடாது என்று சட்டம் போட்டு அப்படி மேலாடை அணிந்தவர்களை பொது இடங்களில் ஒரு நீளமான குச்சியின் முனையில் கத்தியை கட்டி நாடார் பெண்களின் மேலாடைகளை கிழித்ததும், முலைவரி விதித்ததும், அந்த வரி கட்டாத நாடார் பெண்களை மார்பகங்களை வெட்டிய வரலாறுகளை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார் பெண்கள் தான் முதன்முதலாக மேலாடை அணிந்தார்கள். என்பது வரலாறு. மானத்தோடு வாழ விரும்பிய நாடார்கள் தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நாடார்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதினால் அவர்கள் நுழையக்கூடாது என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளியவர்கள் பிராமணர்கள்.
நாடார்கள் தீண்டத்தகாதவர்கள் தான் என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தீண்டதகாதவர்கள்தான் என்று தீர்ப்பு பெற்று கோவிலுக்குள் நுழைய தடை வாங்கியவர்கள்தான் இந்த பிரமாணர்கள்.
இதை வாசிக்கிற இக்கால நாடார் இளைஞர்களுக்கு வரலாறு தெரியாது என்பதினால் இதை தெரிவிக்கிறேன். ஒருவேளை இப்பொழுது அப்படியில்லை நாங்கள் எல்லாம் முன்னேறிவிட்டோம் என்று நீங்கள் சொல்லுவீர்கள் என்றால் இன்னும் பிரமணர்கள் உங்களை இழிவாகத்தான் நடத்துகிறார்கள் என்பதற்கு கீழே ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறேன்.
எந்த பதவியும் இல்லாதவராயிருந்தும் பிராமணராக இருப்பதினால், சுப்பிரமணிசாமி எங்கே உட்கார்ந்து இருக்கிறார்? என்றும்,
மத்திய அமைச்சராக இருந்தும், பொன் ராதாகிருஷ்ணன் நாடார் எங்கே உட்கார்ந்து இருக்கிறார்? என்றும் பார்த்தீா்களானால், இதைவிட நாடர்களை வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது என்பதை நிச்சயம் கண்டுகொள்வீா்கள்.
ஆனால், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்கள் ஆயராகவும், பேராயராகவும், பிரதம பேராயராகவும் இருக்கிறார்கள். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிராமண கிறிஸ்தவர்கள் கூட நாடார் ஆயரிடம் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் வாங்கி செல்லுகிறார்கள்.
நாடார்கள் எங்கே கவுரவமாக இருக்கிறார்கள்? என்று சிந்தித்து பாருங்கள். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்கள் பிரமாண அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்து விட்டார்கள். ஆனால்,
இந்து நாடார்கள் பிரமணா்களிடம் அடிமைகளாகவே இருக்க விரும்புகிறார்கள் போலிருக்கிறது.
O.K இருந்து விட்டு போங்கள், ஆனால் அதற்காக கிறிஸ்துவையும் கிறிஸ்தவ புனித நூலாகிய பைபிலை கேவலப்படுத்த துணியாதீர்கள்.
- David Dhanraj அவா்களின் பதிவிலிருந்து
Comments
Post a Comment