தேவனோடு சஞ்சரிக்கிறவர்களாக….,



நோவா என்றால்.. , இளைப்பாறுதல் என்று அர்த்தம்.

பரிசுத்த வேதாகமம் கூறும் நோவாவுடைய காலம் கி.மு 4000 வருடங்கள் என்பதை, கல்தேய பட்டணம் இருந்த ஊர் என்கிற பகுதியில், 1930-ம் வருடத்தில் சர் லியோனார்ட் வொல்லி (Sir Leonard Wolly ) என்பவரது தலைமையில் அமைந்த குழு அகழ்வாராய்ச்சியின் வாயிலாக  கண்டுபிடித்து உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

பரிசுத்த வேதாகமம் நோவாவைக்குறித்து,
நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் என்று விவலியம் அழகாக எடுத்துரைக்கிறது.

தேவனால் வாழ்த்தப்பெற்றவன் நோவா. தொடர்ந்து.., நோவா தேவனால் அழிவில் இருந்து காப்பாற்றவும் பட்டான். இப்படிப்பட்ட நோவா ஒருநாள்.., கர்த்தர் தனக்கு தந்தருளின பிள்ளைகளில் ஒருவனாகிய கானான் என அடையாளம் காணப்பட்ட காமை சபித்தானாம்..!  திகைப்படைந்தேன்.  

என்ன காரணம்?
என்ன காரணம்? என்று மாம்சத்திலே அல்ல.., ஆவியிலே ஆராய வேண்டும்.
மாம்சத்திலே யோசிப்பவர்கள் மாம்சத்திற்கேற்றபடி சிந்திப்பார்கள். ஆவிக்குரியவர்களோ ஆவிக்கேற்றபடி சிந்திப்பார்கள். ஆவிக்குரிய கிறிஸ்வன் எந்த ஒன்றையும்  தேவஆவியினால் அருளப்பட்ட வேதத்தைக் கொண்டே அனைத்தையும் நிதாணிப்பான். பிரியமானவர்களே…, நாம் எப்படி நிதாணிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். பரிசுத்த வேதாகமம் பின் வருமாறு கூறுகிறது.

பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது. பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார். இதோ அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். அதேநேரம்…, நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். என்று நோவாவைக் குறித்து பரிசுத்த வேதாகமம் அழகாக அறிமுகப்படுத்துகிறது

நோவா தேவனுடைய பார்வையில் நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். எனவே அவன் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். தேவனொடு சஞ்சரிக்கிற அனுபவமுள்ள நோவா…, தன்னுடைய பிள்ளைகளையும் தன்னைப்போல தேவனுக்கு பயப்படுகிறவர்களாகவே வளர்த்திருந்தான்.
நோவா வாழ்ந்த அதே நாட்களில் அவனுக்கருகில் வாழ்ந்த அன்றைய மக்கள் உறவு சம்பந்தமான காரியங்களிலே.. யார்? யாருடன்? என்பது போன்ற வரைமுறை இல்லாமல்.. துனிகரமாக நடந்து கொண்டார்கள். ஆதாமுக்குப் பின்பு, நோவாவிற்கு முன்புவரை, எவ்வித வரைமுறைகளும் இருந்தது இல்லை. அவர்கள் நோக்கமெல்லாம் பலுகிப் பெருக வேண்டும் என்பது மாத்திரமே..

காயீனுடையதைப் போன்ற குணம் படைத்த இராட்சதர்களும்.., ஆபேலுடையதைப் போன்ற குணம் படைத்த தேவபுத்திரர்களும் கூட தங்களுக்குள் வித்தியாசத்தை உணர்ந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல்…, விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் சம்பந்தம் ஏது? என்று உணராமல்.., விசுவாசிகளும் அவிசுவாசிகளும் பேதமின்றி தங்களுக்குள் பெண்கொண்டு, கொடுத்து, எடுத்து ஒருவருக்கொருவர் கலந்து, பாவத்தில் கரைந்தே போனார்கள். இதைத்தவிர வேறு எந்த அக்கிரமும் இவர்கள் நடுவில் இருக்க வாய்ப்பு இல்லை.

நோவாவும் அவனுடைய பிள்ளைகளுமோ, அவர்கள் இருதயத்திற்க்குள் வைக்கப்பட்டிருந்த நியாயப்பிரமானத்தை உணர்ந்து வாழ்ந்தார்கள். அதாவதுகுற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும் நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பித்தார்கள். அவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யவில்லை. நோவாவும் அவனுடைய குமாரரும் தங்களுக்குள் ஒரு மனைவி மட்டுமே உடைய புருஷர்களாக நடந்து கொண்டார்கள். நோவாவின் பிள்ளைகளாகிய இவர்கள் தேவனோடு சஞ்சரிக்கிற தங்களுடைய தகப்பனுடைய ஆலோசனையைக் கேட்டார்கள். அவர்களுடைய மனைவிகளும் அப்படியே மாமனாருக்கும் மாமிக்கும் பயந்தவர்களாக இருந்தார்கள்.

