மோசே வேறு..! மூஸா வேறு...!

போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம்..!

பரிசுத்த வேதாகமம் கூறும் மோசே வேறு..!
குர்ஆன் கூறும் மூஸா வேறு...!

பரிசுத்த வேதாகமம் மற்றும் குர் ஆனில் உள்ள வித்தியாசத்தைப்பாருங்கள் உண்மைப் புரியும். வித்தியாசங்களை வரிசைப்படுத்த அன்புடன் அழைக்கிறோம்.
 
யாத் 3; 2....6 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.

அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.

அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

அப்பொழுது அவர் இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.

பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.

இது 3500 ஆண்டுகளுக்கு முன் வந்த பரிசுத்த வேதாகமத்திலுள்ள செய்தி. இதை கதையாகக் கேட்ட ஒரு அரபி குரூப்பு 700 வருஷங்களுக்குப்பின்னாடி
ஒரு தம்பிய ("ஸைத் இப்னு ஸாபித்") வச்சு எழுதுன குர்-ஆன் ல்..,

குர்-ஆன் 20: 10...13 ல அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ; அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பினால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்” என்று அவர் அருகே வந்த போது “மூஸாவே!” என்று அழைக்கப் பட்டார்.

“நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். இன்னும் “நாம் உம்மைத் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீரா?
 
பரிசுத்த வேதாகமம்,  குர்ஆன்..,
இரண்டுக்குமிடையிலேயான வித்தியாசத்தை உணர்ந்து போலித் தனமான மத சூழ்ச்சியிலிருந்து உங்களை தப்புவித்துக் கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?