கிறிஸ்மசும், மரங்களும்..!

குளிர்காலம் தொடங்கும்போது, சூரியனுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும்...???! அந்த காலகட்டத்தில் 

சூரியன் விரைவில் குணமடைய வேண்டிய சில நாட்டு மக்கள் மூலிகைகளை வீட்டில் வைத்து வழிபட்டதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

முதன்முதலாக பைன் மரங்களை அலங்கரித்து வழிபட்ட பெருமை ஜெர்மனியர்களை சாரும் என்று கூறுகின்றனர். அவர்கள்தான் 19ம் நூற்றாண்டில் இந்த வழக்கத்தை அறிமுகப்படுத்தினர்.

இந்த பைன் மரங்கள் பின்னர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இடம்பெற்று விட்டது. இந்த மரத்தை பின்விளக்குகள், வண்ண வண்ண ரிப்பன்கள், ஸ்டார்கள், பரிசு பொருட்களால் அலங்கரிக்கின்றனர்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பொது இடங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்தனர். 1948ல் அட்லான்டா, நியூயார்க், அடிலெய்ட் போன்ற முக்கிய நகரங்களில் பிரமாண்ட பைன் மரங்கள் காட்சிக்கு வைத்தனர். அதன்பின் பல நாடுகள் இதை பின்பற்றின.

கடந்த 1923ம் ஆண்டில் இருந்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், தேசிய கிறிஸ்துமஸ் மரம் ஆண்டுதோறும் புதிதாக வைக்கப்படுகிறது. ஆனால்,

கால மாற்றத்தால் இயற்கையான பைன் மரங்களுக்கு பதில் செயற்கை மரங்கள் இன்று பல வீடுகளை ஆக்கிரமிக்க தொடங்கி விட்டன.




இதை படிக்கின்ற சகோதர சகோதரிகளே..! இந்தக் கடைசி காலங்களிலே தங்களைக் கிறிஸ்தவா்கள் எனச் சொல்லிக் கொள்ளும் ஒரு பெரும் கூட்ட மக்கள்..,

ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு.
சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். என்ற 2தீமோத்தேயு 4 ம் அதிகாரம் 3முதல் 5 வரையுள்ள வசனங்களின்படியான எச்சாிப்பை அறிந்து..,

நீங்களோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிருங்கள், தீங்கே வந்தாலும் அனுபவியுங்கள், சுவிசேஷ வேலையைச் செய்யுங்கள், ஊழியத்தை நிறைவேற்றுங்கள். கா்த்தருடைய கிருபை உங்களோடிருப்பதாக.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?