எனவேதான்.. கர்த்தர்:- நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் மனைவியும் உன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசியுங்கள். என்றார். நமக்கெல்லாம் தெரிந்திருக்கிறபடி பேழைக்குட்பட்ட நோவாவும் அவன் மனைவி மற்றும் காம் அவனுடைய மனைவி அத்துடன் சேம் அவனுடைய மனைவி இவர்களுடன் யாப்பேத் அவனுடைய மனைவி என எட்டுப் பேர் மாத்திரம் கர்த்தரால் காப்பாற்றப்பட்டார்கள்.

நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு பின்னிட்டு வந்து தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்.

அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால் தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து கானான் சபிக்கப்பட்டவன் தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.

சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார் அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான் கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றார்ஆதி 9 : 20….27

இதை வாசிக்கிற உங்களுக்கு தேவனோடு சஞ்சரிக்கிற அனுபவமுள்ள தேவமனிதன் நோவா, தன்னுடன் காப்பாற்றப்பட்ட தனது மகனாகிய காமை சபித்த காரணம் புரிகிறதா? வேதம் தெளிவாய் காரணத்தை சொல்லியிருந்தும் சிலர் புரியாதபடி விளக்கமளிக்கிறார்கள். அல்லது, புரிந்தும் தேவனுக்கு பயப்படாமல் பிசாசின் ஆவியினால் நிறைந்து அவதூறு செய்கிறார்கள்.

நோவா பயிரிடுகிறவனாகி திராட்சத்தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து வெறிகொண்டு வழிகளில் அல்ல.., தன்னுடைய கூடாரத்தில் படுத்திருந்தான். இங்கே ஒரு கேள்வி எழும் அப்படியானால் குடித்துவிட்டு வீட்டுக்குள் படுப்பது தவறில்லையா? குடிப்பது, வெறிகொள்வது பாவம்தான். என்று வேதாகமம் சொல்லுகிறதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.

நோவாவோ தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். என்பது மட்டுமே இங்கே கவனிக்கப்பட வேண்டிய செய்தி. ஒருவேளை மற்றவர்கள் குடித்துவிட்டு நிர்வானமாக பொது இடத்தில் படுக்கக் கூடியவர்களாக இருந்திருக்கக் கூடும். நோவாவின் வஸ்திரங்கள் விலகியிருந்தது.

அவனுடைய பிள்ளைகள் சேமும் யாப்பேத்துமோ தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. அப்படியானால்.. கர்த்தராகிய தேவன் நமக்கு இங்கு சொல்லவருகிற செய்தி என்ன? ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய நிர்வானத்தைப் பார்ப்பதே பாவம்என்பதுதானே…!? இதை, நோவா தன் பிள்ளைகளுக்கு கற்பித்திருந்தான். அதை காம் மறந்தான். அல்லது மீறினான்.
காம் செய்த தவறு என்ன
 
  1. தன் தகப்பனாகிய நோவாவின் கூடாரத்திற்குள் அனுமதியில்லாமல் நுழைந்தது. 
  2. தன் தகப்பன் நிர்வாணத்தைப் பார்த்தது. 
  3. பார்த்தவுடன்பதறி, அவருடையநிர்வானத்தைமூடிப்போடாமல்.., வெளியில்சென்று, தங்களுடையசகோதரருக்குஅறிவித்தது.

காம் அந்த செய்தியை தன் சகோரருக்கு முன் கேலியாகவே சொல்லியிருக்கக் கூடும். அதை..., அவர்கள் கேள்விப்பட்டவுடன்தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் பார்க்க துணியவில்லை.

நோவா தன் மகனாகிய காமை சபித்தான் என்ற செய்தியிலிருந்து
நோவா தேவனுடன் சஞ்சரிக்கிறவனாக காணப்பட்டான்.
நோவா தேவனுக்கு முன்பாகவும் மனிதருக்கு முன்பாகவும் ஊழியக்காரனாக காணப்பட்டான்.
அவன் தன் பிள்ளைகளை நன்றாக வளர்க்க அறிந்திருந்தான்.
தானும் தன் பிள்ளைகளும் மருமக்களும் அவிசுவாசிகளோடு ஐக்கியமுள்ளவர்களாக இருப்பதை நோவா விரும்பவில்லை.
தவறு செய்தவன் தன் மகனாகவே இருந்தபோதும் கண்டிக்கவும் தண்டிக்கவும் நோவா தயங்கவே இல்லை.
அவன் தேவனுடைய மனுஷனானபடியினாலே அவனுடைய வார்த்தையை கர்த்தர் கனப்படுத்தினார். சாபம் காமுடைய சந்ததியாகிய கானான் வம்சத்தாரையும் தொடர்ந்தது.
எல்லாவற்றையும் விட முக்கியமாக:- ஆதாமுக்குப் பின்பு நோவாவிற்கு முன்புவரை எவ்வித வரைமுறைமைகளும் இல்லை.
நோவாவிற்குப் பின்புதான் முறைப்படியான சந்ததி பெருகினது. அதற்கு முன்புவரை எவ்வித வரைமுறைகளும் இன்றி ஜனசந்ததி பெருகிற்று. நோவாவிற்குப் பின்புதான் அண்ணன் தம்பி சகோரதரன் சகோதரி அண்ணன் மனைவி சகோதரன் மனைவி என்ற மரியாதையும் முறைமைகளும் சரியாய் கடைபிடிக்கப்பட்டது.
பிரியமானவர்களே,
நாம் உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் தேவனோடு சஞ்சரிக்கிறவர்களாகக் காணப்படுவோம்.  
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?