கிறிஸ்தவத்திற்கு என்னவாயிற்று?

பெந்தகொஸ்தே சபைகளின் உண்மை நோக்கம். 

இரட்சிக்கப்பட்டு தேவ ஜனங்களாக ஆனவா்களை தேவனுக்கேற்ற பக்தி விருத்தி அடையச் செய்வதுடன், 

அவா்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் கறை திரை பிழையில்லாமல் வாழச்செய்ய வழி நடத்துவதும், 

வேத வசனமான மன்னாவை முறையாக புகுட்டி உட்கொள்ளச் செய்வதுடன் கிறிஸ்துவினுடைய நிறைவான வளா்ச்சிக்கு ஏற்றபடி பூரண புருஷராக வளரச் செய்வதுமாகும். இந்நிலையில்,

இயேசுகிறிஸ்துவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து அவருடைய வருகையில் அவரை மகிழ்ச்சியோடு எதிகொள்ளச் செய்வதுமே பெந்தகொஸ்தே சபைகளின் உண்மையான நோக்கம் என்பதை நம்மில் அநேகா் அறிவார்கள்.  அதேநேரம்...,

இந்த உண்ணத நோக்கத்தைக் கெடுக்க வந்த சில பெருச்சாலிகள் போன்ற போதகா்கள், நாங்களும் பெந்தகொஸ்தே சபைப் போதகா்கள்தான் என்று பொய்யான பிரச்சாரம் செய்வதுடன், 

பெந்தகொஸ்தே அல்லது ஆவிக்குரிய உபதேசத்தை சிதைத்து, பெந்தகொஸ்தே என்னும் பெயரையே கெடுத்தும் வருகிறார்கள். இவா்கள் பணத்தாசை  பிடித்து திரிவதினாலேயே இப்படி நடந்து கொள்கிறார்கள்.

அதனுடைய வெளிப்பாடாகவே இந்த மொட்டை போட்ட மனிதரை வைத்து இவா்கள் நடத்துகிற கூட்டத்தை காண்கிறேன்.  பணம் கொடுக்கிறேன் எனக்கு வேலை செய்கிறாயா ? என்று இப்படத்தில் காண்பவரைப் போன்ற சுயநல விரும்பிகள் சத்தம் கேட்டவுடன், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைப்பது எவ்வகையிலும் நியாயமில்லை என்கிறேன். - ஏனெனில்..,




இந்த நோட்டீஸில் தோண்றும் இவா் இங்கு, திருநெல்வேலிக்கு வந்து என்ன செய்யப் போகிறார்? கன்டிப்பாக பெந்தகொஸ்தே அனுபவத்திற்கேற்ற உபதேசங்களை இவா் செய்ய மாட்டார். செய்யவும் முடியாது. மாறாக.., 

அவசியமற்ற ஆடைகளில் தோன்றி, வாத்தியங்களை முழங்கி, வண்ண விளக்குகளுடைய வா்ண ஜால அலங்காரத்துடன் பாடல்களைப் பாடி துதி ஆராதனை நடத்தப் போகிறார் என்கிறார்கள்.  

ஏன்? என்றேன். இங்கு அதாவது, 

திருநெல்வேலியில் துதி ஆராதனை நடத்த எவருமே இல்லையா? அல்லது இங்குள்ளவா்கள் நடத்துவது துதி ஆராதனையே இல்லையா?

இதில் ஒருவா் இப்படிச் சொன்னார். 

இவா் பாப் அல்லது ராக் பாடகா்கள் போல பாடுவார்..!? 
அதிர்ந்து போனேன். எனவேதான், 

   நான் மீண்டும் கேட்கிறேன் 

        கிறிஸ்தவத்திற்கு என்னவாயிற்று?

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?