நாடார்களே உணா்வில்லையா ?
அடிமைத்தனத்தை உடைத்து அருமையாய் வளா்ந்து நிற்கும் நாடார் சமுதாயத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகவே மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவரை நாடார் என்ற காரணத்திற்காகவே தரையிலே உட்கார வைத்ததின் மூலம் அவரை தெரிந்தெடுத்த அனைத்து சாதி, மத மக்களையும் கேவலப்படுத்தி இருக்கின்றனரே..! நாடு போற்றும் நாடார்களே உணா்வில்லையா? தமிழ்செல்வி நாடார் என்ற முகநூல் விலாசத்தில் உள்ள ஒருவா் ”நாடார்களே கிறிஸ்தவ மதத்திற்கு மாறாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்தும் கிறிஸ்தவர்களின் புனித நூலாகிய பைபிளை மிககேவலமாகவும் திரித்து கருத்து வெளியிட்டிருந்தார்கள். அவர்களுக்கு பதில் அளித்து நான் வெளியிட்ட கருத்துக்களை அதிலிருந்து எடுத்து விட்டபடியினால், என்னுடைய பக்கத்தில் இதை வெளியிடுகிறேன். திருவாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரிகளும், நாயர்களும் நாடார் உட்பட மற்ற சூத்திர சாதி பெண்களை மேலாடை அணியக்கூடாது என்று சட்டம் போட்டு அப்படி மேலாடை அணிந்தவர்களை பொது இடங்களில் ஒரு நீளமான குச்சியின் முனையில் கத்தியை கட்டி நாடார் பெண்களின் மேலாடைகளை கிழித்ததும், முலைவரி விதித்ததும், அந்த வரி கட்டாத நாடார் பெண்களை மார்பகங்களை வெ...