கிறிஸ்துவுக்குப் பின் சுமார் 700 ஆண்டுகளுக்குப் பின்...,
- Get link
- X
- Other Apps
பரிசுத்த வேதாகமம் மற்றும் குர் ஆனில் உள்ள வித்தியாசங்களை வரிசைப்படுத்த அன்புடன் அழைக்கிறோம்.
மத்தேயு 24:31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது
தூதர்களை அனுப்புவார் அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின்
ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து
கூட்டிச்சேர்ப்பார்கள்.
மத்தேயு 25; 32. 33 ல் அப்பொழுது சகல
ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன்
செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை
அவர் பிரித்து செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும் வெள்ளாடுகளைத் தமது
இடது பக்கத்திலும் நிறுத்துவார்.
வெளி 20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக
நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும்
வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில்
எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக
நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
இந்த செய்தியை கிறிஸ்துவுக்குப் பின்
சுமார் 700 ஆண்டுகளுக்குப் பின் (மக்கா நகர குறைஷிகளிடையே) தோன்றிய ஒரு
குழுவினர் இவ்வசனங்களை பதிவிறக்கம் செய்து அதில் சிற்சில மாற்றங்களை
ஏற்படுத்தினர். அந்த மாற்றம் எப்படி இருக்கிறதென்று? பாருங்கள்.
"இறுதித் தீர்ப்புக்கான வேளை வந்து வாய்க்கும் நாளில் பொய்யர்கள்
நஷ்டமடைவார்கள். ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க நீர் காண்பீர்
ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும் அன்று
நீங்கள் செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள். “இது
உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம் நிச்சயமாக நாம் நீங்கள்
செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” குர் ஆன் 45:27, 28, 29
இவ்விரண்டிலுமுள்ள செய்தியின் வித்தியாசங்களை வரிசைப்படுத்த முன்வருபவர்களை அன்புடன் அழைக்கிறோம்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment