"விடுதலை கொடுக்க நம் கர்த்தர் வல்லவர் விடுவிப்பார்"

யோவா 5: 5...10

முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஓரு மனுஷன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.

அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.

இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான்.

அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது. . ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த வியாதியஸ்தனான மனிதன் வெகுகால சுகவீனத்தில் பழகிப் போயிருருந்தவனான போதிலும் அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்றிருந்தான்.

தான் விடுவிக்கப்பட வேண்டுமென்ற அவனுள் உள்ள எண்ணத்தை அவன் விண்ணப்பமாய் வேண்டுதலாக மத்துவர்கள் போன்ற பலரிடம் அவன் சொல்லி வந்திருக்கக் கூடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். என்றாலும் அவன் வெறுப்படைந்தவனாக இல்லாமல் இருந்டதான் என்றே சொல்லுவேன். அதனால்தான்

இயேசுகிறிஸ்து அவனிடம் கேட்டபொழுது உடனே சொன்னான் உற்சாகமாய் சொன்னான். ஆண்டவரே தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.

அந்த வார்த்தையில் இருக்கிற ஆர்வத்தை கவனியுங்கள். அவசரத்தை கவனியுங்கள் தான் விடுவிக்கப்பட்டுவிட வேண்டுமென்ற விடாமுயற்சியை கவனியுங்கள். அவன் சுகம் பெற்றான்.

இன்றும் நம்மிடம் தொடர்புள்ள சிலர் இப்படி 38 வருட வியாதிக்காரனைப் போல இல்லாமல் இருக்கலாம். "கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்" என்று அறிவுரையை அவர்களுக்கு சொல்லிக்கொடுப்போம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 


விடுவிக்கப்பட வேண்டுமென்ற விருப்பமுடையவர்களாக கர்த்தரிடம் கேட்பவர்களுக்கு விடுதலை கொடுக்க நம் கர்த்தர் வல்லவர் விடுவிப்பார்..ஆமென்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?