உண்மையான காவலர்கள் நமது நண்பர்கள்
விழிப்பாயிருங்கள்..!
ஜாக்கிரதையாருங்கள்..!
எச்சரிக்கையாயிருங்கள்...!
----------------------------
கிறிஸ்தவர்கள், அல்லது தேவஊழியர்கள் என்ற அடையாளத்துடன் இணையதளத்தில் ஊடுருவி இருக்கிற சிலக்கள்ளர்கள், கிறிஸ்தவ சபை அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து ஆட்டம் போடுகின்றனர். அப்படியே ஆட்டய (Cheating) போடுகின்றனா்.
சபைக்கு எதிரானவர்களையும் அதிருப்தியாளர்களையும் தங்களுக்கு ஜால்றாக்களாக மாற்றிக் கொண்டு அவர்கள் மூலம் தங்களுக்கு ஒரு பரிசுத்த தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, தங்கள் குழுவில் உள்ளவர்கள் மூலமாகவே கிறிஸ்தவ சபைகளை வேவு பார்த்து வருகின்றனர்.
இப்படியான தங்கள் உளவு வேலை மூலம் பாஸ்டர்கள், மற்றும் வசதி படைத்த விசுவாசிகளின் பலம் மற்றும் பலவீனங்களைத் தெரிந்துகொண்டு, சிலருக்கு சில பலவீனங்களை ஏற்படுத்தின பின்பு தங்களுடன் உள்ள சில ரவுடிகளை போலீஸ் வேடத்தில் அனுப்பி பணம் பறித்து வருவதாக அறிகிறோம்.
தமிழகம் முழுவதும் முகநூல் நண்பா்களை உருவாக்கிக்கொண்ட இந்தக்குழு பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுமுன் யாருக்கும் சந்தேகம் வராதபடி தங்கள் குழுவில் உள்ளவர்களை ஓரிடத்தில் திரட்டுகிறார்கள். அந்தக் கூட்டத்தினரிடம் சிக்கிய அப்பாவிகளுக்கு இட்லியும் சிக்கன் குழம்பும் கொடுத்து சரிகட்டி அவர்களிடம் உள்ள தகவல்களை உருவுகிறார்கள். இலவசமாக கிடைத்ததை இஷ்டத்திற்கு தின்ற மயக்கத்தில் இருப்பவர்கள் உளறித்தள்ளும் செய்திகளை சேகரித்துக்கொள்ளும் முகநூல் கள்ள கிறிஸ்தவ தலைவர்கள் உற்சாகமாக வேட்டைக்கு கிளம்பி விடுகிறார்களாம்..!
இந்தக்குழுவினர் சேலம் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தளமான ஏற்காட்டில் கூடியதாகவும், அந்த மலையில் இருந்து இறங்கியவுடன் இந்தக் குழுவினா் நேரடியாகவும் சில இடங்களில் தங்கள் ஆட்களை ஏவியும், தமிழகத்திலும், அண்டை மாநிலங்களில் பலரிடமும் பணம் பறித்ததாகவும், கடந்த ஜூன் மாதம் 25 ந்தேதி சென்னையில் உள்ள ஒரு பாஸ்டரிடம் தங்கள் ஆட்களை காவல்துறையின் உளவுப்பிரிவு உயரதிகாரிகள் என்ற அறிமுகத்துடன் அனுப்பியபோது ஒரு பெண்ணும் அவர்களுடன் போனதாகவும் அவர்களை சர்ச்சுக்குள் அனுப்பிவிட்டு முகநூல் குழுவைச் சேர்ந்த சிலர் வெளியில் பதுங்கி காத்திருந்தார்களாம்.
உள்ளே சென்ற அவர்களை காவல்துறை கைது செய்தவுடன் வெளியில் நின்ற இவர்கள் ஓட்டமெடுத்தது மட்டுமல்ல, அவர்களுடன் அனுப்பிய அந்தப் பெண்ணை அந்த வழக்கில் சேர்த்து விடாதிருக்க மிகுந்த சிரமும், செலவும் செய்திருக்கிறார்கள்.? அந்தப் பெண் இந்தக் குழுவில் உள்ள ஒரு தலைவருக்கு உறவினர் எனப் பேசப்படுகிறது. அந்தப்“ பெண்ணை வழக்கில் இருந்து விடுவித்தபின் அந்த பெண்ணுடன் சில வாரங்களாக தலைமறைவாக இருந்துள்ளனர். இவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களையும் அனுப்பி மிரட்டுகிற அளவில் துனிகரம் கொண்டுள்ளது மிகந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்தக் குழுவில் நெருங்கிய தொடா்பில் இருந்த சிலர் ஆபத்தை அறிந்து ஒதுங்கிவிட்டதாக கேள்விப்பட்டேன். இந்தக் குழுவில் இருந்த மற்றும் இருக்கிற சிலரிடம் போனில் பேசினேன். அவர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்பது பேசும்போதே புரிந்தது அவர்கள் அநேகத் தகவல்களைச் சொன்னார்கள். அது அத்தனையும் அதிரச்சி ரகம்.
கைது செய்யப்பட்ட ஆட்கள் இப்போது ஜாமீனில் வந்துவிட்டதாகத் தகவல்.
அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் வழக்குக்காக செலவழித்த தொகையையும் முகநூல் நண்பர்களிடம் கேட்டு நச்சரிப்பதால் மீண்டும் ஒரு சுற்றுவர முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இந்த தடவை சென்னைக்கு அருகிலேயே கூடத் திட்டமிட்டு வருகிறதாகத் தெரிகிறது. அப்போதான் நிறைய பேர் கூடுவார்கள் என்ற திட்டமாம். மனைவி பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரும்படி அழைப்பு விடுக்கிறார்களாம். மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணமாக அவர்களில் சிலர் நாங்கள் எங்கள் மனைவிகளையும் கூட்டி வருகிறோம் என்கிறார்களாம். Cheating is Dangerous, Cheater's is man Killers.
எது எப்படி இருந்தாலும் எனக்கன்பானவர்களே விழிப்பாயிருங்கள்..! ஜாக்கிரதையாருங்கள்..! எச்சரிக்கையாயிருங்கள்...!
பின் குறிப்பு-
----------------
எவராவது உங்களைத் தொடர்பு கொண்டு போலீஸ், உளவுத் துறை, விசாரனை, சோதனை என்று எதையாவது சொன்னால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகவும்.
காவலர்கள் நமது நண்பர்கள்.
Comments
Post a Comment