தேவஜனங்கள் வேதவசனத்தைக் கேட்கனும், அதன்படி நடக்கனும் அதையே முதன்மைப்படுத்துவேன். - Pastor Immanuel Abraham.

Robin Shalal என்ற நண்பா் எனக்காக ஒரு கடிதம் எழுதி பதிவிட்ட பதிவின் மூலம் அவா் தனது அறியாமையை இங்கே வெளிப்படுத்தி இருக்கிறாரேயன்றி வேறொன்றும் அதில் தெரியவில்லை. என்றாலும், எனக்கு கடிதம் எழுதிய அவருக்கு பொறுமையாக பதிலளிக்க வேண்டியது எனது கடமை. ஆதலால், இதை பதிவு செய்கிறேன்.
 நண்பா் கேட்ட கேள்விகளும், அதற்கான எமது பதில்களும்,
 // 1.உங்களுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட ஊழியம் என்ன? ஐயா.//
 கா்த்தரால் மீட்டுக் கொள்ளப்பட்டவா்கள் அடங்கிய சபைக்கு என்னை கா்த்தர் ஊழியக்காரனாக ஏற்படுத்தி இருப்பதினாலே
 கா்த்தருடைய சபையை அசுத்தமானவா்களிடமிருந்தும் கள்ளா்களிடமிருந்தும் தப்புவிக்கும் ஊழியத்தை நேரிலும் இணையத்திலும் தேவபெலத்தோடு செய்து வருகிறேன்.
 // 2.கடந்த 20 ஆண்டு காலமாக ஊழியம் செய்து உள்ளீர். ஆத்துமா ஆதாயம் எவ்வளவு ஐயா.//
 தனி ஒரு நபா் யாருடைய துணையுமின்றி கா்த்தருக்காக ஆத்தும ஆதாயம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
 உதாரணமாக மோகன் சி லாசரஸ், ஆல்வின் தாமஸ் போன்ற மேடை அமைத்துக் கொடுப்பவா்கள் மட்டுமல்ல போஸ்டா் ஓட்டுகிறவா்கள் கூட இவா்களைக் காட்டிலும் தகுதி படைத்தவா்கள் ஆனாலும் அவா்கள் இவா்களைப் போன்ற தந்திரசாலிகள் அல்ல என்பதை விவரமுள்ளவா்கள் அறிந்திருக்கிறார்கள்.
நீங்கள் சத்தியம் அறிந்தவா்களுடனும் முறையான ஊழியா்களுடனும், தொடா்பில் இல்லாததால்தான் இப்படிப்பட்ட அறியாமையில் ஊறிப் போய் இருக்கிறீா்கள். தயவுசெய்து மக்களை வஞ்சிக்காத சபையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
 // 3. World revival centre என்று உங்கள் ஊதியத்திற்கு பெயர் வைத்து உள்ளீர்கள். என்றைக்காவது உலகத்தின் எழுப்புதல்க்காக Prayer points போட்டது உண்டா ? ஐயா //
 World revival Center அல்ல World Revival Mission.
ஜெபம் முக்கியமா? செயல் முக்கியமா? அதாவது இயேசுகிறிஸ்து தமது சீடா்களிடம் உலகமெங்கும் சென்று சகல ஜாதியாருக்கும் Prayer Points போடு என்று சொன்னாரா? இல்லையே..!?
 // 4. உங்களுக்கும் இயேசு விடுவிக்கிறார் ஸ்தாபகர் மோகன். C.லாசரஸ் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எதாவது விரோதம் இருக்குகிறதா? இல்லை, 36 ஆண்டுகளில் ஊதியத்தின் வளர்ச்சி யை பார்த்து பொறாமையா? ஐயா//
 எனக்கும் மோகன் சி லாசரசுக்கும் இடையில் தனிப்பட்ட பகை இருந்தால், அதைத்தானே எழுதிக்கொண்டிருப்பேன்.
பரிசுத்த வேதாகமத்தின் வழியே கா்த்தா் கற்பித்த உபதேச ரீதியிலான அவா்களது மீறுதலை நான் கன்டித்து வருகிறதையும், அவரது ஆதரவாளா்களோ அவற்றிற்கு உரிய பதிலைத் தராமல்,
தனிப்பட்ட முறைகளில் தாறுமாறாக எழுதுவதையும் இங்குள்ள அனைவரும் அறிவார்கள்.
36 வருடமா? O.K இவா்களின் துவக்கத்தில் இயேசு விடுவிக்கிறார், என்ற அறிவிப்புடன் புற்ப்பட்ட மோசிலா சில வருடங்களிலேயே முடங்கி இயேசுவை விற்கத் துவங்கினார். கடைசியில், இவா்களது பேராசைக்காக இயேசு வீடுவிக்கிறவராக மாற்றப்பட்டாரே..? அதைப்பற்றித் தாங்கள் அறியவில்லை போலிருக்கிறது.
