கிறிஸ்தவா்களுக்கு வேதனை தரும்..., கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்.
உண்மை கிறிஸ்தவா்களுக்கு வேதனை தரும் நிகழ்வு இன்றைய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள். கிறிஸ்தவ மார்க்கம் தூய்மையும் சத்தியமுமானது. ஆதி அப்போஸ்தலா்களுடைய காலங்களுக்குப்பின் பக்க வழியாய் நுழைந்த தந்திரக்காரா்களால் கணக்கில்லாத கற்பனைக் கதைகள் கிறிஸ்த வ மாா்க்கத்தின் வழக்கமான பழக்கமாக அடையாளப்படுத்தப்பட்டது. அதில் ஒன்றுதான் பறக்கும் மான்கள்..! இது வேத வசனத்திற்கும் தேவனுக்கும் விரோதமானது. பூட்டிய சாரட் வண்டியில் பற்பல பாிசுகளுடன் பறந்து வரும் செவ்வாடை அணிந்த கிறிஸ்மஸ் தாத்தா. விநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பதுபோல கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் பறக்கின்ற மான்களை வாகனமாக கொடுத்துள்ளனா். கிறிஸ்மஸ் என்றவுடன்.., கிறிஸ்துவையும் அவரால் வரும் பாவ மன்னிப்பைக் காட்டிலும், பறக்கும் மான்கள், பரிசுகள் நிரப்பப்பட்ட சாரட் வண்டி, கிறிஸ்துமஸ் தாத்தா, பிா் மரம் போன்ற புணையப்பட்டக் கதைகளே நினைவுக்கு வரும் வகையில் நிரப்பப்பட்டுள்ளது. துருவப் பிரதேசங்களில் வாழ்ந்த பழங்குடிகளுடைய சிலை வழிபாடுகளுடன் இணைந்த மிருகங்களை வழிபடுகிற பழக்க வழக்கங்கள் கிறிஸ்தவா்களுடைய நற்செய்தி அறிவிப்ப...