"தேவனுக்கே மகிமை" உண்டாகட்டும்.

கர்த்தருடைய பெரிதான கிருபையால்...,

சென்னை ஆவடி ACA சபையில் இருந்த என்னை கர்த்தர் தம்முடைய ஊழியத்திற்காக அழைத்தார். அவர் கொடுத்த வெளிப்பாட்டின்படி, இந்த கள்ளிகுளம் என்ற சிறிய கிராமத்தில் தேவனுடைய வேலையை செய்ய தேவனுக்குக் கீழ்ப்படிந்தேன். அதை என்னுடைய ஆவிக்குரிய தகப்பனார் பாஸ்டர் தாமஸ்ராஜ் அவர்களிடம் பரிமாறிக் கொண்டபோது அவர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, சில ஆலோசனைகளை அளித்து தன்னுடைய ஊழியப் பாதையின் அனுபவங்களை சொல்லி எனக்காக ஜெபித்து என்னை அனுப்பி வைத்தார்கள். நான் இன்று ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதற்கு ஐயா அவர்களின் ஜெபமும் ஒரு காரணம்.
 
அங்கிருந்து வந்து கள்ளிகுளத்தில் ஊழியத்தை துவங்கியபின் மாரநாதா பத்திரிக்கை ஆசிரியரும் மாரநாதா பெண்கள் வேதாகம கல்லூரியின் முதல்வருமான பாஸ்டர் ஜோசப்பால் ஐயா அவர்களிடம் உதவி போதகராக இருந்தேன். கள்ளிகுளம் என்ற சிறிய கிராமத்தில் கர்த்தருடைய ஊழியத்தை துவங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கர்த்தர் கள்ளிகுளம் ஊழியத்தை அபரிதமாக ஆசீர்வதித்திருக்கிறார். இன்றும் அந்த இரண்டு மூத்த தேவ ஊழியர்களுடனும் ஐக்கியமாகவும் ஊழியத்தில் பங்கு கொண்டும் வருகிறேன். என்னை எல்லா நேரங்களிலும் நேசித்து எனக்காக ஜெபிக்கிற இவர்களுக்காக தேவனை துதிக்கிறேன்.

கள்ளிகுளம் எழுப்புதல் திருச்சபையை சாட்சி மிகுந்த சபையாக நடத்தி வர கர்த்தர் உதவினார். இதை அநேகர் அறிவார்கள். இங்கு வந்து சென்ற ஏராளமான இணைய நண்பர்களுக்கும் இந்த ஊழியத்தை குறித்து நன்குத் தெரியும்.

சில ஆண்டுகளுக்கு முன் WRM (World Revival Mission) என்ற ஊழியத்தை  நம்முடைய ஊழியத்தின் மற்றொரு பகுதியாக மாபெரும் தரிசனத்தோடு ஆரம்பித்தோம். இந்த ஊழியத்தின் நோக்கம்
The Christian Awareness என்பதாகும்.

நாம் கிறிஸ்தவர்களுக்குள் விழிப்புணர்வை உண்டு பண்ணும் நோக்கத்துடன் செய்படத் துவங்கியபோது நம்முடன் ஏராளமான ஊழியர்கள் இணைந்தனர். மிக ஆச்சர்யமான முறைகளில் கர்த்தர் எங்களை  அதாவது குழுவினரை பயண்படுத்தி வருகிறார். இப்பவும் ஆங்காங்கே பல்வேறு கூட்டங்களை நடத்திவருகிறோம். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 4 க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்களை நடத்திட கர்த்தர் உதவினார். அனைத்துக் கூட்டங்களும் மிக ஆசீர்வதமாக இருந்தது கலந்து கொண்ட மக்களுக்கு பயணுள்ளதாக இருந்ததை அறிந்தோம்.
நவம்பர் மாதத்திலும்..,

நேற்று 24-11-2013 அன்று துத்துக்குடியில் தேவசெய்தியை பகிர்ந்து கொண்டேன். இதற்கு உதவியாய் இருந்த நண்பர்களுக்காக தேவனை துதிக்கிறேன்.


குறிப்பாக WRM குழுவினரை அன்புடன் வரவேற்ற Gems ஊழியத்தின் தூத்துக்குடி பொறுப்பாளரும் எங்கள் குடும்ப நண்பருமான ஆசிரியர் மாணிக்கராஜ் அண்ணன் அவர்களுக்காகவும், அவருடைய குடும்பத்தாருக்காகவும் எங்கள் அத்துணை பேர்களுக்கான உணவையும்  ஆயத்தம்செய்து, வரவேற்று உபசரித்த Shunmugam Veerakkutty அண்ணனுக்காகவும்  கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன்..
"தேவனுக்கே மகிமை" உண்டாகட்டும். 

எங்களுக்காக எங்களைக் கொண்டு கர்த்தர் செய்யும் ஊழியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். எங்களை நீங்கள் தொடர்பு கொள்ள 

revivo2002@gmail.com மற்றும் immanuel580@gmail.com என்ற மின்னஞ்சல்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.தொலைபேசி எண்  +91 93606 77580 லும்  தொடர்பு கொள்ளலாம். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?