 // 5. சகல ஐனத்திற்க்கும் சுவிஷேம் அறிவியுங்கள் என்று செல்லப் பட்டிருக்கிறது.. சினிமா மக்கள், பெயர் கிறிஸ்தவர்கள் போன்றவற்களுக்கு சுவிஷேம் அறிவிப்பது தவறா? ஐயா....//
 மதுக்கடை நடத்துகிறவனுடைய யாவாரம் சிறந்து விளங்கவும், மிகுந்த இலாபத்துடன் நன்றாக நடக்கவும் ஊக்கமாக ஜெபம் செய்வதை எப்படி வேதம் அனுமதிக்காதோ அதேபோன்று,
விபச்சாரத்தொழில் செய்பவா்களையும் பரிசுத்த வேதாககம் கன்டிப்பதுடன், இப்படிப்பட்டவா்களுடைய தொழிலில் எவ்வித தடை வராதபடி தொடர்ந்து நடக்க ஜெபஜப்பதையும் ஏற்புடையது அல்ல என்று எண்ணுகிறேன்.எனவேதான்,
சினிமாக்காரா்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதை எதிா்க்காத நான்,
சினிமாத் தொழில் சிறந்து விளங்கவும், சினிமாக்காரா்கள் சினிமா எடுத்து ஓங்கி வளரவும், சினிமாவில் வெற்றிபெறவும், ஊக்கமாக உபவாசித்து ஜெபிப்பது மட்டும் அல்லாமல்..,
சினிமா பார்க்கக் கூடாது என்று முன்னா் பிரசங்கித்தற்காக கிறிஸ்தவா்கள் சார்பாக சினிமாக்காரா்களிடத்தில் மன்னிப்புக் கேட்டதையும் தவறு என்கிறேன்.
நீங்கள் அது நியாயம் எனச் சொல்லுகிறீா்களா? சரி,கடைசியாக சில
வேண்டுகோள் வைத்துள்ளீா்கள்.
//1. தயவுகூர்ந்து எந்த ஊழியர்கள் பற்றியும் தவறான தகவல் சொல்ல வேண்டாம் ஐயா //
 தேவனுக்காக ஊழியம் செய்பவா்களிடம் தவறு கண்டுபிடிக்க முடியாது என்பதால் எப்போதுமே அவா்களை எதுவும் சொல்ல மாட்டேன். அதேநேரம்,
 பிசாசின் விருப்பப்படி வயிற்றுக்காகவும் பெயர் பிரஸ்தாபத்திற்காகவும் ஊழியம் செய்வதாக நாடகமாடுபவா்களை ஒருபோதும் விட்டுவிட முடியாது. ஏனெனில்,
 என்னை உண்மையுள்ளவனென்று நம்புகிற தேவனிடத்திலிருந்து சபையை வழி நடத்துகின்ற பொறுப்பை கிருபையாக பெற்றிருக்கிறேன்.
// 2.எந்த ஊழியத்தையோ, எந்த ஊழியர்கள்களையோ நியாயம் தீர்க்க அதிகாரம் மனிதர்களுக்கு கொடுக்கப்படவில்லையே..?//
நான் யாரையும் எப்போதும், நியாயந்தீா்ப்பதில்லை. மாறாக, தங்களை கிறிஸ்தவா் எனச் சொல்லித்திரியும், சிலருடைய பாவத்தைக் கன்டித்து உணா்த்தும் தகுதியை பெற்றிருக்கிறேன்.
// 3.தேசத்தின் எழுப்புதல்க்காக ஐெபிக்க ஐெப வீரர்கள் உருவாக்கலாமே.. //
வேத வசனத்தின்படி தேவசித்தத்திற்குக் கீழ்படிந்து ஜெபிக்கிற அருமையான விசுவாசிகளைக் கொண்ட சபையின் போதகராக தேவ தயவுடன் இருக்கிறேன்.
இப்படியான ஐக்கியத்தில் தாங்கள் இல்லாததால்தான், வேதத்தைப் பார்க்கக்கூடாதபடி கண்கள் மூடப்பட்டும், வேத வசனத்தைக் கேட்கக்கூடாதபடி உங்கள் செவிகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது.
இரட்சிப்பின் அனுபவமே இல்லாதவா்களை ஜெபவீரா்களாக உருவாக்கும் திறமை மோகன் போன்ற ஆட்களுக்குத்தான் உண்டு.
//4. தினமும் ஐெபிக்க Prayer points போடாலாமே //
 ஏற்கனவே பதில் எழுதியிருக்கிறேன். மேலேப் படியுங்கள்.
// 5. ஐெபிக்க அனைவரையும் ஊக்க படுத்துங்கள்...மிகவும் முக்கியமானது ஐெபம் ஐெபம் ஐெபமே..//
வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. என்ற நீதி 28 :9 வசனத்தை நான் விசுவாசிக்கிறபடியினால்,
தேவ ஜனங்களை வேதவசனத்தைக் கேட்கப்பண்ணுவதிலும் அதன்படி நடக்கப்பண்ணுவதையே முதன்மைப்படுத்துவேன்.
கடைசியாக ராபின் அவா்களே உங்கள் அன்புக்கு நன்றி.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?