முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன? - 3
மூன்றாம் பாகம் பாஸ்டர்... மனம்திரும்பினவர்கள் மரித்துப் போனவர்கள் அதாவது பாவத்திற்கு மரித்தவர்கள் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் ஞானஸ்நானம் எடுத்ததாகச் சொல்லுகிற நிறைய கிறிஸ்தவர்கள் மனந்திரும்பினதற்கான எவ்விதமான அடையாளமும் இன்றி வாழ்கிறார்களே..? என்று ஒரு கேள்வி எழலாம். "ஞானஸ்நானம் எடுத்தவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லை" என்பதை இங்கே நீங்கள் அறிந்து கொள்வது நல்லது. கிறிஸ்தவன் என்று அழைக்கப்படுகிற எந்த ஒரு நபரும் கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்ளாவிட்டால், அவர்கள் கிறிஸ்தவத்திற்கு கறைகளாகவும் குறைகளாகவும், காணப்படுகிறார்கள். உதாரணமாக, கத்தோலிக்கர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக் கொள்வார்கள். இவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதால் கிறிஸ்தவர்களா? இல்லையே இவர்கள் பெற்றோர் காலத்தில் சூழ்நிலையால் கத்தோலிக்கர்களாக மாறினார்களாம். யாரோ ஒருவர் இவர்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்ல இவர்களும் அப்படிதான் என்று நம்பிவிட்டார்கள். ஒரு நண்பரிடம் பேசியபோது அவர் இவ்வாறு சொன்னார்: எங்கள் பெற்றோருடைய காலத்தில் நாங்கள் சுடலைமாடன் என்ற துஷ்டஆவியை வணங்கி வந்தோம். இப்ப...