முகம்மது அவர்கள் செய்யாததை செய்த புத்திசாலி இளைஞர் "ஸைத் இப்னு ஸாபித்"

குர்-ஆனை தொகுத்து எழுதி புத்தகமாக்கியவர்
"ஸைத் இப்னு ஸாபித்" அவர்கள்.
------------------------------------------------

குர்-ஆன் பற்றிய கீழ்கண்ட கதை உண்மையாகவே இருந்தால் பலத்த சந்தேகத்திற்குரியது.

யமாமா போர் நடைபெற்ற பின் அபூ-பக்ர்  எனக்கு ஆளனுப்பி உமர் அவர்கள் என்னிடம் வந்து....    குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு விட்டார்கள்.  அதனால்  குர்-ஆனை நீங்கள் திரட்டினால் தவிர அதன் பெரும் பகுதி  போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். 

தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள்.

நான் 'இறைத்தூதர் அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். 

அதற்கு உமர் அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! இது  நன்மைதான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும்வரை இது விஷயத்தில் அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

உமர் அவர்கள் கருதியதை  நானும்  கண்டேன்.  உமர் பேசாமல் அபூ பக்ர் அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். அபூ-பக்ர்  'நீங்கள் புத்திசாலியான இளைஞர் உங்களை  நாங்கள் சந்தேகப்படமாட்டோம். 
நீங்கள் இறைத்தூதர்  அவர்களுக்காக வஹி எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. 

நான் நபி அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்  'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மைதான்' என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தேன்.

முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான்.  எனவே நான் எழுந்து சென்று குர்ஆன் தேடினேன். 

அவற்றை துண்டுக் தோல்கள் அகலமான எலும்புகள் போரிச்சமட்டைகள் மற்றும் மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். 

'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் கிடைக்கவில்லை.

திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் அபூ பக்ர் அவர்களிடம் அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பின்னர். 

உமர் அவர்களிடம் அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா அவர்களிடம் இருந்தது.

இப்ராஹீம் இப்னு ஸஅத் அவர்களின் ஓர் அறிவிப்பில் ' 'குஸைமா அல்லது 'அபூ குஸைமா' அவர்களிடம் இருந்தன' என சந்தேகத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

 என்று, குர்-ஆனை தொகுத்து எழுதி புத்தகமாக்கிய "ஸைத் இப்னு ஸாபித் அவர்கள் அவித்தார்கள் - இதை புகாரி ஹதீஸ் 4679 -ல் காணக் கிடைக்கப் பெற்றோம்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?