இனி அப்படி இருக்கலாகாது...,

கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்து நமக்குக் கற்றுத்தந்ததும் இந்திய சட்ட திட்டங்களுக்கு சற்றேனும் முரன்படாததுமான போதனைகளை நமது இறைவேதத்தின் கட்டளைக்கு இணங்க மக்களுக்கு போதித்து வருகிறோம். நமக்கு கிடைக்கும் தரிசனத்தின் அடிப்படையில் பல்வேறு பகுதிகள் மாவட்டங்கள் மாநிலங்கள் என்று பயணித்து கிறிஸ்துவின் அன்பையும், நற்போதனைகளையும் சமூக சேவைகளையும் செய்து வருகிறோம். 

நம்மால் அறிவிக்கப்படும் சுவிஷேசத்தைக் கேட்கிற எவ்விடத்திலுமுள்ள ஜனங்கள் தங்கள் பாவ வழிகளை விட்டு என்பதுடன், சமூக சீர்கேடுகளையும், மனித சரீரத்தில் பாதிப்புகளை உண்டுபண்ணுகிற தீமையான பழக்க வழக்கங்களை கூட ஓழித்துவிட்டு மனமாற்றமடைந்து திருந்துகின்றனர். 

இப்படி பல குடும்பங்கள் இயேசுகிறிஸ்துவினால் வருகிற சமாதானத்தை அடைந்து சுகவாழ்வு வாழ்ந்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்தோர் உயருகின்றனர். அவர்களுடைய பிள்ளைகளும் கல்வி அறிவு போன்ற மேன்மைகளை அடைந்து சந்ததிகள் சந்தோஷமாக வாழுகின்றனர். எனவேதான் நாம் நமது இறைப்பணியை முழுமனதோடும், உற்சாகத்தோடும் செய்து வருகிறோம். என்றாலும்..., 

நமதுது இறைப்பணியை கெடுத்துப்போட சில அமைப்புகள் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறது. நான் முன்னரே குறிப்பிட்டதுபோல பல்வேறு மாநிலங்களுக்கு கடந்து செல்லும் கிறிஸ்தவ ஊழியர்கள் மதப்பிரச்சாரம் மட்டும் செய்யாமல் பல்வேறு கல்வி நிறுவனங்களைத் துவக்கி மத பேதமின்றி சகலருக்கும் கல்வி அறிவையும் ஏற்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட ஊழியங்களில் ஒன்றுதான்  Gospel Echoing Missionary Society  (GEMS) எனப்படும் ஊழியமாகும்.

GEMS என்னும் ஊழிய ஸ்தாபனத்தில் மாற்றுத்திறனாளியாய் இருந்தபோதும் இறைவனுடைய பணியை தியாகமுடன் செய்கின்ற தமிழகத்தைச் சேர்ந்த 1.சகோ. ஸ்டீபன் ராஜ்குமார், மற்றும் 2.ஹரிலால் ராவத் 3.அனில் ஜெய்ஸ்வால் என்பவர்கள் மச்காவா என்றவிடத்தில் உள்ள கிறிஸ்தவ சகோதரர்களை சந்திக்க சென்றபோது அங்கிருந்த சிலர் இவர்களை கேவலமான சொற்களால் திட்டியதுடன், கொலை செய்யும் எண்ணத்துடன், தாக்கியும் இருக்கிறார்கள். இதையறிந்த காவல்துறையினர் அங்கு வந்து அவர்களிடமிருந்து இவர்களை மீட்டதால் உயிர் பிழைத்ததாக எண்ணிய இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக கூறுவது எமக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது ஏனெனில்,



மச்காவா காவல் நிலையத்திற்கு கொண்டுபோகப்பட்ட இறைப் பணியாளர்களை அங்கிருந்த காவலர்கள் அவரை மாற்றுத்திறனாளி என்று கண்டபோதும், சற்றும் இரக்கமே இல்லாமல் மேலும் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கே வந்த உள்ளுர் மத அமைப்பினுடைய நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்திலேயே காவலர்கள் கண் எதிரிலேயே தாக்கியுள்ளார். இதனால், இவர்கள் சரீர ரீதியாகவும், அவர்களது குடும்பத்தினர் மனரீதியாகவும் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். என்பதை கேள்விப்படும்போது,  நாம் சொல்லொன்னாத் துயா் அடைகிறோம்.

நமது தமிழகத்திலிருந்து இந்திய தேசத்தின் மற்ற மாநிலங்களுக்குச் சென்று சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் நம்முடைய கிறிஸ்துவின் ஊழிய நண்பர்கள் தொடர்ந்து ஆங்காங்கே தாக்கப்படுவதை நாம் அவ்வப்போது கேள்விப்படுகிறோம். அப்படியே விட்டு விடுகிறோம். இனி அப்படி இருக்கலாகாது என்பதை இப்போதாவது உணருங்கள்.

ஒருவேளை இப்படிப்பட்ட தாக்குதல் தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள இலட்சக்கணக்கான கிறிஸ்தவ மக்களும், ஊழியர்களும், இந்தியா முழுவதிலுமிருந்து ஆங்காங்கே கடந்து சென்று இறைப்பணியாற்றும் கிறிஸ்தவ சுவிஷேச பணியாளர்களும், இந்தியாவின் குடிமக்களாகிய நமக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மத உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், அச்சமின்றி வாழ்வதற்குமான சூழ்நிலையை ஏற்படுத்தி தரும்படி மத்திய மாநில அரசு மற்றும் நிர்வாகத்திலுள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் ஜனநாயக முறையில் போராட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை இங்கே குறிப்பிட வேண்டிய நிலையில் காணப்படுகிறோம். 

இப்போதும் மச்காவாவில் தாக்கப்பட்ட இறைப்பணியாளர்களுக்காகவும் அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்காவும், அவா்கள் மேல் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் செயலிழந்து போகவும் ஜெபம் செய்யுங்கள்.

                                                     கா்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?