புனைகதைகளை நாடி...,

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்றவுடன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு (சான்டா கிளாஸ்) அடுத்தபடியாக நினைவுக்கு வருவது பைன் அல்லது பிர் ஊசி இலை மரங்கள்தான். கட்டுக்கதைதான் என்றாலும் இந்த அறிவிப்பு சுவாரஸ்யமானது.

கிறிஸ்துமஸ் மரம் இயேசு பிறப்போடு தொடர்புடையது...??

மாட்டுத் தொழுவத்தில் பிறந்த குழந்தை இயேசுவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எல்லா உயிரினங்களும் பரிசு பொருட்களுடன் பெத்லஹேம் சென்றன..??!

ஆலிவ் மரம் பழங்களுடன் வந்தது.
பேரீச்சம் மரம் தனது பழங்களுடன் வந்தது. ஆனால்,

குழந்தை இயேசுவுக்கு கொடுப்பதற்கு ஊசி இலைகளை கொண்ட பிர் மரங்களிடம் எதுவுமே இல்லை. இதை பார்க்க தேவதைக்கு பாவமாக இருந்தது.

உடனே வானத்து நட்சத்திரங்களை பார்த்து, நீங்கள் பிர் மரத்தின் அழகான கிளைகளில் இருந்து அலங்கரியுங்கள்'' என்று கூறியது தேவதை. அதன்படி நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாக பிர் மரத்தை மொய்க்க ஆரம்பித்தன.

பிர் மரம் ஜொலிக்க தொடங்கியது. அதை பார்த்து குழந்தை இயேசு சிரித்து ஆசிர்வதித்தாராம்....?!



பரிசுத்த வேதாகமத்தில்.., 2 தீமோ 4 : 3. முதல் 5 வரை உள்ள வசனங்களில்..,

“மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள்.

உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள்.

நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு@ துன்பத்தை ஏற்றுக்கொள். நற்செய்தியாளனின் பணியை ஆற்று. உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.” என்ற ஆலோசனையை வாசிக்கிறோம்.. அதேநேரம்

அதை விசுவாசித்து அன்புடன் ஏற்றுக் கொள்கிறோமா?

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?