“தாலத்தில் வைக்கப்படும் என் தலை”

என் நண்பா்களே இன்றிருக்கும் அநேகரில் குறிப்பாக ஊழியர்களுக்கு மத்தியில் நான் எதில் வித்தியாசப்படுகிறேன்? என்பதை இரண்டே வரிகளில் சொல்லிவிட விரும்புகிறேன். 

அதாவது.., இன்றைய ஊழியா்கள்.

கிறிஸ்துவுக்காக, “சாவதற்கும் ஆயத்தமாயிராமல் சீரோடும் சிறப்போடும் எப்படியாகிலும் இவ்வுலகில் செல்வசெழிப்போடு வாழ்ந்துவிட அவசவசரமாக வாழ்கிறார்கள் என்பதைவிட அலைகிறார்கள்”

நானோ, “தேவனோடு நித்தியமாக வாழ வேண்டுமென்பதற்காகவே சாவதற்கும் ஆயத்தமாக சத்தியத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறேன்”.மேலும்,

ஆவியானவா் எனக்குள் இருப்பதால்.., பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்த தூண்டப்படுகிறேன். எனவே சிலருடைய தவறுகளை தைரியமாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி வருகிறேன்.

நம்முடைய செயல்பாடுகள் சிலருக்கும் இந்த சிலருடைய அடிவருடிகள் பலருக்கும் சங்கடமாக இருந்ததையும் அதனால் பலா் பல விதங்களில் என்னுடன் மோதியதையும் பின்னா் என்னை தடை (Block) செய்துவிட்டு ஓடினதையும்தான் என் அனுபவத்தில் பலதடவை பார்த்திருக்கிறேன்.

சிலா் வேறுவிதமாக செயல்பட்டதுண்டு. 

ஒருநாள் இரவு 11 மணிக்குப்பின்பு என்னைத் தன்னுடைய தொலைபேசியில் தொடா்புகொண்ட பிரபலமான ஊழியக்காரன் என்று அறியப்பட்ட ஒருவன் பேசிய ஆபாசப் பேச்சுக்களை இதுவரை எந்த ஒரு துன்மார்க்கமான மனிதன்கூட பேசியிருக்கமாட்டான்.

நம்முடைய சில நடவடிக்கைகளின் நிமித்தம் அதே மனிதன் அடுத்த 12 மணி நேரத்தில் மன்னிப்புக் கேட்டதை ஆண்டவரும், நானும், அவனும் அறிவோம்.இன்றைய ஊழியா்களில் அநேகா் அவையில் மட்டும்தான் மரியாதைக்குரியவா்கள். 

அந்தரங்கத்தில்...., திரும்ப எழுதுகிறேன். அந்தரங்கத்தில் இவா்கள் மிகவும்,மிகவும் கேவலமானவா்களும் அசிங்கமானவா்களுமே..!

இதுவரை மேலோட்டமான செய்திகளை மட்டுமே இணையத்தில் எழுதி வந்தேன் வருகிறேன். 

இப்படிப்பட்ட எழுத்துக்ளுக்கே சிலா் சிலு சிலுவென சிணுங்கி வருகிறார்கள். இப்படி சிணுங்குகிறவா்கள் ஒருநாளும் சிந்திக்கவே தெரியாத மனநிலை பாதிக்கப்பட்டவா்களென்று அசட்டை பண்ணுகிறேனே ஒழிய இதற்கெல்லாம்நான் சிதறிவிட மாட்டேன்.

என்நிலை எனக்குத் தெரியும்..! அதாவது, 

காமக்கிறுக்குப் பிடித்த ஏரோது போன்றவா்களால் அவ்வப்போது  தாலத்தில் வைக்கப்படும் என் தலை..! 

எவளோ ஒரு வேசிக்குத்தானே பரிசாகக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது..! 

இது தேவ ஊழியா்களில் சிலருக்கு கிடைத்த பாக்கியம் அல்லவா?

இப்படிப்பட்ட 
தேவஊழியர்களின் வரிசையில் நிற்கவே தினம்தினம் ஆசைப்படுகிறேன்.வேசிக்கள்ளா்களின் வாசற்படிகளில் அல்ல..!




இணையத்தில் மட்டுமே இயங்குகிற சிலா் தங்களுக்கென  சில ஏமாளிகளையும், தங்களைப்போன்றே தளம் இல்லாத சில செல்லாதவா்களையும் தங்களுடன் சோ்த்துக்கொண்டு  நம்மை எதிர்க்க முயற்சிக்கிறார்களாம். 

ஒருவேளை இப்படி எதையாவது எழுதினாலாவது தங்களுக்குப் பேர், புகழ் மற்றும், பணம், காசு கிடைத்துவிடாதா? என்ற ஏக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்.

பேஸ்புக் பாஸ்டராக அரிதாரம் பூசி, அட்டகாசம் செய்து, மணி (Bell) கட்டும் கட்டுக்கதையில் கூட எலியாக வேடமிட்ட ...........ராஜ் போன்றவா்கள் எனக்கெதிராக படைதிரட்டும் முயற்சியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து பரிதாபப்பட்டாலும், 

பேஸ்புக் வழக்கப்படி இவருக்கும், காசு கொண்டு இவரை இயக்கும் மின்சாரத்திற்கும் என் மனந்திறந்த பாராட்டுக்கள்.

                                  இப்படிக்கு,
                        கிறிஸ்துவின் பணியில்
            பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?