உங்கள் வாழ்வின் சோர்வுகள் நீங்கும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வாழ்த்துகிறேன்.

இன்றைய மனிதர்களின் வாழ்க்கையை நாம் கவனித்தோமானால் பெரும்பாலானவா்கள் சோர்ந்துபோன நிலையைிலேயே வாழுகிறதை நாம் கவனிக்க முடியும். அவா்களுடன் ஒருமித்துப் போவதால் இரட்சிக்கப்பட்டதாக நம்புகிற தேவ ஜனங்களும்கூட உலக கவலைகளில் சிக்கி சோ்ர்ந்துபோன நிலையிலேயே, வாழ்ந்து வருகிறார்கள்.

இதையே முதலீடாகக்கொண்டு, பெரும்பாலான ஊழியங்களும், ஊழியா்களும் அழைப்பின் ஊழியங்கள், விடுதலையின் ஊழியங்கள், ஆறுதலின் ஊழியங்கள் போன்று, பற்பல பெயர்கொண்டு பிழப்பை நடத்துகின்றனர். 
அவனவன் திறமையின்படி அவனவன் செயல்படுகிறான்.

அப்படிப்பட்டவா்களை அண்டி அவர்கள் நிழலில் ஒரு கூட்டம் வயிற்றைக் கழுவுகிறதினால் ஊக்கம் எல்லாம் ஆக்கமாகிறது. அவா்கள் காட்டில் பணமழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. நற்செய்திக் கூட்டங்கள் நாடக மேடையானதுடன், நடன மங்கையரால் அலங்கரிக்கப்படுகிறது.

இயேசுவை அறிந்த மக்களோ தான் யாரென்றும் தன் நிலை என்னவென்றும் தெரியாமல், இயேசு, விசுவாசம், இரட்சிப்பு, ஆவிக்குரிய வாழ்க்கை என்பதெல்லாம் இதோ இங்கே.! அதோ அங்கே.! என்று வண்டிகட்டி பறந்து வருகின்றனர். பம்பரமாக சுழலுகின்றனர்.
        நண்பா்களே நான் உங்களுக்கு
                                                                 சொல்லப்போவது என்னவெனில்,

இப்போதிருக்கிற விசுவாசிகள் பகட்டான ஊழியா்களை விட்டுவிட்டு பரிசுத்தமான  வேதாகமத்தை படியுங்கள். உங்கள் வாழ்வில் சோர்வுகள் நீங்கும். செழிப்பான மனிதனாய் மாறுவீா்கள்.

எப்படியெனில், வேத வசனத்தை தியாணிக்கையில் ஒவ்வொரு விசுவாசியும், தான் யார்? என்பதையும் தன்னைக் குறித்த தேவநோக்கம் என்பதையும் புரிந்து கொள்ளமுடியும் இப்படியாக நம்மைநாமே அறிந்தோமானால் நாம் ஒருபோதும் அசைக்கப்படமாட்டோம்.

உதாரணமாக வெளிப்படுத்துதல் 1 ம் அதிகாரம் 5 மற்றும் 6ம் வசனங்கள்

உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின்ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவிஇ தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

வேத வசனத்தை நாம் தியாணித்து நம்மைப்பற்றி நாம் அறிந்தோமானால்… நம்மில் யாரும் துக்கமுகமுள்ளவர்களாக வழிநடப்பதில்லை.

இந்த நாள் உங்களுக்கு இனிமையாய் அமையட்டும். கா்த்தா்தாமே உங்களை, ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?